பொடுகு(Dandruff) என்பது எல்லாப் பெண்களுக்கும் இருக்கும் ஒரு தீராத பிரச்சணையாகும். பொதுவாக சுத்தம் இல்லாதிருப்பதால் தான் பொடுகு(Dandruff) வருவதாக அநேகர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால் அப்படி இல்லை தலை வரண்டு இருப்பதாலும், அதிகமான பயணத்தில் இருப்பதனாலும், வெயிளில் அதிக நேரம் வேலை செய்வதனாலும் இது போன்ற பிரச்சணைகள் ஏற்படுகின்றது.
இதனால் முடி உதிருதல், தலைவலி, சோர்வுடன் காணப்படுதல் மற்றும் முகம் பொலிவிளந்தும் காணப்படும். இதனை நாம் அன்றாடம் வீட்டில் பளன்படுத்தும் பொருட்களை கொண்டு எப்படி சரிசெய்வது என்பதை இங்கு பார்ப்போம்.
மூன்று அல்லது நான்கு எலுமிச்சைப் பழ தோல்களை எடுத்து நான்கு அல்லது ஐந்து காப் தண்ணீருடன் சேர்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொதிக்க விடுங்கள். அது குளிர்ந்த பின்னர், இந்த கலவையை வைத்து முடியை வாரம் ஒரு முறையாவது அலசவும்
02. வெந்தயத்தை பயன்படுத்தல்
இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை எடுத்து, முதல் நாள் இரவே தண்ணீரில் ஊற வைத்து விட்டு, மறுநாள் காலை அதை நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இந்த கலவையை முடியிலும், தலை சருமத்திலும் படுமாறு தேய்த்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும். பின் 30 நிமிடங்கள் கழித்து முடியை நன்கு தண்ணீரில் அலச வேண்டும். இந்த சிகிச்சையை தொடர்ந்து 4 வாரங்கள் மேற்கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
03. எலுமிச்சை ஜூஸ் மசாஜ்
குளிக்க போகும் முன், தலை சருமத்தில் எலுமிச்சை ஜூசை வைத்து நன்கு மசாஜ் செய்து, 15-20 நிமிடங்களுக்கு பின் தலையை தண்ணீரில் அலசுங்கள். இந்த சிகிச்சை முடியின் பசைத் தன்மையை குறைத்து, பொடுகை ஒழித்து, கூந்தலை ஜொலிக்க செய்யும்.
04. வினிகரை பயன்படுத்தல்
சமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.
தலையிலும், தலைச் சருமத்திலும் படுமாறு தயிரை தடவிக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஊற விடுங்கள். பின் மிதமான ஷாம்பூவால் தலை முடியை நன்றாக அலசுங்கள். இதனை வாரம் இரண்டு முறையாவது செய்ய வேண்டும்.
06. முட்டையை பயன்படுத்தல்
இரண்டு முட்டைகளை எடுத்து நன்கு அடித்துக் கொள்ளுங்கள். அந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, பின் ஒரு மணி நேரம் கழித்து முடியை அலசுங்கள். இந்த சிகிச்சை பொடுகை ஒழிக்க மட்டுமல்லாமல், முடி உதிர்வை கட்டுப்படுத்தவும் உதவும்.
07. எண்ணெய் மசாச்
பொடுகை நீக்க பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தி, தலைச் சருமத்திற்கு மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் நன்கு ஊற விட்டு, காலையில் எழுந்ததும், தலையை ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.
08. கற்றாழையை பயன்படுத்தல்
குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கற்றாழை ஜெல்லை, தலைச் சருமத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து ஒரு ஷாம்புவை கொண்டு தலையை அலசிக் கொள்ளவும்.
09. தேங்காய் எண்ணெய்யை பயன்படுத்தல்
ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 5 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்து, அதை தலைச் சருமத்தில் தடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து, ஒரு நல்ல ஷாம்புவைக் கொண்டு தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
சமமான அளவைக் கொண்ட, ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்களை கொண்டு ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். அதனை ஸ்கால்ப்பில் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். 20 அல்லது 30 நிமிடங்கள் கழித்து ஷாம்புவால் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
11. வேப்பம் இலைகளை பயன்படுத்தல்
சில வேப்ப இலைகளை எடுத்து, அதை நன்கு பேஸ்ட் செய்து, அதனை அப்படியே தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து, வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.
12. துளசி மற்றும் நெல்லிக்காயை பயன்படுத்தல்
துளசி மற்றும் நெல்லிக்காய் பொடிகளை தண்ணீரோடு கலந்து ஒரு பசையை தயாரித்துக் கொள்ளுங்கள். இந்த பசையை கொண்டு தலைச் சருமத்தில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். அரை மணி நேரம் அப்படியே விட்டு விடுங்கள். பின்னர் ஷாம்புவால் தலைமுடியை நன்றாக அலசுங்கள்.
13. பூண்டை பயன்படுத்தல்
இரண்டு டீஸ்பூன் பூண்டு பொடியை, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறோடு கலந்து பேஸ்ட் செய்து, அதனை தலைச் சருமத்தில் தேய்த்து, 30-40 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின்னர் ஷாம்புவைக் கொண்டு குளிர்ந்த நீரில் முடியை அலசுங்கள்.
14. பூந்திக்கொட்டையை பயன்படுத்தல்
பூந்திக்கொட்டை பொடியில் தண்ணீர் சேர்த்து செய்யப்பட்ட பேஸ்ட்டை, ஸ்கால்ப்பில் நன்றாக தடவி, இரண்டு மணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு குளிர்ந்த நீரில் தலை முடியை அலசுங்கள்.
சிறிது வெங்காய விழுதை தலையில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து, பின் தலையை நன்றாக கழுவி, இறுதியில் சிறிது எலுமிச்சை சாற்றை தலையில் தேய்த்து நீரில் அலசினால், வெங்காய வாடை தலையை விட்டு நீங்கும், அத்துடன் பொடுகும்(Dandruff) நீங்கிவிடும்.
16. இஞ்சி மற்றும் பீட்ரூட்டை பயன்படுத்தல்
இஞ்சி மற்றும் பீட்ரூட்டை ஒன்றாக அரைத்து கொண்டு, அந்த பசையை கொண்டு தலையில் நன்கு மசாஜ் செய்து இரவு முழுவதும் ஊற விடுங்கள். மறு நாள் காலை, முடியை நன்றாக அலசுங்கள். இதனை தொடர்ச்சியாக 4-5 இரவுகள் செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
17. கடலைமாவு மற்றும் தயிரை பயன்படுத்தல்
சிறிது கடலை மாவை, தயிருடன் கலந்து தலையில் தடவி, 20-30 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் தலையை நன்றாக அலசுங்கள்.
18. சமையல் சோடாவை பயன்படுத்தல்
தலைக்கு ஷாம்பு போடும் போது, கை நிறைய சமையல் சோடாவை எடுத்து, முடியில் தேய்த்து மசாஜ் செய்து, 15-20 நிமிடங்கள் கழித்து முடியை நீரில் நன்கு அலச வேண்டும்.
ரோஸ்மேரி எண்ணெயுடன் வினீகரை கலந்து, அதை ஸ்கால்ப்பில் தடவி, 20-30 நிமிடங்கள் வரை ஊற விடுங்கள். பின் நன்றாக தலையை அலசுங்கள். பொடுகை ஒழிக்க ரோஸ்மேரி எண்ணெயுடன் தேங்காய் எண்ணெயை கலந்தும் உபயோகிக்கலாம்.
20. முடியை அடிக்கடி கழுவ வேண்டும்
இந்த இயற்கை சிகிச்சைகள் மூலம் முடியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கண்டிப்பான முறையில் கழுவினால், பொடுகு வராமல் தடுக்கலாம். முடியை பாதுகாக்கும் சிகிச்சைகள் மூலமாகவும், நன்றாக அலசுவதன் மூலமாகவும், பொடுகை அடியோடு ஒழிக்கலாம்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்.
பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo