logo
ADVERTISEMENT
home / Astrology
இன்றைய நாளை இனிய நாளாக தொடங்கப்போகும் ராசிக்கார்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்றைய நாளை இனிய நாளாக தொடங்கப்போகும் ராசிக்கார்கள் யார்? தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று ஞாயிற்றுக்கிழமை துவிதியை திதி பூசம் நட்சத்திரம். மார்கழி மாதம் 27ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம்

இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. இன்று வெற்றி அடையும் நாள்.  

ரிஷபம்

ADVERTISEMENT

இன்று சிறந்த நாளாக இருக்கும். மனதுக்கு பிடித்தவர்களால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும் இனிய நாளாக இருக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.  தம்பதியரிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் அமைதி நிறைந்திருக்கும். குடும்பத்தில் மூத்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. 

இந்த 2020 வருஷம் யாருக்கெல்லாம் நன்மை செய்யபோகுது! யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும் !

மிதுனம்

இன்று சிறந்த நாளாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். பல முக்கிய முடிவுகளை பற்றிய சிந்தனையில் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். 

ADVERTISEMENT

கடகம்

இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த சுபச் செய்திகள் கைகூடிவரும். வீண் விரயங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.   

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகக்கூடும். உங்கள் திறமைக்கேற்ப பாராட்டுகள் குவியும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் ஒருசிலருக்கு வெற்றி பெறும். மனதுக்கு பிடித்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம். 

ADVERTISEMENT

கன்னி

இன்றைய நாள் இனிய நாளாக தொடங்கவிருக்கிறது. சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும்.  தனவரவு எதிர்பார்த்த படி திருப்திகரமாக அமையும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் சுபமாக முடியும். கல்வியில் கவனம் கூடுதலாக வேண்டும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையலாம். பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. 

youtube

ADVERTISEMENT

துலாம்

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.  எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை உயரும். கணவன் மனைவியிடையே மனம் விட்டு பேசுவது நல்லது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை உண்டாகலாம்.  

விருச்சிகம்

நல்ல நாளாக தொடங்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஜாமீன் போடுவதில் கவனம் தேவை. வீண் அலைச்சல்களால் மன சோர்வு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் கடின முயற்சியால் வெற்றிகள் குவியும். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய மாற்றங்கள் செய்து முன்னேற்றம் காணலாம். 

ADVERTISEMENT

என்ன தொழில் தொடங்கலாம்? 2020 ஆம் ஆண்டின் சிறந்த சுவாரஸ்யமான வணிக யோசனைகள்!

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமுடன் காணப்படும் நாளாக இருக்கும். உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரின் பாராட்டை பெறுவீர்கள். உங்களின் கடின முயற்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வெற்றி கிட்டும். திடீர் பயணங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். 

மகரம்

ADVERTISEMENT

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்ததொரு நாளாக அமைந்திருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும். சக பணியாளர்களிடத்தில் பாராட்டு பெறுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும் இருப்பினும் அதனால் ஆதாயம் உண்டாகும். 

கும்பம்

இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். வீண் விரயங்களை தவிர்த்து சுபச் செலவுகளை மேற்கொள்வதால் பயன்பெறலாம். பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை பெண்களுக்கு கிடைக்கப்பெறும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். வழக்குகளில் சாதகமான பதில் வரும். 

மீனம்

ADVERTISEMENT

மீன ராசிக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். சமூக சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கான சூழ்நிலை நிலவும். சமூகத்தின் மீது அக்கறை கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. 

முன் ஜென்ம பாவங்கள் நீங்கி உங்கள் நிகழ்காலம்/எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமா?

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

10 Jan 2020

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT