எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதால் திருப்தியடையும் மூன்று ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!

எதிர்பார்ப்புகள் நிறைவேறுவதால் திருப்தியடையும் மூன்று ராசிக்காரர்கள் யார்? சரி பாருங்கள்!

இன்று சனிக்கிழமை பிரதமை திதி புனர்பூசம் நட்சத்திரம். மார்கழி மாதம் 26ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம் 

விடாமுயற்சியால் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்.  பணிச்சுமை குறைவதால் உற்சாகமாக இருப்பீர்கள்.வெற்றி பெறும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றுவருவீர்கள். புதிய நட்புகள் கிடைக்கும்.  சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சக ஊழியர்களுக்கு அவர்களுடைய பணிகளில் உதவி செய்வீர்கள். நிம்மதி கிட்டும் நாள்.

பிறருக்கு சுகமளிப்போர் உன் போல் உண்டோ வெண்ணிலாவே!! பௌர்ணமி முழு நிலவின் சுவாரசியங்கள்!

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி இருக்கும். உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்வது நல்லது. மனம் உற்சாகத்துடன் காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.உத்தியோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். சக ஊழியர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே முடிப்பது நல்லது. திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறும் நாள்.

கடகம்

இன்று அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் சில சங்கடங்களும் ஏற்படக்கூடும். மற்றவர்களுக்காக சாட்சி கையெழுத்திட வேண்டாம். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

சிம்மம்

குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக்கொடுப்பீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும்.  சிலருக்கு திடீர் பயணம் மேற்கொள்ளவேண்டி வரும்.உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். புகழ், கௌரவம் பெருகும் நாள்.

கன்னி

எதிர்பார்ப்புகள்  நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். மற்ற மொழியினரால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். புதுத்தொழில் தொடங்கும். முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். இனிமையான நாள்.

youtube

துலாம்

புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிட்டும். சாதிக்கும் நாள்.

சிவ பெருமானின் ஆருத்ரா தரிசனம் இவ்வளவு மகிமையானதா.. தரிசிப்போம்..சிறப்பாய் வாழ்வோம்..!

விருச்சிகம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். முன்கோபத்தை தவிர்ப்பது நல்லது. உங்களுடைய பலம் பலவீனம் அறிந்து செயல்படுங்கள். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.

தனுசு

குடும்பத்தினருடன் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். அரசாங்க அதிகாரிகளைச் சந்திக்கும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். தாய்மாமன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நன்மை நடக்கும் நாள்.

மகரம்

சாதுர்யமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர்களிடம் சொல்லி மகிழ்வீர்கள். நீண்ட நாளாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். கடன்கள் வகையில் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதா ரணமாக முடிப்பீர்கள். அமோகமான நாள்.

கும்பம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக்கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். பழைய கடன் பிரச்னைகளில் ஒன்று தீரும்.  கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.

மீனம்

உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. சிலருக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தொடர்புகள் விரிவடையும். நட்பு வட்டாரம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் பணிகளை முடிக்க போராடுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிட்டும் நாள்.

முன் ஜென்ம பாவங்கள் நீங்கி உங்கள் நிகழ்காலம்/எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டுமா?

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!