Celebrity Life

கைலாசாவில் இந்த நடிகையுடன் சேர்ந்து செட்டிலாக ஆசை… நடிகர் ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்!

Swathi Subramanian  |  Jan 12, 2020
கைலாசாவில் இந்த நடிகையுடன் சேர்ந்து செட்டிலாக ஆசை… நடிகர் ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்!

கைலாசாவில் பிரபல நடிகையுடன் சேர்ந்து செட்டிலாக ஆசைப்படுவதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். 

இவர் சிந்து சமவெளி , அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தமாமா , பொறியாளன் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். ஒயில்டு கார்டு மூலம் வந்து பலரின் மனதை கொள்ளையடித்த இவருக்கு ஏரளமான இளம் ரசிகர்களும் உள்ளனர். 

twitter

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர்  “பியார் பிரேமா காதல்” படத்தில் நடித்தார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ரைசா வில்சன் கதாநாயகியாக நடித்திருந்தார்.  

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு ஹரிஷ் கல்யாண் நடித்த தனுசு ராசி நேயர்களே படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தார் ரைசா. படத்தில் அவர்களுக்கு இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்தது. 

மேலும் படிக்க – ஜயேஷ்பாய் ஜோர்தார் படம் வெளியானால் நல்ல நடிகையாக வெளிப்படுவேன் : ஷாலினி பாண்டே நம்பிக்கை!

இதனையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது. ஆனால் நிஜத்தில் இருவரும் நல்ல நண்பர்களாக உள்ளனர். ரைசா, ஹரிஷ் ஜோடி சூப்பர் என்று ரசிகர்கள் கூறி வரும் நிலையில் சமீபத்தில் ரைசா ஒரு ட்வீட் போட்டுள்ளார். 

அதில் ஹரீஷ் கல்யாணுடன்  டேட்டிங் செல்ல ஆசை என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் தமிழகத்தை மகிழ்ச்சிபடுத்த நான் ஹரிஷ் கல்யாணை டேட் செய்ய தொடங்க வேண்டும் என்றும் வெளிப்படையாக கூறியிருந்தார். 

twitter

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களுடன் கமெண்ட்ஸ் செய்திருந்தனர். இதனை எல்லாம் கண்டுகொள்ளாத ஹரிஷ் கல்யாண், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார்.

ரொமான்டிக் த்ரில்லரான ‘இன்ஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’  திரைப்படம் ஹிட் ஆனது. தற்போது பல படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க – பிக்பாஸ் அபிராமி எடுத்த புதிய அவதாரம்…. முக்கிய பிரபலத்துடன் வெப் சீரிஸில் கூட்டணி!

கடந்த 2016ம் ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான படம் பெல்லிசூப்லு. இந்த படம் வேற லெவலுக்கு ஹிட் அடித்தது. இதனை கௌதம் வாசுதேவ் வாங்கி ரீமேக் செய்து வரும் நிலையில் இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

அதில் விஷ்ணு விஷாலும், சமந்தாவும் நடிக்க இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவாணி சங்கர் நடிக்கின்றனர்.  அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்க உள்ள இந்த படத்தின் படப்பிடுப்பு காட்சிகள் தொடங்கியுள்ளது. 

இதனிடையே ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தற்போது ‘தாராள பிரபு’ திரைப்படம் உருவாகியுள்ளது. ஆயுஷ்மான் குரானா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற ‘விக்கி டோனர்’ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. 

ரொமான்டிக் காமெடி வகையை சேர்ந்த இந்த படம், விந்து தானம் மற்றும் குழந்தையின்மை ஆகியவற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.  3 தேசிய விருதுகள் உள்பட ஏராளமான விருதுகளையும் பெற்ற இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க உள்ளதால் எதிர்பார்ப்புகள் பலமாக உள்ளது. 

தான்யா ஹோப் நாயகியாக நடிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அனிருத் வெளியிட்டுள்ளார். இதில் தாமரை மலரில் நின்று 5 குழந்தைகளுடன் காட்சியளிக்கும் ஹரிஷ் கல்யாண் குழந்தைகளை தானமாக வழங்குவது போல் அமைந்துள்ளது. 

 

twitter

பல்வேறு படங்களில் ஒப்பந்தமாக பிசியாக இருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நடத்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவரை சந்தித்த செய்தியாளர்கள், கைலாசாவில் செட்டிலாக வாய்ப்பு கிடைத்தால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள்? என கேட்டுள்ளனர்.

அதற்கு ஹரிஷ் கல்யாண், ராஷ்மிகா என்று கூறியுள்ளார். மேலும் அவர் தான் க்யூட் என்றும் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு நடிகையான ரஷ்மிகா மந்தண்ணாவிற்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாணும் அவருக்கு ரசிகர் என்பது தெரியவந்துள்ளது. 

மேலும் படிக்க – அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Celebrity Life