Home & Garden

அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள் ஈஸியாக செய்யலாம்!

Swathi Subramanian  |  Aug 2, 2019
அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள் ஈஸியாக செய்யலாம்!

தமிழ் மாதத்தில் ஆடி மாதம் மிகவும் விசேஷமானது என அனைவரும் அறிந்ததே. அதே சமயம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. ஆடி செவ்வாய் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்பு வாய்ந்த நாட்கள் ஆகும். இத்தகைய நாட்களில் பலகாரங்கள் (recipes) செய்து சாமிக்கு படையலிட்டு வழிபாட்டால் நள்ளதே நடக்கும். அத்தகைய பலகாரங்களை எப்படி செய்யலாம் என இங்கு காண்போம். 

youtube

தேங்காய் பாயசம்

தேவையானவை : 

தேங்காய் – 1 கப்,
மண்டை வெல்லம் – தேவையான அளவு, 
பச்சரிசி – 1 கப், 
ஏலக்காய் தூள் – 1 டேபிள் ஸ்பூன், 
முந்திரி, உலர் திராட்சை – தேவையான அளவு, 
நெய் – தேவையான அளவு.

செய்முறை : 

முதலில் பச்சரிசியை நன்கு கழுவி ஊற வைக்க வேண்டும். ஊறிய பின்னர் அதனை, தேங்காய் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளுங்கள். மண்டை வெல்லத்தை தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி வெல்ல கரைசல் நீரை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில் நீரை கொதிக்க வைத்து அரிசி, தேங்காய் சேர்ந்த கலவையை அதில் ஊற்ற வேண்டும். அதனுடன் வெல்ல கரைசலை மிக்ஸ் செய்ய வேண்டும். இதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சையை மேலே தூவ வேண்டும். 

youtube

நெய் அப்பம்

தேவையானவை : 

வாழைப்பழம் – 2, 
வெல்லம்  – ஒரு கப்,
அரிசி மாவு – 1 கப்,
தேங்காய்த் துருவல் – 1 கப், 
ஏலக்காய்த்தூள் – சிறிதளவு,
நெய் – தேவையான அளவு. 

செய்முறை : 

முதலில் இரண்டு தேங்காய்த் துருவல், வாழைப்பழங்களை  துண்டு துண்டாக நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு வாணலில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வெல்லத்தை சேர்த்து வெல்ல பாகு தயார் செய்து வைத்து கொள்ளுங்கள். ஒரு பௌலில் அரைத்து வைத்த வாழைப்பழ கலவை, வெல்ல பாகை சேர்த்து கலக்கவும். அதனுடன் ஏலக்காய்த்தூள், அரிசி மாவு சேர்த்து ஒன்றாக மிக்ஸ் பண்ணுங்கள். மாவு பதத்திற்கு வந்தவுடன் கல்லில் பணியாரமாக ஊற்றி எண்ணெய் விட்டு எடுக்கவும். 

youtube

கேழ்வரகு கூழ்

தேவையானவை : 

ராகி மாவு – 3 கப்,
தண்ணீர் – தேவையான அளவு,
மோர் – 2 கப்,
உப்பு – தேவையான அளவு, 
சின்ன வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 1 கப் 

செய்முறை : 

அடுப்பில் வாணலில் வைத்து தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் ராகி மாவை சேர்த்து களி பதத்திற்கு கிளற வேண்டும். நன்றாக குறைந்த வெப்பத்தில் வேக வைக்க வேண்டும். இதனை ஆற வைத்து தேவையான அளவிற்கு உருண்டை பிடித்து கொள்ள வேண்டும். இந்த உருண்டையில் இரவு தண்ணீர் சேர்த்து வைக்க வேண்டும். மறுநாள் காலையில் மோருடன் சேர்த்து ஊறவைத்த உருண்டையை கரைக்க வேண்டும். அதனுடன் உப்பு சேர்த்து அருந்தலாம். மோர் மிளகாய், வத்தல் போற்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம். 

குறிப்பு : மண்பானையில் சமைத்தால் கூடுதல் ருசி கிடைக்கும். 

youtube

திரட்டுப்பால்

தேவையானவை :

திக்கான பசும்பால் – 1 லிட்டர், 
சர்க்கரை/கருப்பட்டி – 150 கிராம், 
ஏலக்காய் பொடி – 1 சிட்டிகை, 
நெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை : 

அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். தீயை மிதமாக வைத்து அடி பிடிக்காமல் கிளறவும். கருப்பட்டியை தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வடிகட்டி வைத்துகொள்ளுங்கள்.  பால் திக்காகி ஒரு சேர ஆரம்பிக்கும் சமயம் கருப்பப்பட்டி சாறு, ஏலக்காய் பொடி சேர்த்து கிளற வேண்டும். திக்கான திரட்டுப் பால் ஆனவுடன் பரிமாறவும்.

youtube

வெல்ல சீடை

தேவையானவை : 

பதப்படுத்திய பச்சரிசி மாவு – 2 கப்,
வெல்லம் – 1 கப்,
வெண்ணெய் – 1 டீஸ்பூன்,
உளுந்த மாவு – 1/2 கப்,
தேங்காய் துருவல் – 1/2 கப்,
வெல்லம் துருகியது – 1/2 கப்,
பெருங்காயம் – 1 டீஸ்பூன்,
வெள்ளை எள், உப்பு – தேவையான அளவு 

செய்முறை : 

முதலில் பச்சரிசி மாவை வெறும் வாணலில் வறுத்து கொள்ளவும். இந்த மாவுடன் உளுந்த மாவு, ஏலக்காய் பொடி வெண்ணெய், உப்பு மற்றும் வெள்ளை எள்ளை சேர்த்து கலந்து கொள்ளவும். மற்றொரு வாணலில் வெல்ல பாகு தயார் செய்து அதனை வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். கலந்து வைத்துள்ள மாவுடன் வெல்லப்பாகை சிறிது சிறிதாக சேர்த்து கிளறவும். மாவு பிடிக்கும் பதத்திற்கு வந்தவுடன் சிறு சிறு உருண்டையாக உருட்டி சிறிது நேரம் காய வைக்க வேண்டும். இதனை எண்ணெய்யில் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் வெல்ல சீடை தயார்.

youtube

காரக்கொழுக்கட்டை

தேவையானவை : 

அரிசி மாவு – 1 கப், 
தேங்காய் துருவல் – 1/2 மூடி,
உப்பு – தேவையான அளவு. 

தாளிக்க : 

நல்லெண்ணெய் – 1 டீஸ்பூன், 
கடுகு – 1 டீஸ்பூன், 
உளுந்து – 1/2 டீஸ்பூன், 
கடலை பருப்பு – 1/2 டீஸ்பூன், 
காய்ந்த மிளகாய் – 4, 
கறிவேப்பிலை – சிறிது, 

செய்முறை : 

ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து பக்குவமாக கிளற வேண்டும். மற்றொரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடேற்றி அதில் கடுகு, உளுந்து, கடலை பருப்பு சேர்த்து கிளற வேண்டும். இதனுடன் காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளித்து, பிசைந்து வைத்துள்ள மாவை இதனுடன் சேர்க்க வேண்டும். இந்த கலவையுடன் தேங்காய் துருவலையும் சேர்த்து நன்றாக பிசைய வேண்டும். இதனை தேவையான அளவிற்கு கொலுக்கட்டையாக பிடித்து வேக வைத்து சாப்பிடலாம்.

youtube

மாவிளக்கு

தேவையானவை : 

பச்சரிசி – 1 கப், 
துருகிய வெல்லம் – 1/2 கப், 
நெய் – 1 டீஸ்பூன்,
ஏலக்காய், சுக்கு – தேவையான அளவு,
நெய் – 3 டீஸ்பூன்.

செய்முறை : 

அரிசியை அலசி நீரில் 1 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். நீரை வடித்து மிக்ஸியில் அரிசியை மாவாக அரைத்து சலித்துக் கொள்ளவும். நைசாக இருந்தால் தான் மாவிளக்கு சுவையாக இருக்கும். வாய் அகன்ற பாத்திரத்தில் மாவைப் போட்டு அதனுடன் துருகிய வெல்லம், ஏலக்காய், சுக்கு, நெய் சேர்த்து பிசிறி கலந்து பெரிய உருண்டையாக பிடிக்கவும். நடுவில் சிறிது குழி செய்து நெய் மற்றும் பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றி வழிபடவும்.

மேலே குறிப்பிட்டுள் பலகாரங்களை (recipes) ஆடி மாதம் செய்து அம்மனுக்கு வைத்து வழிபாட்டு பலன் பெறுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Home & Garden