இன்று புதிய பாதையில் பயணிக்க தொடங்கும் மூன்று ராசிக்காரர்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று புதிய பாதையில் பயணிக்க தொடங்கும் மூன்று ராசிக்காரர்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று வெள்ளிக்கிழமை அமாவாஸ்யை திதி உத்திராடம் நட்சத்திரம். தை மாதம் 10ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம்

பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் நாள். புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். நீங்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார். சாதிக்கும் நாள்

ரிஷபம்

புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். முன்கோபத்தை குறையுங்கள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. வியாபாரம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வது நல்லது. பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள்.

அசிங்கமான அடி வயிற்று சதையை அழகாக குறைக்க சில எளிய உடல்பயிற்சிகள்

மிதுனம்

இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி உதவியாக இருப்பார். நன்மை நடக்கும் நாள்.

கடகம்

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். ஆனால் பொறுமை அவசியம். கனிவாகப்பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவரிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.

சிம்மம்

இன்று எதிலும் பொறுமை அவசியம். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்சினையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

கன்னி

தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்தி யோகத்தில் பணிகளை முடிக்க போராட வேண்டியிருக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.

youtube

துலாம்

எதிலும் வெற்றியே ஏற்படும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.

விருச்சிகம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். நிம்மதி கிட்டும் நாள்.

ஆன்லைன் பணபரிவர்த்தனைகள் பாதுகாப்பானது தானா..?

தனுசு

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பலமுறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை கற்றுக்கொள்வீர்கள். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

மகரம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். கணவன் மனைவிக்குள் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். செலவுகள் கட்டுக் கடங்காமல் போகும். வியாபாரத்தில் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

கும்பம்

பல வகைகளிலும் அனுகூலமான நாள். எந்த காரியத்தையும் திறமையாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் லாபம் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

மீனம்

அனுகூலமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்கள் செயல்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புது தொழில் தொடங்கும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள் இனிமையான நாள்.

உங்கள் கைகளாலேயே தயாரியுங்கள் ரசாயனக் கலப்பற்ற இயற்கை ஹேர் டை !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!