முன் ஜென்ம பாவங்களை அறிந்து அதனை தீர்த்துக் கொள்ள விருப்பமா? தொடர்ந்து படிக்கவும்...

முன் ஜென்ம பாவங்களை அறிந்து அதனை தீர்த்துக் கொள்ள விருப்பமா? தொடர்ந்து படிக்கவும்...

உங்கள் வாழ்க்கையில் எல்லாமே நன்றாக நடந்தும் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே இருக்கிறதா ?எவ்வளவு செய்தாலும் மற்றவர்களை உங்களால் சந்தோஷமாகவே வைத்துக் கொள்ள முடியவில்லையா? உங்கள் முன்னேற்றம் தொடர்ந்து தடைகளை சந்தித்தபடியே இருக்கிறதா ? வீட்டில் எப்போதும் வாக்குவாதங்கள் அதிகரிக்கிறதா ? எவ்வளவு கவனமாக நீங்கள் உங்கள் காரியங்களை செய்தாலும் ஏதோ ஒன்றால் அந்தக் காரியம் தடைபட்டு நிற்கிறதா ?

இதனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள் என்றால் கடந்த பிறவியின் (previous birth) பாவ பலனை அனுபவிக்கிறீர்கள் என்று அர்த்தம். இதனை நீங்கள் சரி செய்ய சில வழிமுறைகள் இருக்கின்றன. அதன்படி செய்தால் உங்கள் பூர்வ ஜென்ம பாவங்களை நீங்கள் நேராக்கிக் கொள்ள முடியும்.

கெட்டவர்கள் எல்லாம் நன்றாக இருக்கிறார்கள் நான் நல்லதே நினைத்தும் எனக்கு ஏன் நல்லது நடக்கவில்லை என்று வேதனைப்படுபவர்கள், தொடர்ந்து நேர்மையாக நடந்தும் தோற்பவர்கள் வீட்டில் பிரச்சனைகளோடு போராடுபவர்கள் என யாராக இருந்தாலும் இந்த முறைகளை பின்பற்றுவதன் மூலம் முன் ஜென்ம பாவங்கள் நீங்கி நன்மைகளை அடைய தகுதி பெறுவார்கள்.

உங்கள் பூர்வ ஜென்ம பாவங்களின் அளவு உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஜென்மத்தில் நீங்கள் அனுபவிக்கும் துயரங்களின் அளவினைக் கொண்டு அதனை உங்களால் அறிந்து கொள்ள முடியும். எவ்வளவு பெரிய பாவங்கள் நீங்கள் செய்தவராக இருப்பினும் உங்கள் குலதெய்வ வழிபாடு உங்களை காப்பாற்றும். எவ்வளவு பெரிய சிக்கலாக இருந்தாலும் குலதெய்வமானது உங்களை அந்த சிக்கலில் இருந்து காப்பாற்றி விடும்.

உங்கள் குலதெய்வம் யார் என்ன உங்கள் குலதெய்வத்தை என்ன முறைப்படி வணங்க வேண்டும் என்பதை அறிந்து நீங்கள் அதன்படி குலதெய்வ வழிபாடுகளை செய்து முடிக்க வேண்டும். குலதெய்வத்தின் புகைப்படம் வீட்டில் இருந்தாலும் நன்மைதான்.

இரண்டாவதாக முன்னோர்களை வழிபடுதல். நீங்கள் இன்று இந்த முகத்தோடும் உடல் வடிவத்தோடும் இருக்கிறீர்கள் என்றால் அது உங்கள் முன்னோர்கள் விட்டு சென்ற ஞாபகங்களின் மிச்சமே என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதனையே அறிவியலில் மரபணு என்று குறிப்பிடுகிறார்கள். ஆகவே உங்கள் முன்னோர்களை மரியாதை செய்வது முன் ஜென்ம பாவங்களை நீக்கும் ஒரு வழிமுறையாகும்.

உங்கள் வசதி மற்றும் உடல்நிலைக்கு ஏற்ப அமாவாசை விரதம் இருக்கலாம். எள் மற்றும் தண்ணீரை வைத்து முன்னோர்களிடம் ஆசி பெறலாம். பசுவிற்கு வெல்லமோ அல்லது அகத்திக்கீரையோ கொடுக்கலாம். காகத்திற்கு தினமும் உணவு தருவதன் மூலம் முன்னோர் மனம் மகிழ்ந்து உங்கள் வாழ்க்கையை மேலும் நன்மையாக மாற அருள் செய்வார்கள். முன் ஜென்ம பாவங்கள் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும்.

மூன்றாவதாக இந்தப் பரிகாரம் உங்களுக்கு முன் ஜென்ம பாவங்களை போக்க சிறந்ததாக இருக்கலாம். உங்கள் இஷ்ட தெய்வத்தின் கோயில் அருகில் இருந்தால் அங்கே சென்று உங்கள் முன் ஜென்ம பாவங்கள் போக மனம் உருகி வேண்டிக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் வீட்டிற்கு வந்து பூஜையறையில் உங்கள் குலதெய்வத்தை மனதிற்குள் நினைத்தபடி 9 அரசமர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து அதன் மீது கல் உப்பை வைக்க வேண்டும். அதன் மீது உதிரி பூக்கள் வைக்க வேண்டும். அதன் பின்னர் 9 இலைகளின் மேலும் 9 அகல் விளக்குகள் ஏற்ற வேண்டும்.

இப்படியாக 9 அமாவாசைகள் நீங்கள் தொடர்ந்து பூஜையறையில் பூஜிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்கள் கடந்த கால பாவங்கள் எல்லாம் நீங்கி மோட்சம் சித்திக்கும். நிகழ்கால கெடு பலன்கள் எல்லாம் மறைந்து நன்மை மட்டுமே உங்கள் வாழ்வில் நடந்தேறும்.

அதைப் போலவே கோயில்களுக்கு செல்லும்போது நீங்கள் சண்டிகேஸ்வரரை சில வினாடிகள் மட்டுமே தரிசிப்பது வழக்கமாக இருக்கும். ஆனால் நமது முன் ஜென்ம பாவங்களை போக்க வல்லவர் சண்டிகேஸ்வரர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இனி அங்கே செல்லும்போது அவரிடம் மனமார பிரார்த்தனை செய்யுங்கள். அவரிடம் வேண்டிக் கொண்டு அன்னதானங்கள் செய்யுங்கள். உங்கள் முன் ஜென்மத்தின் பாவ வினைகள் நீங்கி இந்த ஜென்மத்தில் நிம்மதியாக வாழ்வீர்கள்.

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!