காலையில் எழுந்தவுடன் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் !

காலையில் எழுந்தவுடன் கட்டாயம்  தவிர்க்க வேண்டிய 10 உணவுகள் !

காலையில் எழுந்தவுடன், முதல் வேலையாக சூட சுட ஒரு கப் காபி அல்லது டீ போட்டு குடித்துவிட்டுதான் வேறு எந்த வேலையும் செய்வேன் என்றும் பலர் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் . ஆனால் இது ஒருத்தரின் உடலில் என்ன தாக்கத்தை உருவாக்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? காலை உணவு அன்றைய நாளின் முதல் உணவாக இருப்பதால், எதைச் சாப்பிட வேண்டும், எதைத் தவிர்க்க வேண்டும் என்பதில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். இது நாள் முழுவதும் நம் உடலை சீராகவும் சுறுசுறுப்பாகவும் வைத்துக்கொள்ள உதவும். இல்லையெனில் ஒருவர் எந்த நேரத்திலும் நோய்வாய்ப்படக்கூடும்! சரி, காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் என்ன உணவு சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது / தவிர்க்க வேண்டிய உணவு (food to avoid in the morning) என்ற விவரங்களை இங்கு பார்க்கலாம்.

காலையில் தூங்கி எழுந்தவுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்

1. காபி/டீ

இரவு வெகுநேரம் உணவு உண்ணாமல் உறங்குவதால், ஏற்கனவே வயிற்றில் அமிலம் அதிகமாக சுரந்திருக்கும். அப்போது, காபி/டீ பருகினால், இரைப்பையில் அலர்ஜி உண்டாகும். செரிமானம் பாதிக்கப்படும். வயிறு பொருமல் ஏற்படும். காபி நல்லதுதான். ஆனால் ஏதாவது நன்றாக உணவு சாப்பிட்டுவிட்டுப் பின்னர், காபி குடிக்கலாம். 

வேறு என்ன உணவு சாப்பிடுவது?  

இளம் சூடான நீர் - காலையில் காபி/டீக்கு பதிலாக இளம் சூடான தண்ணீர் குடித்தால், உடல் எடை குறையும், கழிவுகள் வெளியேறும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், சருமம் இளமையாகும், புத்துணர்வு கிடைக்கும், செரிமானம் சீராகும், மலச்சிக்கல் சரியாகும்.

2. காரமான உணவு

காரமான உணவை உண்ணுவதால், இரைப்பையில் எரிச்சல் ஏற்படுத்தும். உணவு செரிமானம் ஆகாமல் போய்விடும்.

வேறு என்ன உணவு சாப்பிடுவது?

நட்ஸ் - பாதாம் போன்ற கொட்டைகளை இரவு ஊறவைத்து, காலையில் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். இரைப்பையில் pH அளவுகளை சீராக வைக்க உதவும். நீரழிவு நோயை கட்டுப்படுத்தும்.

Pexels

3. புளிப்பான பழங்கள்

புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அவை இரைப்பையில், அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாகும்.

வேறு என்ன உணவு சாப்பிடுவது ?

பெர்ரி பழங்கள்- ப்ளூபெர்ரி போன்ற பழங்களை காலையில் உண்ணும்போது, நியாபக சக்தி அதிகரிக்கும், மேலும் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கும்.கிவி, ஆப்பிள், தர்பூசணி, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, பப்பாளி போன்ற பழங்களில் அமிலத்தன்மை குறைவாக இருப்பதால், இவற்றை எடுத்துக் கொண்டால் உடலுக்கு மிகவும் நல்லது. 

4. இனிப்பு

காலையில் இனிப்பை சாப்பிடுவதால், உங்கள் இன்சுலின் அளவுகளை அதிகரித்து, நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும். 

வேறு என்ன உணவு சாப்பிடுவது?

தேன்- காலையில் வெறும் வயிற்றில் இளம் சூடான நீரில் தேன் கலந்து அருந்தினால் உடலுக்கு பலம் தரும். தேனோடு எலுமிச்சை சாறு சேர்த்து பருகினால் ரத்தம் சுத்தமாகும். ரத்த ஓட்டம் சீராகும். வயிற்று எரிச்சலை குறைக்கும். செரிமானத்திற்கு உதவும். தூக்கமின்மை போகும். உடல் எடை குறையும்.

Pexels

5. தக்காளி

தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால், வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால், காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை தவிர்க்கலாம்.

வேறு என்ன உணவு சாப்பிடுவது?

பச்சை காய்கள்- கேரட், முள்ளங்கி, வெள்ளரி போன்றவற்றை பச்சையாகவே சாப்பிடலாம். ரத்தம் அபிவிருத்தியாக்கும். இரத்த அழுத்தத்தை குறைக்கும். உடல் எடை குறையவும் உதவும். சருமத்தை பளபளப்பாக்கும். 

6. வாழைப்பழம்

வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால், வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் அதிகமாக கலக்க நேரிடும். அது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும். 

வேறு என்ன உணவு சாப்பிடுவது?

வெந்தயம் - இரவு வெந்தயத்தை ஊற வைத்து வெறும் வயிற்றில் சாப்பிடுவதால், உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து ரத்தத்தில் சக்கரை அளவை கட்டுக்குள் வைக்கும்.

Pexels

7. பேக்கரி உணவுகள்

பிரட், பன், பாஸ்டரி போன்ற உணவுகளில் உள்ள ஈஸ்ட் இரைப்பையில் எரிச்சல் உண்டாக்கும், வாய்வு தொல்லையை ஏற்படுத்தும். 

வேறு என்ன உணவு சாப்பிடுவது?

ஈஸ்ட் இல்லாத பிரட் - முழு தானியங்களைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட ஈஸ்ட் இல்லாத பிரட்களை காலையில் உண்ணலாம்.

உளுந்தங்களி - பெண்களுக்கு மாதவிடாய் சமயங்களில் உளுந்தங்களி மிகவும் நல்லது. கர்ப்பபை கோளாறுகளுக்கு  சிறந்த பலனைத் தரும்.

8. தயிர்

இரைப்பையில் சுரந்துள்ள ஹைட்ரோகிளோரிக் அமிலம், தயிரின் லாக்டிக் பாக்டீரியாக்களை கொன்றுவிடும். அதனால், காலையில் தயிர் சாப்பிடுவதால் உடலுக்கு எந்த சக்தியும் கிடைக்காது.

வேறு என்ன உணவு சாப்பிடுவது?

அரிசி கஞ்சி - உடலில் உள்ள நச்சு நீரை வெளியேற்றும். அதனால் உடல் எடை குறையும். உணவு நன்றாக செரிமானமாகும்.

Pexels

9. குளிர்பானங்கள்

தூங்கி எழுந்தவுடன் எதுக்கலிக்கிறது. ஜீரணம் ஆகவில்லை என்று நினைக்கிறோம். குளிர்பானம் குடித்தால் நன்றாக இருக்கும் என்று வெறும் வயிற்றில் அருந்தினால், வயிற்றிற்கு செல்லும் ரத்த ஓட்டத்தைக் குறைத்து விடும். அதனால், செரிமானம் மேலும் மந்தமாகும். 

வேறு என்ன உணவு சாப்பிடுவது ?

சீரக தண்ணீர் - சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து, வெறும் வயிற்றில் எடுத்துக்கொண்டால் அஜீரண கோளாறுகளை நீக்கி, உடலுக்கு குளிர்ச்சியை தரும்.  சீரகத்தை கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும். 

10. சீரேல்ஸ் (cereals)

சீரேல்ஸ் முழு தானியம் இருப்பதால் உடலுக்கு நல்லது என்று நினைக்கிறோம். ஆனால், அதில் பதப்படுத்தப்பட்ட உணவே அதிகம் இருக்கும். முழு தானியங்கள் குறைவாக இருக்கும். மேலும் சக்கரை அதிகமாக காணப்படும்.

வேறு என்ன உணவு சாப்பிடுவது ?

முளைகட்டிய பயிர் - முளைகட்டிய பயிரில் வைட்டமின்கள், தாதுக்கள், புரதச்சத்து, ஆகியவை அதிகம் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

Pexels

காலையில் எழுந்தவுடன் என்ன சாப்பிடுகிறோமோ அதுதான் அன்றைய நாளை உங்களை குதூகலமாக வைக்க உதவும். எனவே, இந்த  பட்டியலில் உள்ள உணவுகளை மனதில் கொண்டு, நல்ல ஆரோக்கியமான உணவை சாப்பிட ஆரம்பியுங்கள். ஆரோக்கியமான வாழ்வு தொடரட்டும்!

மேலும் படிக்க - அதிகரிக்கும் உணவு பொருள் கலப்படத்தால் பாதிப்பு - வீட்டிலேயே எளிமையாக கண்டறியும் முறைகள்!

பட ஆதாரம்  - Shutterstock 

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்