உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வரகரிசி காய்கறி தோசை... வீட்டிலேயே செய்து கொடுங்கள்!

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வரகரிசி காய்கறி தோசை... வீட்டிலேயே செய்து கொடுங்கள்!

வரகு அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அரிசி மிகவும் உகந்தது. வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை வரகரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் வயிறு, குடல்களில் இருக்கும் புண்கள் ஆறுவதோடு, மலச்சிக்கல் பிரச்சனையும் நீங்கும்.

நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்பு சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும் இத்தகைய சத்துகள் அனைத்தும் வரகரிசியில் நிறைந்துள்ளது. 

இந்த இதயம் நலமாக இருக்க சத்துமிக்க உணவுகளை சாப்பிட்டு வருவது அவசியம். வரகரிசி இதயத்திற்கு பலம் தரும் தன்மை அதிகம் கொண்டது. குறைந்த பட்சம் வாரமொருமுறை வரகரிசி உணவுகளை சாப்பிடுவதால் இதயம் நலம் மேம்படும்.

வாரத்திற்கு மூன்று அல்லாது நான்கு முறை வரகு அரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றது. இந்த வரகு அரிசியுடன் (varagu arisi) காய்கறி சேர்த்து தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

youtube

தேவையான பொருட்கள்: 

வரகரிசி (varagu arisi) - கால் கிலோ, 
இட்லி அரிசி - கால் கிலோ, 
உளுந்து - 50 கிராம்,
வெந்தயம் - 1 டேபிள் ஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

காய்கறி மசாலா செய்ய தேவையானவை : 

கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ் - சிறிதளவு, 
உருளைக் கிழங்கு - சிறியது 1, 
தேங்காய்த் துருவல் - 2 டேபிள் ஸ்பூன், 
குடைமிளகாய் - 1, 
சீரகம் - 1 டீஸ்பூன், 
பூண்டு - 2 பல், 
உப்பு - தேவையான அளவு, 
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், 
பச்சை மிளகாய் - 2,
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, 
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்.

youtube

செய்முறை : 

முதலில் ஒரு பாத்திரத்தில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், உருளைக் கிழங்கை சிறிதாக துருவிக்கொள்ளவும். குடைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். 

வரகரிசி (varagu arisi), இட்லி அரிசி, வெந்தயம், உளுந்தை நன்றாக கழுவி மூன்று மணி நேரம் ஊறவைத்து நன்றாக ஊறியதும் மையாக அரைத்துக் கொள்ளுங்கள். போதுமான உப்பைச் சேர்த்து மாவை நன்கு கரைத்து புளிக்கவையுங்கள். 

வாணலியில் எண்ணெய் ஊற்றிச் சூடானதும் சீரகம், பொடியாக நறுக்கிய பூண்டு, வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். அதனுடன் துருவிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ்,தேங்காய்த் துருவல் ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். 

முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

 

youtube

காய்கறிகள் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், போதுமான உப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து வதக்குங்கள். 

வதக்கிய பொருட்களைப் புளித்த மாவுடன் சேர்த்துக் ஒன்றாக கலக்குங்கள்.தோசைக் கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றிச் சுற்றிலும் எண்ணெய்விட்டுத் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுங்கள். 

தேங்காய் சட்னி அல்லது தக்காளி சட்னியுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும். இந்த தோசையை வாரம் இரண்டு நாட்கள் உங்கள் வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து ஆரோக்கியமாக இருப்பார்கள். 

பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலாவுடன் காதல்... உறுதி செய்தார் நடிகர் விஷ்ணு விஷால்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!