Beauty

ஒப்பனை சோதனையில் உங்கள் ஒப்பனை கலைஞரை கேட்க வேண்டிய பத்து கேள்விகள்

Sharon Alphonso  |  Dec 1, 2018
ஒப்பனை சோதனையில் உங்கள் ஒப்பனை கலைஞரை கேட்க வேண்டிய பத்து கேள்விகள்

ஒப்பனை சோதனைகள் உங்கள் திருமண தோற்றத்தை திட்டமிட ஒரு மிக முக்கியமான அம்சமாக கருதப்படுகிறது. நீங்கள் இயற்கையாக அழகாக தெரிய விரும்புகிறீர்களா மற்றும் உங்கள் கனவு நனவாக உங்களுக்கு உதவும் நபர் உங்கள் ஒப்பனை கலைஞர். மாதங்கள் முன்னதாகவே உங்கள் பெரிய நாளிற்காக ஒரு ஒப்பனை சோதனைக்கு  திட்டமிட வேண்டும். அந்த சோதனையில், உங்கள் இறுதி ஒப்பனை தோற்றத்தை சீரமைப்பதற்கு முன் நாங்கள் உங்களை இந்த பத்து கேள்விகள் கேட்க ஆலோசனை கூறுவோம். கவலைப்படாதீர்கள், உங்கள் திருமண நாளில் நிச்சயமாக நீங்கள் அற்புதமாக தோன்றப் போகிறீர்கள்!

1. ஒப்பனை சோதனைக்கு முன் ஏதாவது தயாராக வேண்டுமா?

ஒரு சில ஒப்பனை கலைஞர்கள் உங்களை புதிய-முகமாக காண்பிக்க விரும்புவார்கள். நீங்கள் ஒரு ப்ரைமர் பயன்படுத்த வேண்டுமா என்பதை அவர்களிடம் கேட்பது சிறந்தது, அவர்களை சந்திப்பதற்கு முன் ஒரு ஃப்பேசியல் செய்து விடுங்கள் அல்லது எளிதாக உங்கள் சருமத்தை ஈரப்பதமாக வைக்கவும்.

2. நான் பார்ப்பதற்கு உங்களிடம் மதிப்பீட்டு பட்டியல்(போர்ட்ஃப்போலியோ) இருக்கிறதா?

உங்கள் ஒப்பனை கலைஞரின் மதிப்பீட்டு பட்டியலை(போர்ட்ஃப்போலியோ) பார்ப்பதால் அவர்களுடைய வேலையும் மற்றும் தனிப்பட்ட பாணியும் உங்களுக்கு ஒரு சிறந்த  கருத்தைக் கொடுக்கும். அது உங்கள் பாணியுடனும் எதிர்பார்ப்புடனும் ஒத்துப்போனால் பின் பதிவு செய்ய முன்னேறுங்கள்! நீங்கள் தாழ்ந்தவர் அல்ல சிறந்தவற்றிக்கே தகுதியானவர், ஆடம்பரமாக! 🙂


சோதனைக்கு முன் உங்கள் ஒப்பனை கலைஞரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

தொடர்ந்து படிக்கவும்: நில்லுங்கள்! உங்கள் திருமண தினத்தின் தோற்றத்திற்கு கேடு விளைவிக்கும் பத்து ஒப்பனை தவறுகள்!

3. மணப்பெண் தோழிக்கும் ஒப்பனை செய்ய முடியுமா?

சிலருடைய மணப்பெண் தோழிக்கு ஏற்கனவே அவர்களின் சொந்த ஒப்பனை கலைஞர் இருக்கலாம், சிலருக்கு இருக்காது. நீங்கள் எதற்கும் எல்லாவற்றிக்கும் தயாராக இருக்க வேண்டும். உங்கள் ஒப்பனை கலைஞரிடம் ஒரு வார்த்தை சொல்லி இதற்கும் ஏற்பாடு செய்ய அவர்களிடம் கோரிக்கை செய்யுங்கள் – உதாரணத்திற்கு, அவர்கள் ஒரு உதவியாளரை அழைத்து வரலாம். இது உங்கள் முக்கியமான நாளில் எந்த தொந்தரவையுமோ  குழப்பத்தையுமோ தராமல் உறுதி செய்யும்.

4. நீங்கள் எந்த ஒப்பனை தயாரிப்புகளும் பிராண்டுகளும் பயன்படுத்துவீர்கள்?

பாதுகாப்பான மற்றும் பிராண்டு உள்ள ஒப்பனை பொருட்கள் பயன்படுத்தும் ஒரு ஒப்பனை கலைஞரை முடிவு செய்வது முக்கியம் ஆகும். உங்கள் சருமத்திற்கு தேவையானதை புரிந்துகொள்ளும் நபர்  மட்டுமல்ல, ஆனால் நீங்கள் தேர்வு செய்ய பல்வேறு தயாரிப்பு பொருட்களை வைத்திருக்கும் நபரும் தேவை.


சோதனைக்கு முன் உங்கள் ஒப்பனை கலைஞரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

தொடர்ந்து படிக்கவும்: உணர்ச்சிமிகு சருமமா? இவைதான் உங்களுக்கான சிறந்த ஒப்பனை தயாரிப்புகள்!

5. நான் ஏதாவது ஒப்பனை தயாரிப்புகளை வாங்க வேண்டுமா?

நீங்கள் ஒரு குறிப்பிட்ட பிராண்ட் அல்லது ஷேட் பயன்படுத்தினால், பின், அதை உங்கள் ஒப்பனை கலைஞரிடம் தெரிவிப்பது சிறந்தது.

நீங்கள் வாங்கிய பொருட்கள் நல்லதா என்றும் அல்லது உங்கள் சருமத்தை மனதில் வைத்து அவர்கள் சில பொருட்களை தேர்வு செய்திருந்தால் அதைப்பற்றி அவர்களிடம் கேளுங்கள்.

6. நான் வைப்புத் தொகை செலுத்த வேண்டுமா? எந்த பணம் செலுத்தும் முறையை நீங்கள் ஏற்பீர்கள்?

பெரும்பாலான ஒப்பனை கலைஞர்கள் திருமண நாளிற்கு முன்னதாகவே சிறிது வைப்பு தொகை எடுத்துக்கொள்வார்கள். ஒவ்வொரு செலுத்தும் தொகைக்கும் தெளிவாக எழுதிய ஒப்பந்தம் இரசீதுடன் பெறுவது அவசியம். எந்த மாதிரியான பணம் செலுத்தும் முறை அவர்களுக்கு எளிது என்று தெரிந்து கொள்வது முக்கியம். சிலர் காசோலை விரும்புவார்கள் அதேசமயம் வேறு சிலர் பணமாக எடுத்துக்கொள்வார்கள்.


உங்கள் ஒப்பனை கலைஞரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

7. என்னுடைய திருமண நாளில் உங்களுக்கு ஏதாவது ஒப்பனை கடமைகள் இருக்கிறதா?

இந்த கேள்வி பெரும்பாலும் கேட்க தவறுகிறார்கள், ஆனால் இது மிக முக்கியம்! உங்கள் திருமணத்தின்போது உங்கள் ஒப்பனை கலைஞரின் திட்டம் எப்படி இருக்கும் என்று நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்களுக்கு அவர்களின் முழு அர்ப்பணிப்பு தேவை, அதில் எந்த சமரசமும் முற்றிலும் இல்லை!

8. இரண்டாவது கருத்திற்கு நான் ஒரு தோழியையோ அல்லது ஒரு உறவினரையோ அழைத்து வரலாமா?

சோதனைக்கு நீங்கள் ஒரு தோழியையோ அல்லது ஒரு உறவினரையோ உங்களுடன் அழைத்து வரலாமா என்று உங்கள் ஒப்பனை கலைஞரிடம் கேட்பது மிகவும் முக்கியம். உங்கள் தோற்றத்தை முடிவு செய்வதற்குமுன் மற்றொருவரின் பார்வை தேவை. உங்கள் கலைஞரிடம் – ஹல்தி, சங்கீத் மற்றும் இறுதியாக திருமண நாள் என்று ஒவ்வொரு விழாவிற்கான வெவ்வேறு ஒப்பனை தோற்றங்களை கலந்தாலோசிக்க வேண்டும்.


சோதனைக்கு முன் உங்கள் ஒப்பனை கலைஞரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

தொடர்ந்து படிக்கவும்: #POPxoமணப்பெண்கள்: நாம் முற்றிலும் விரும்பும் மணப்பெண் திருமண ஒப்பனை!

9. என் ஒப்பனை சோதனையின்போது நான் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளலாமா?

ஒப்பனை சோதனையின்போது எத்தனை புகைப்படங்கள் எடுக்கமுடியுமோ அத்தனை புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.  இது உங்களை நீங்கள் விரும்பியதை தேர்வு செய்யவும் மற்றும் ஏதாவது மாற்றங்கள் உங்களுக்கு வேண்டும் என்றாலோ முடிவு செய்ய உதவும். சோதனையின் முடிவில், நீங்கள் அழகாகவும் மற்றும் குறை இல்லாமலும் தோன்ற வேண்டும். இந்த நேரத்தில், உங்கள் ஒப்பனை கலைஞரிடம் நீங்கள் எவ்வளவு கேள்விகள் கேட்க முடியுமோ அத்தனை கேள்விகளையும் கேட்டு விடுங்கள் எனவே நீங்கள் உங்கள் திருமண நாளில் ஒரு தெய்வமாக தோன்ற வேண்டும். 😉

10. நீங்கள் என் திருமணத்தில் இருப்பீர்களா அல்லது வேறு ஒரு ஒப்பனை கலைஞரை அனுப்புவீர்களா? மிக முக்கியமானது, என்னுடைய சிறந்த நாளில் உங்களால் வர முடியவில்லை என்றால் என்ன ஆகும்?

உங்களுக்கு சோதனை ஒப்பனை செய்யும் அதே நபர்தான் உங்கள் திருமண நாள் ஒப்பனைக்கும் செய்ய வேண்டும். காரணம் என்னவென்றால் இந்த ஒப்பனை கலைஞருக்குத்தான் உங்களுக்கு விருப்பமான ஒப்பனை தோற்றம் தெரியும் மேலும் நீங்கள் பரஸ்பரம் சிறந்தவர்களாக உருவாகி இருப்பீர்கள். மேலும், எந்த காரணத்தினாலோ அவர்களால் உங்கள் திருமண நாளிற்கு வர இயலவில்லை என்றால், எப்போதும் ஒரு மாற்று திட்டம் தயாராக வைத்திருங்கள். அவர்கள் இடத்தில் வேறு யாராவது அனுப்ப முடியுமா அல்லது நீங்கள் ஒரு ஃப்ரீலான்ஸ் ஒப்பனை கலைஞரை வாடகைக்கு அமர்த்தலாம்.


சோதனைக்கு முன் உங்கள் ஒப்பனை கலைஞரிடம் கேட்க வேண்டிய கேள்விகள்

தொடர்ந்து படிக்கவும்: நீங்கள் முற்றிலும் சிறப்பாக தோன்ற எட்டு மணப்பெண் அழகு கட்டளைகள்

படங்களின் ஆதாரம்: ஷட்டர்ஸ்டாக்

Read More From Beauty