கருமை நிறத்தை விரும்பும் ஒவ்வொரு ஸ்டைலிஷ் பெண்மணியின் வார்ட் ரோபிலும் இருக்க வேண்டிய 9 முக்கியமான பொருட்களின் பட்டியல் இதோ உங்களுக்காக !
நிறங்களில் எத்தனை வகைகள் இருந்தாலும் கருப்பின் மீதான ஈர்ப்பு என்பது யாராலும் விவரிக்க முடியாத ஒன்றாகும். கருப்பு (black) நிறம் நம்மை மேலும் அழகாக்குகிறது. நம்மை வசீகரமானவராக மாற்றி விடும் மாய சக்தி இந்த கருப்பு நிறத்திற்கு உண்டு.
இந்த கருப்பு பிரியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய 9 விஷயங்கள் பற்றி பார்க்கலாம்.
1. மிகச் சிறந்தது LBD (Little black dress )
உங்களுக்கு கருப்பு மிக பிடித்தமான நிறம் என்றால் நிச்சயமாக உங்களிடமும் கருப்பு நிறத்தில் உருவான குட்டி குட்டி உடைகள் நிச்சயம் உங்களிடமும் இருக்கும். இது போன்ற கருப்பு நிறத்தில் செய்யப்படும் சிறிய சிறிய உடைகள் பல்வேறு வடிவங்களில் டிசைன்களில் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. அந்த உடைகளை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் அணிந்து செல்லலாம். அலுவலக மீட்டிங் முதல் ஆடம்பர பார்ட்டி வரை எங்கு அந்த உடை அணிந்தாலும் அந்த இடத்திற்குப் பொருத்தமாகவே இருக்கும்.
2. ஒரு கருப்பு நிற டாப்ஸ்
ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு கருப்பு நிற டாப்ஸ் நிச்சயம் இருக்கும். எந்த உடையைப் போடுவது என்கிற குழப்பத்தில் இருக்கும்போதெல்லாம் அவர்களுக்கு இந்த கருப்பு டாப்ஸ் கைகொடுக்கும். இதை அணியும்போதெல்லாம் நீங்கள் செய்ய வேண்டியது அதற்கு பொருத்தமான ஆபரணம் அணிவது மட்டும்தான். கழுத்தோடு போடக் கூடிய வகையில் மெல்லிய சங்கிலிகள் அல்லது வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்களை அணிவது உங்கள் அழகைக் கூடுதலாக்கும்.
3. கருப்பு நிற கைப்பை
நீங்கள் எந்த நிற உடையணிந்தாலும் இந்தக் கருப்பு நிறக் கைப்பை உங்களுக்கு பொருத்தமாக இருக்கும். ஆகவே அநேகமான பெண்கள் பயன்படுத்துவது இந்தக் கருப்பு நிறக் கைப்பைகளைத் தான். அதனை உங்களுக்கே உரித்தான வகையில் சிறிய ஜோடனைகள் செய்தீர்கள் என்றால் அத்தனை பேரின் கண்களும் உங்களிடம்தான் இருக்கும்!.
4. கருப்பு நிற செல்போன்
நம் கையில் இருக்கும் செல்போன் நம்முடைய இன்னொரு முகமாக பிரதிபலிக்கும். அதனால்தானோ என்னவோ பெண்கள் அனைவரும் கருப்பு நிற செல்போன்களை விரும்பி வாங்குகின்றனர். எந்த போனை வாங்குவது என்கிற குழப்பம் இருந்தால் ஒப்போ F 3 ரக கருப்பு நிற போன் உங்களுக்கு கை கொடுக்கும். இதில் உள்ள 16 எம்பி செல்ஃபி கேமரா உங்களை அழகாக செல்ஃபீ எடுக்க உதவும். அதனோடு கூடிய இரட்டை செல்ஃபி குரூப் மோட் கேமரா உங்கள் தோழிகளுடன் கும்பலாக வெளியே செல்கையில் உங்களை அங்கு கதாநாயகி ஆக்கும்! இந்த ஒப்போ ரக போன்கள் உங்கள் கைகளோடு ஒன்றி உங்களின் அழகிய செல்லமாக மாறிப்போகும்
5. கருப்பு நிற ஜெகின்ஸ்
என்னதான் விலை உயர்ந்த ஜீன்ஸ் உங்கள் வார்ட் ரொபின் இருந்தாலும் உங்களிடம் நிச்சயம் நான்கைந்து ஜோடியாவது கருப்பு நிற ஜெகின்ஸ் இருக்கும். ஒவ்வொரு நிற டாப்ஸ்களோடும் விதம் விதமான கிராப் (crop) டாப்களோடும் இந்தக் கருப்பு நிற ஜெகின்ஸ் அணியும்போதெல்லாம் நீங்கள் ஒரு தேவதையாக மாறிப் போயிருப்பது உறுதி.
6. கருப்பு நிற சோக்கர் (கழுத்துப் பட்டை)
பிரபலங்கள் முதல் சாமான்யர்கள் வரை அனைவராலும் விரும்பப்படுகிறது இந்த சோக்கர்கள். செலினா கோமஸ் முதல் கர்தாஷியன்ஸ் வரை இதன் புகழ் பரவிக் கிடக்கிறது. உங்களிடம் என்ன உடை இருக்கிறது என்ன அணிகலன் இருக்கிறது என்பதை விட இந்த ஒரு சோக்கர் இருந்தால் உங்கள் ஸ்டைல் வேறு எங்கோ போய்விடும்! இந்த வருடத்தின் டாப் ஹிட் டான இந்த சோக்கரை உங்கள் வார்ட்ரோபில் வாங்கி இன்றே சேர்த்து விடுங்கள்.
7. கருப்பு நிற குளிர்கண்ணாடிகள்
வெயிலோ குளிரோ உங்கள் அழகிய கண்களை நேரடி வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்வது அவசியம். அதற்காக குளிர்கண்ணாடிகள் அவசியம் அணிய வேண்டும். அது கருமை நிறத்தில் இருந்து விட்டால் உங்கள் தோற்றத்தில் ஏற்படும் மாற்றத்தில் நீங்களே மயங்கி விடுவீர்கள் !
8. பென்சில் பிட் கருப்பு நிற ஸ்கர்ட்
ஒரு முறையான மீட்டிங்கோ அல்லது உங்கள் தோழிகளுடனான இரவு நேர அவுட்டிங்கோ நீங்கள் நிச்சயம் இந்த பென்சில் பிட் கருப்பு நிற ஸ்கர்ட்டை அணிய வேண்டும். இந்த வகை ஸ்கர்ட்டோடு நீங்கள் எந்த நிறத்தில் வேண்டுமானாலும் டாப்ஸ் மற்றும் ஷூக்கள் அணியலாம். எதனோடு பொருந்திப் போகும் இந்த கருப்பு நிறத்தின் மாயாஜாலத்தில் உங்களைக் காண்பவர்கள் மயங்கட்டும்.
9. ஒரு கருப்பு நிற குர்தா
உங்களிடம் நீல நிற ஜீன்ஸ் இருக்கலாம் அல்லது சல்வார் இருக்கலாம். எதனோடும் சேரும்படிக்கு ஒரு கருப்பு நிற குர்தா இருப்பது அவசியம். இதனை நீங்கள் காலேஜிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ அணிந்து கொள்ள வேண்டிய தருணங்கள் நிச்சயம் வரும். ஆகவே உங்கள் வார்ட்ரோபில் இந்தக் கருமை நிற குர்தா அவசியம் இருக்கட்டும்.
—
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.
Read More From Fashion
அழகான பட்டு புடவைகளுக்கு அழகான பிளவுஸ் (ரவிக்கை) தேர்வு செய்ய சில சுவரசியமான குறிப்புகள்!
Meena Madhunivas
அனைத்து சிறப்பு நிகழ்சிகளுக்கும் மற்றும் சூழலுக்கும் பெண்கள் தேர்வு செய்ய சில ஆடை குறிப்பு
Meena Madhunivas