இந்த ராசிக்காரர்களுக்கு குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்! | POPxo

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்!

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும்!

இன்று வெள்ளிக்கிழமை ஷஷ்டி திதி பஞ்சமி நட்சத்திரம். தை மாதம் 17ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.

மேஷம்

வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென்று நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். யாரையும் பகைத்துக்கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

ரிஷபம் 

கிடைக்கும் சந்தர்ப் பங்களை சரியாகப் பயன்படுத்தி வெற்றி பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து புகழ் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பு அதிகரிக்கும். சிறப்பான நாள்.

மிதுனம்

எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் மத்தியில் உங்களைப் பற்றி நல்ல இமேஜ் உண்டாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் தேடிவரும். புதிய உதவிகள் கிட்டும் நாள்.

பிரசவ நேரத்துக்கு பின்பான எடை குறைப்பில் நீங்கள் தவிர்க்க வேண்டியதும் செய்ய வேண்டியதும்

கடகம் 

கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் தள்ளிப்போன வாய்ப்புகள் தேடிவரும். உத்தியோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.

சிம்மம் 

சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப்போய் முடியும். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும் நாள்.

கன்னி

சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். மனைவி வழியில் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் உதவி கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

youtube
youtube

துலாம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு விஷயங்கள் சாதகமாக முடியும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு  மேலதிகாரி வியப்பார். தொட்டது துலங்கும் நாள்.

விருச்சிகம்

புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயமுண்டு. வியாபாரத்தை பல மடங்கு விரிவுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாள்.

அழகையும் ஆரோக்கியத்தையும் ஒரு சேர தரும் ஆயில் மசாஜ்கள்..

தனுசு 

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப்போனாலும், எதிர்பார்த்தவை ஒரு வேலை முடியும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். வரவேண்டிய பணத்தை வசூலிக்க போராடுகிறீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

மகரம்

தன்னிச்சையாகவும், தைரியமாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டு. அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.

கும்பம்

கடந்த இரண்டு மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் லாபமும் அதிகரிக்கும். மகிழ்ச்சி தங்கும் நாள்.

மீனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் தேவையற்ற சஞ்சலம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் உருவாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது..... உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More from Lifestyle
Load More Lifestyle Stories