இன்று பணவராவால் மகிழ்ச்சியடையும் மூன்று ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!

இன்று பணவராவால் மகிழ்ச்சியடையும் மூன்று ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!

இன்று புதன் கிழமை திரயோதசி திதி மூலம் நட்சத்திரம். தை மாதம் 8ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

இன்று குழப்பமாக காணப்படுவீர்கள். சந்திராஷ்டமம் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். உடல்நிலையில் சிறிது பாதிப்பு வந்து நீங்கும். வியாபாரத்தில் லாபம் குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடையே கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.

ரிஷபம்

இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. உங்கள் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் தேடிவரும். திறமை வெளிப்படும் நாள்.

மிதுனம்

நண்ட நாளாக வர வேண்டிய பணம் இன்று கைக்கு வந்து சேரும். உறவினர்கள் நண்பர் கள் மத்தியில் உங்களுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொட்டது துலங்கும் நாள்.

பாலிவுட் படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்... வாய்ப்பை தட்டி சென்ற மற்றொரு நடிகை!

கடகம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். நன்மை நடக்கும் நாள்.

 சிம்மம்

இன்று நிலையான நாள். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாயாருடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பணப் பற்றாக்குறை இருந்தாலும் கேட்ட இடத்தில் தேவையான உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சினை தீரும். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

 கன்னி

தைரியமாகவும், துணிச்சலாகவும் சில முக்கிய முடிவுகளை எடுத்து செயல்படுத்துவீர்கள். சகோதர சகோதரிகளால் நன்மை உண்டாகும். பிரபலங்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகளை கொள்முதல் செய்வீர்கள். நீண்ட நாட்களுக்கு பின்னர் நண்பர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரி உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி கிட்டும் நாள்.

youtube

துலாம்

கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல் குழப்பங்கள் விலகும். அழகும் இளமையும் கூடும். முகத்தில் தெளிவு பிறக்கும். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் புது அதிகாரிகள் உங்களை மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.

விருச்சிகம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எந்த காரியத்திலும் போராடி வெற்றி பெற வேண்டி இருக்கும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போவது நல்லது. கோபத்தால் வீண் பிரச்சினைகள் உண்டாகும். லேசாக தலை வலியும் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகள் தவறுகளை சுட்டிக் காட்டினால் மாற்றிக்கொள்வது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான வரகரிசி காய்கறி தோசை... வீட்டிலேயே செய்து கொடுங்கள்!

தனுசு

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சலும் பிரச்சினையும் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்து செல்வது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வீண் விரயங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

மகரம்

இன்று விவேகத்துடன் செயல்பட்டு காரிய சாதனை செய்வீர்கள். பெற்றோர் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். மாறுபட்ட அணுகுமுறையால். சாதிக்கும் நாள்.

கும்பம்

கொடுத்த வாக்கை காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். சொந்த பந்தங்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.

மீனம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை ஏற்படும். தடைபட்ட காரியங்கள் முடியும் நாள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!