ஒளிரும் முகத்திற்கு சில இயற்கை வழிகள்

ஒளிரும் முகத்திற்கு சில இயற்கை வழிகள்

இந்த பூமிக்கு நாம் வரும் சமயம் பவித்திரமான அழகுடன் மாசற்ற சருமத்துடன் அற்புத அழகுடன் தான் உள்ளே வருகிறோம். ஆனால் வெளி உலகின் வெயில், காற்று மாசு, தூசு , நச்சு புகை என நாளாக நாளாக நமது முகத்தில் தேவையற்ற அழுக்குகள் படர்ந்து நமது நிறத்தை மங்க வைத்து விடுகிறது.

சரிசமம் அற்ற உணவு பழக்கம் , நேரத்திற்கு உறங்காமை போன்றவற்றால் பரு, கரும்புள்ளிகள், இளமையிலேயே வயதான தோற்றம், வறண்ட சருமம் என பல சிக்கல்களுக்கு ஆளாகிறோம். நமது முன்னோர்கள் இயற்கை முறையில் (natural) தங்கள் அழகை நிறத்தை மேம்படுத்தினர். அதனால்தான் இன்னமும் அவர்கள் அழகு ரகசியங்கள் பேசப்படுகிறது.

பழங்கால முறைப்படி உங்கள் முக அழகையும் நிறத்தையும் மேம்படுத்த சில முக்கிய குறிப்புகள் தரப்பட்டுள்ளது. இதனை நீங்கள் தொடர்ந்து பின்பற்றி வந்தால் நிச்சயம் கெமிக்கல் ட்யூப்கள் இல்லாமலேயே நீங்கள் பேரழகாக ஜொலிப்பீர்கள்.

Youtube

அகத்தின் முகவரியாகும் முகம்

முகத்தை வைத்தே பல விஷயங்கள் சொல்லி விட முடியும், நமது பெரியவர்கள் கவலையை நாம் மறைத்தால் கூட நமது கருவளையங்கள் மூலம் நமது சோகத்தை புரிந்து கொள்வார்கள். உண்மைதான் அகத்தில் ஏற்படும் பல மன வலிகள் பற்றி முகத்தில் உள்ள அறிகுறிகள் மூலமே புரிந்து கொள்ள முடியும்.

தெளிவான முகத்திற்கு எதெல்லாம் முக்கியம்

இப்படிப்பட்ட தலைக்கு அடுத்தபடியான முக்கியத்துவம் பெற்ற முகத்தை நாம் அப்படியே வெயிலில் வாட விடுவதும் காற்றில் உலர விடுவதும் வாகன புகையில் மூழ்கடிப்பதும் கூடாது. வெளியில் செல்லும்போதும் சரி வீட்டில் இருக்கும்போதும் சரி நல்ல SPF உள்ள கிரீம்களை உபயோகப்படுத்துங்கள். அதிகமான வெயிலில் வெளியே செல்லும்போது மெல்லிய துணியால் முகத்தை மூடி செல்வது நம் அழகை பாதுகாக்கும். கண்களுக்கு கூலிங் கிளாஸ்கள் பெரிதாக போடுவதால் முகத்தை காப்பாற்றலாம்.

இயற்கை முறையில் நம் சருமத்தின் பொலிவை கூட்டும் வழிகள்

உலகின் பெரும்பாலான பெண்கள் தங்கள் அழகை மேம்படுத்தவும் அதனை தக்க வைக்கவும் விரும்புவார்கள். அதற்காக எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருப்பார்கள். இதுதான் சந்தையில் பல்வேறு விதமான அழகு பொருள்கள் கொட்டி கிடக்க காரணம். ரசாயனங்கள் கலந்த அந்த பொருள்கள் ஆரம்ப காலத்தில் நமது அழகை மேம்படுத்துவதாக தெரிந்தாலும் போக போக நமது சருமத்தை உலர செய்வது போன்ற பல சரும பிரச்னைகளை கொண்டுவரலாம். தரமற்ற கிரீம்களை உபயோகிக்கும்போது அதன் மூலம் சரும புற்று நோய் கூட வர வாய்ப்புள்ளது.

இதனை தவிர்க்க நாம் இயற்கை நமக்கு கோடிக்கணக்கான பொருள்களை கொடுத்துள்ளது, அதனை கண்டிபிடித்து எடுத்து பயன்படுத்தும் ரகசியங்கள் தெரியாததால்தான் நாம் இந்த கிரீம்களை நம்பி இருக்கிறோம். எல்லா கிரீமிலும் நிச்சயம் ஏதோ முக்கிய இயற்கை பொருள்கள் கலந்து தான் இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்று. அந்த இயற்கை பொருளை நாமே நேரடியாக பயன்படுத்தும்போது நமது சருமம் மேலும் அழகாகவும் பொலிவாகவும் மாறும்.

Youtube

குங்குமப்பூ மற்றும் பால்

குங்குமப்பூ என்றாலே அது நிறத்தை அதிகரிக்க செய்யும் ஒரு இயற்கை பொருள் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். நிறமேற்றத்திற்காக பயன்படுத்தப்படும் எல்லா வகை க்ரீம்களிலும் குங்குமப்பூவின் பங்கு உள்ளது.

கடையில் வாங்கும் கிரீம்களில் சிறிதளவு குங்கும பூவும் அதிக அளவு அது கெடாமல் காக்க கூடிய ரசாயனங்களும் கலக்கப்படுகிறது. இதற்கு பதிலாக நாமே குங்குமப்பூவை நேரடியாக வாங்கி பயன்படுத்தும் போது அதன் பலன்கள் இரட்டிப்பாகின்றன. சரியான வகையில் நமது பணம் மிச்சப்படுகிறது.

செய்முறை

குங்குமப்பூவில் உள்ள ப்ளீச்சிங் தன்மை நமது முகத்தில் படர்ந்திருக்கும் அழுக்கை நீக்குகிறது. இதனை பாலுடன் சேர்த்து கொதிக்க விடுங்கள். நான்கு அல்லது ஐந்து குங்குமப்பூக்கள் மற்றும் கால் டம்ளர் பால் இவற்றை கலந்து கொதிக்க விடுங்கள். பாலின் நிறம் மஞ்சளாக மாறும்போது இறக்கி வையுங்கள். ஆறியபின்னர் முகம் முழுதும் தடவி 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். பின்னர் வெது வெதுப்பான நீரில் முகம் கழுவுங்கள். சருமத்தின் கருமை மறைந்து சீக்கிரமே முகம் பொலிவடையும் மாற்றத்தை காண்பீர்கள்.

 

Youtube

குங்குமப்பூ எண்ணெய்

இந்த எண்ணெயில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் முகத்தில் உள்ள பிரீ ரேடிக்கல்ஸை தாக்கி அழிக்கிறது. இதனால் சருமம் சேதம் அடையாமல் பாதுகாக்க படுகிறது. மேலும் ப்ளாக் ஹெட்ஸ் களை நீக்கி சருமத்துளைகளை நீக்குகிறது.


செய்முறை

குங்குமப்பூ எண்ணெய் தயாரிக்க தேவை பாதாம் எண்ணெய் அரை கப் மற்றும் குங்குமப்பூ இதழ்கள் இரண்டு ஸ்பூன்கள். பாதாம் எண்ணெய்யில் குங்குமப்பூவை நன்றாக கலக்கவும். அதன் பின்னர் ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே வைத்திருங்கள். ஒரு தவாவில் நீரூற்றி கொதிக்க விடுங்கள். நன்றாக நீர் கொதிக்கும் போது எடுத்து வைத்துள்ள பாதாம் குங்குமப்பூ எண்ணையை அந்த நீரில் மேல் வையுங்கள். 30 நிமிடங்கள் மிதமான சூட்டில் நீர் கொதித்தபடியே இருக்கட்டும். பின்னர் ஆறிய உடன் எடுத்து குங்குமப்பூக்களை வடிகட்டி விட்டு நீங்கள் அதனை ஒரு பாட்டிலில் சேமியுங்கள். இதுதான் குங்குமப்பூ எண்ணெய் உங்கள் முக அழகை மேம்படுத்தும் அற்புத பொருள்.


தினமும் இரவில் நீங்கள் உறங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். காலையில் முகத்தை பாசிப்பயிறு கொண்டு கழுவி வாருங்கள். ஒரே மாதத்தில் வெட்கப்படாமலே சிவந்து போய் இருக்கும் உங்கள் முகத்தை பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

 

Youtube

ஓட்ஸ் மற்றும் புளித்த தயிர்

சரும நிறத்தை மேம்படுத்த ஓட்ஸ் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். ஓட்ஸ் உடன் புளித்த தயிர் சேரும்போது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பளீரிட செய்யும். துலக்கி வைத்த பித்தளை பாத்திரம் போல உங்கள் முகம் கண்ணாடியாக மினுமினுக்கும்.

செய்முறை

ஓட்ஸை நீங்கள் முதல் நாள் இரவில் ஊறவைக்க வேண்டும். முகம் மற்றும் உடலின் மற்ற பாகங்களுக்கும் இதனை பயன்படுத்தலாம். ஊறவைத்த ஓட்ஸை அடுத்த நாள் காலையில் மிக்சியில் மையாக அரைத்து எடுக்க வேண்டும். அதனோடு புளித்த தயிரை கலந்து பசை போல செய்து முகத்தில் தடவவும். 30 நிமிடம் கழித்து முகத்தை தேய்த்து கழுவவும். ஓட்ஸ் முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கும். தயிர் முகத்தை பளிச்சிட வைக்கும்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!