இன்று செவ்வாய் கிழமை துவாதசி திதி கார்த்திகை நட்சத்திரம். கார்த்திகை மாதம் 22ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.
மேஷம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால், வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.
ரிஷபம்
இன்று புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் செலவுகள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.. தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் சக பணியாளர்களை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
மேலும் படிக்க – இந்த 2020 வருஷம் யாருக்கெல்லாம் நன்மை செய்யபோகுது! யாரெல்லாம் ஜாக்கிரதையா இருக்கணும் !
மிதுனம்
இன்று சாதிக்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். சவாலான விஷயங்களை சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். மனதிற்கு இதமான செய்தி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
கடகம்
இன்று அனுகூலமான நாளாக இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியையோசிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். வாழ்க்கைத்துணையின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களால் பிரச்னை ஏற்படக்கூடும். எனினும் தடைகளை முன்னேறும் நாள்.
சிம்மம்
உற்சாகமான நாள். சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். புதிய முயற்சி சாதகமாக முடியும். நீண்ட நாள்களாக எதிர்பார்த்த பணம் இன்று கிடைக்கக்கூடும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனசாட்சி படி செயல்படும் நாள்.
கன்னி
சந்திராஷ்டமம் தொடங்கு வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. இன்று குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுக்கவேண்டாம். சிலருக்கு குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். விமர் சனங்களைகண்டு அஞ்ச வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.
youtube
துலாம்
தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். இன்று வாழ்க்கைத்துணையால் எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இருவருக்குமிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
மேலும் படிக்க – புதியதொரு ஆரம்பம்! 2020 ‘க்கான இலக்குகளை அமைத்து, பின்பற்றி, வெற்றி பெற ஒரு வழிகாட்டி!
விருச்சிகம்
பணவரவு திருப்திகரமாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றிகரமாக நிறைவேறும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். அலுவலகத்தில் சக ஊழியர்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அமோகமான நாள்.
தனுசு
வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களால் மறை முகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படும். குடும்பத்தில் சிறு சங்கடம் ஏற்படக் கூடும் என்றாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.
மகரம்
புதிய முயற்சிகளையும், பயணங்களையும் தவிர்க்கவும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. சிறிய அளவில் உடல்நலம் பாதிக்கப்பட்டாலும் உடனே சரியாகி விடும். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம் உத்தியோகத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கும்பம்
மகிழ்ச்சி தரும் நாள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். லுவலகத்தில் உற்சாக மான சூழ்நிலை மனதுக்கு மகிழ்ச்சி தரும். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். வெற்றி பெறும் நாள்.
மீனம்
எடுத்த காரியம் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சி சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
மேலும் படிக்க – புத்தாண்டு தினத்தன்று 67,385 குழந்தைகள் பிறப்பு : சீனாவை முந்தி முதலிடத்தில் இந்தியா!
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!