முறையற்ற உறவில் இருக்கிறீர்களா.. நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..

முறையற்ற உறவில் இருக்கிறீர்களா.. நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்..

இந்த சமயத்தில் பத்திரிகைகளில் செய்திகளாக வரும் பெரும்பான்மை குற்றங்கள் முறையற்ற உறவுகள் கொண்டவர்கள் செய்யும் குற்றங்களாகவே இருக்கிறது. இது குறிப்பிட்ட வயதைக் கடந்த தலைமுறைகளுக்கு பெரும் அதிர்ச்சியும் வேதனையும் தருகிறது. தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் என்ன என்பதை பற்றிய பயம் ஏற்பட செய்கிறது.

முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது முறையற்ற உறவுகள் (illegal affairs) என்பது இன்று நேற்று நடக்கும் விஷயமே அல்ல. காலம் காலமாக தொடர்கிற விஷயம்தான். பல குற்றங்கள் பெரும்பாலும் இருட்டின் தனிமையில் மௌனத்தின் அலறல்களால் நடந்து முடிகின்றன. அது எவர் காதுக்கும் செல்வதற்கான சாத்தியங்களை குற்றவாளிகள் உருவாக்குவதில்லை. அத்தனை சாதுர்யமானவர்களாக அவர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

 

இப்போது ஊடக வெளிச்சம் கடும் பாதாளம் வரை பாயும் உரிமை பெற்றிருக்கிறது என்பதால் பல குற்றங்கள் (crimes) உடனடியாக வெளிவருகின்றன. பெரும்பான்மை குற்றவாளிகள் செய்யும் செயல்கள் எல்லாம் கொலையில் (murder) முடிவதாகவே இருக்கிறது. இதற்கான பின்னணி என்ன என்பதை உணர நேர்ந்தவர்கள் இவ்வகையான தவறான உறவில் இருந்து சுலபமாக வெளிவந்து நேர்மையான வாழ்க்கையை வெளிச்சமான இடத்தில் மகிழ்ச்சியாக வாழ முடியும்.

திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணை தன் மீது அன்பாக இருந்தும் மூன்றாவது நபரிடம் முறையற்ற உறவை (illegal affairs) மேற்கொள்கிறார்கள். இதனை நியாயப்படுத்த எவ்வளவு முயற்சித்தாலும் அது சரியானதாக இருக்காது. தன்னிடம் நேர்மையாக இருக்கும் துணைக்கு துரோகம் செய்வது நிச்சயம் விவாகரத்தில் அல்லது உறவு முறிதலில் சென்று முடியும். கள்ள உறவு உங்களுக்கு சில காலம் மட்டுமே சந்தோஷத்தை தரும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் திருமண வாழ்க்கை மிக சந்தோஷமாக சென்று கொண்டிருக்கும்போது மரபணுக்கள் காரணமாகவோ த்ரில்லுக்காகவோ மற்றொரு நபருடன் முறையற்ற உறவில் நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் அதிலிருந்து உடனடியாக விடுபட்டு விட முடியாது. திருமணத்திற்கு புறம்பான உறவுகள் பெரும்பாலும் உண்மையான அன்பை பின்னணியாக கொண்டிருப்பதில்லை. உங்களிடம் உள்ள பணத்திற்காகவும் அல்லது உடல் சுகத்திற்காகவும் மட்டுமே நீங்கள் பயன்படுத்தப்படுவீர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

இந்தக் கட்டுரையை படித்துக் கொண்டிருக்கும் நீங்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்தவர்களோ இப்படியான முறையற்ற உறவில் சிக்கி இருந்தால் அதிலிருந்து அவர்கள் பாதிப்புகள் பக்க விளைவுகள் இல்லாமல் வெளியில் வர சில தகவல்கள் உங்களுடன் பகிர்கிறோம். அது அவர்களுக்கு உதவி செய்யும்.

ஆணி வேர் பற்றிய அலசல்

திருமணத்திற்கு புறம்பான முறையற்ற உறவில் நீங்களோ அல்லது உங்கள் வாழ்க்கை துணையோ இருக்கிறார்கள் என்றால் முதலில் உங்கள் குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய விரிசல் விழுவதற்கான ஆணி வேரை நீங்கள் கண்டறிய வேண்டும். திருமண பந்தம் மூலமோ அல்லது காதல் மூலமோ ஏற்பட்ட உங்கள் உறவின் அடிப்படை சிக்கல்களை அறிந்து அதனை நீக்க நீங்கள் முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே முறையற்ற உறவிற்கு உங்களை வழிவகுக்கும்.

 

தவறுகளை பகிர்தல் சரியானதுதானா

பெரும்பான்மையான தம்பதிகள் அல்லது காதலர்களுக்குள் உள்ள மிகப்பெரிய தயக்கம் தன்னுடைய தவறுகளை மனம் விட்டு பகிர்வதன் மூலம் பிரச்னைகள் முடிவுக்கு வருமா அல்லது அதுவே பிரச்னையை பெரிதாக்குமா என்பதுதான். உண்மையில் நிச்சயம் இது யோசிக்க வேண்டிய விஷயம்தான். சில சமயம் திருமணத்தை மேலும் சிக்கலாக மாற்றிவிடும் தன்மை இந்த உண்மை பகிர்தலுக்கு நேர்கிறது.

 

சூழ்நிலை பற்றிய கவனம்

ஒருவேளை முறையற்ற உறவு பற்றிய உண்மையை நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதற்கு சரியான சூழ்நிலை பற்றிய கவனம் உங்களுக்கு இருக்க வேண்டும். இதற்கான உங்கள் வாழ்க்கை துணை தன்னுடைய சமநிலை இழக்காத இடம் நேரம் போன்றவற்றை அறிந்து அந்த நேரத்தில் அதற்கான இடத்தில் உங்கள் தவறுகளை நீங்கள் ஒப்புக்கொள்ளுங்கள்.

மன்னிப்பு கோருதல்

உண்மையில் உங்கள் மனது உங்களை கேள்வி கேட்பதால்தான் இதனை உங்கள் வாழ்க்கை துணையிடம் (life partner) பேச நினைத்திருப்பீர்கள். உங்கள் வாழ்க்கை துணையின் எதிர்பார்பற்ற அன்பு உங்களை அசைத்திருக்கலாம். அதனால் அவரிடம் நேர்மையாக நடந்து கொள்ள நீங்கள் விரும்பி இருக்கிறீர்கள். அப்படியானால் மனப்பூர்வமாக உங்கள் வாழ்க்கை துணையிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேளுங்கள். உங்களை குத்தி காட்டாத புண்படுத்தாத வாழ்க்கை துணை கிடைத்தால் அதுவே நீங்கள் பெற்ற பாக்கியங்களில் உயர்ந்த விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தொடர்புகளை நிரந்தரமாக அறுத்தல்

முறையற்ற உறவை முடிவுக்கு கொண்டுவருவதாக நீங்கள் உங்கள் வாழ்க்கை துணையிடம் உறுதி பூண்ட பின்னர் இதுவரை உங்களுடன் தவறான உறவில் இருந்த நபரிடம் இதனை எடுத்து சொல்ல வேண்டும். உங்கள் முடிவில் நீங்கள் தீர்மானமாக இருப்பது முக்கியம். அவர்களுடன் ஆன தொடர்புகளை நிறுத்த வேண்டும். உங்கள் நோ மெர்சி பாலிசி இங்கேதான் பயன்படுத்தப்பட வேண்டும். ஆனால் நீங்களோ விக்டிம்களிடமான உங்கள் துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் அதனை பயன்படுத்துகிறீர்கள்.

மீண்டும் நோ என்ட்ரி

முடிந்து போன அந்த முறையற்ற உறவு உங்களுடன் தொடர்பில் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள். அந்த மூன்றாவது நபர் உங்கள் இருவருக்கு இடையில் மீண்டும் எந்த சந்தர்ப்பத்திலும் நுழையாத வண்ணம் உங்கள் கதவுகள் முற்றிலுமாக பூட்டப்பட்டு அரக்கு சீல் போட்டுக்கொள்வது மிகவும் நன்மை தரும். அந்த நபர் உங்களை பின் தொடராது வண்ணம் நீங்கள் முற்றிலும் வெட்டி கொள்வது இருவருக்கும் நல்லது.

Pinterest

நம்பிக்கை தருதல்

வாழ்வில் ஒரு துணை தவறான உறவில் இருக்கும்போது மற்றொருவர் அதனால் பாதிக்கப்படுவதும் சண்டைகள் உருவாவதும் இயல்பானது. அவர்களின் மன வேதனைகளை வெளிப்படுத்த பேச்சுக்களை குறைப்பார்கள். மௌனம் அவர்கள் மொழியாகலாம். ஆனால் இது ஆரோக்கியமான அன்பிற்கு அழகானது அல்ல. இந்த நேரத்தில் தான் வழி தவறிய உங்கள் வாழ்க்கை துணைக்கு நீங்கள் வெளிச்சம் காட்ட வேண்டிய தருணம். அவர் மீதான உங்கள் நம்பிக்கையை நீங்கள் வெளிக்காட்ட வேண்டிய நேரம் இதுவே.

Pinterest

தயக்கம் எதற்கும் மருந்தல்ல

ஒரு முறையற்ற உறவில் இருந்து வெளியே வருவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்காக நீங்கள் உங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் தயார் செய்வதும் அதில் உறுதியாக இருப்பதும் முக்கியமானது. அவசியம் இருந்தால் மனம் குழப்பமாக இருந்தால் உளவியல் வல்லுனர்களை நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் நாடலாம். அதன் பின்னர் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மட்டுமே உங்கள் குறிக்கோளாக மாறிவிடும். வாழ்த்துக்கள்.

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!