‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரஜினி பட நடிகை ஹூமா குரேஷி... ரசிகர்கள் மகிழ்ச்சி!

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரஜினி பட நடிகை  ஹூமா குரேஷி... ரசிகர்கள் மகிழ்ச்சி!

அஜித்துக்கு ஜோடியாக வலிமை படத்தில் ரஜினியின் காலா படத்தில் நடித்த ஹூமா குரேஷி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என அடுத்தடுத்து இரண்டு தரமான ஹிட் படங்களை கொடுத்த அஜித் அடுத்ததாக தனது 60வது படமான வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை ஹெச் வினோத் இயக்கி வருகிறார். போனி கபூர் தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நடிகர் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வந்தது. 

படப்பிடிப்பு மற்றும் படத்தில் நடிக்கும் நடிகர் (ajith), நடிகைகள் குறித்த தகவலை வெளியிடாமல் ரகசியம் காத்து வருகிறது படக்குழு. இந்நிலையில் நடிகர் பிரசன்னா இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. 

twitter

ஆனால் வலிமையில் பிரசன்னா இல்லை என்று படக்குழுவுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்தார். அது தான் உண்மையாகியுள்ளது. தான் வலிமை படத்தில் நடிக்கவில்லை என்று பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, நான் வலிமை (ajith) படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்பிய அனைவருக்கும் என்று நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என் கெரியரின் மிகப் பெரிய அறிவிப்பு வெளியாகும் என்று நம்பினேன். 

பிரபுதேவா உடன் காதல்..? வாரம் ஒருமுறை பிரபுதேவாவை சந்திக்கும் சாய் பல்லவி!

ஆனால் நம்ம தலயுடன் சேர்ந்து நடிக்கும் அருமையான வாய்ப்பு இம்முறை கிடைக்கவில்லை. அடுத்த முறை நிச்சயம் நடக்கும். விரைவில் நான் தலக்கு வில்லனாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

twitter

இதனிடையே படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை யாமி கவுதம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரஜினியின் காலா படத்தில் நடித்த நடிகை ஹியூமா குரோஷி வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

கணவர் ஈஸ்வர் உடனான பிரச்னை... கடிதம் எழுதி வைத்துவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் ஹியூமா குரோஷி, “உமாங் போலீஸ்ஷோவில் இருந்திருக்க வேண்டும், ஆனால் சென்னையில் படப்பிடிப்பிற்காக வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார். 

இந்த ட்விட்டர் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் நடிகை ஹூமா குரேஷி சென்னை வந்திருப்பது அஜித்தின் (ajith) வலிமை படத்தில் நடிப்பதற்காகத் தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

ஹூமா வலிமை படக்குழுவை சந்தித்து பேசியதாகவும், அவருக்கு படத்தில் தன் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் மிகவும் பிடித்துள்ளதாவும் கூறப்படுகிறது. வலிமையில் ஹூமா நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இதுவரை வெளியிடாத நிலையில், அறிவிப்பிற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். முன்னதாக ஹூமா அஜித்தின் பில்லா 2 படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாக வேண்டியது. ஆனால் அது நடக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு மீண்டும் அஜித் பட வாய்ப்பு தேடி வந்துள்ளது.

சேலையில் க்யூட் புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை பேபி அனிகா... கடும் வியப்பில் ரசிகர்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!