உடலில் ஃபோலிக் அமிலம் சீராக இருக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவு பொருட்கள்!

உடலில் ஃபோலிக் அமிலம் சீராக இருக்க சாப்பிட வேண்டிய முக்கிய உணவு பொருட்கள்!

ஃபோலிக் அமிலம் இது நீரில் கரையும் வைட்டமின்களில் மிகவும் முக்கியமானது. அனீமியா எனும் ரத்தச்சோகை நோயைக் குணப்படுத்துவதில் வைட்டமின் B12 உடன் ஃபோலிக் அமிலமும் இணைந்து செயல்படுகிறது. இதில் ஏற்படும் குறைபாட்டால் ரத்தச்சோகை ஏற்படுகிறது. இது உடலில் சீராக இருக்கும் போது  இரத்த சிவப்பு அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.  

பெண்கள் கருவுற்றிருக்கும்போது ஃபோலிக் அமிலம் குறைபாட்டால் சிசுவின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கூந்தல் வளர்ச்சிக்கு ஃபோலிக் அமிலம் மிகவும் முக்கியமானது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஃபோலிக் அமிலம் எந்தெந்த உணவுகளில் நிறைந்துள்ளது என்பது குறித்து இங்கு காண்போம். 

பீட்ரூட் :

ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வைக்க பீட்ரூட் மிகுதியாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு சத்து, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்டவை பீட்ரூட்டில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. 

pixabay

பருப்புகள்:

பருப்பு வகைகளில் ஊட்டச்சத்து அதிகமாக இருக்கிறது.  இதில் ஃபோலிக் அமிலமும் இருக்கிறது. மேலும் இதில் நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  பருப்புகளை கொண்டு சுவையான ரெசிபிகளை செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஃபோலிக் அமிலம் உடலில் சீராக காக்கப்படும். 

மேலும் படிக்க - குளிர்காலத்தில் கூந்தல் அதிகளவு உதிர காரணங்கள் மற்றும் சில பராமரிப்பு டிப்ஸ்!

சிட்ரஸ் உணவுகள் :

சிட்ரஸ் உணவுகளில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது. சிட்ரஸ் உணவுகளான ஆரஞ்சு, எலுமிச்சை, க்ரேப் ஃப்ரூட், கொய்யா ஆகியவற்றில் ஃபோலிக் அமிலமும் (folic acid) நிறைந்திருக்கிறது.  இவற்றை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நோய்கள் உண்டாவது தடுக்கப்படும். 

ஆப்பிள் :

தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன் சேர்த்து உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை (முடிந்தால் கிரீன் ஆப்பிள்) கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும். சாலட்டாக செய்தும் சாப்பிடலாம். 

pixabay

இரும்புச்சத்து உணவுகள் :

ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதற்கு இரும்புச்சத்து குறைபாடு ஒரு பொதுவான காரணமாக உள்ளது. ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச்சத்து ஒரு முக்கியமான பொருளாக விளங்குகிறது. ஃபோலிக் அமிலம் குறைந்தாலும் இரும்பு சத்து குறைபாடு ஏற்படும். இதனை தவிர்க்க ஈரல், சிகப்பு இறைச்சி, இறால், டோஃபு, கீரைகள், பாதாம், பேரிச்சம் பழம், பயறு, சத்தூட்டிய காலை உணவு தானியங்கள், கடல் சிப்பிகள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். 

மேலும் படிக்க - முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

கீரைகள்:

கீரைகளில் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களுமே இருக்கிறது.  ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.  பாலக் கீரை, பொன்னாங்கண்ணி கீரை, வெந்தய கீரை, முருங்கைக்கீரை உள்ளிட்டவற்றில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது. ஃபோலிக் அமிலம் கீரையில் அதிகமாக இருப்பதாலே முடி வளர்ச்சியை அதிகரிக்க கீரை சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

மாதுளைப்பழம் :

மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும்,  ஃபோலிக் அமிலத்தை (folic acid) உற்பத்தி செய்து ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.

pixabay

முட்டை:

முட்டையில் புரதம் மட்டுமின்றி ஏராளமான ஊட்டச்சத்துக்களும் இருக்கிறது.  உங்களுக்கு பிடித்தமான வகையில் முட்டையை தயாரித்து சாப்பிடலாம். முட்டை உங்களை நிறைவாக வைத்திருப்பதுடன் நாள் முழுக்க ஆற்றலுடனும் வைத்திருக்க உதவுகிறது. 

வைட்டமின் சி :

வைட்டமின் சி குறைபாடு இருந்தாலும்  ஃபோலிக் அமிலம் குறையும். அதனை சீர்செய்ய வைட்டமின் சி அதிகமாக உள்ள உணவுகளை உண்ணவும். வைட்டமின் சி வளமையாக உள்ள பப்பாளி, ஆரஞ்சுப் பழம், எலுமிச்சை, ஸ்ட்ராபெர்ரி, குடைமிளகாய், ப்ராக்கோலி, பப்ளிமாஸ், தக்காளி மற்றும் கீரைகள் போன்றவற்றை உண்ணவும். அல்லது மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு வைட்டமின் சி மாத்திரைகளை உண்ணலாம்.

ப்ரோக்கோலி:

ப்ரோக்கோலியில் வைட்டமின் சி, ஃபோலிக் அமிலம் (folic acid), மக்னீஷியம், சிங்க், பொட்டாஷியம் மற்றும் மற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன.  மேலும் ப்ரோக்கோலியை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் சருமம், கூந்தல் மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும். 

மேலும் படிக்க - தமிழக உள்ளாட்சி தேர்தலில் இளம்பெண் முதல் முதியோர் வரை வெற்றி வாகை சூடிய பெண்கள்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!