இன்று வியாழக்கிழமை சப்தமி திதி உத்திரட்டாதி நட்சத்திரம் மார்கழி மாதம் 17ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
மனதில் பதட்டங்கள் ஏற்பட்டாலும் நிதானத்தை கடைபிடியுங்கள். வியாபாரம் லாபகரமாக இருக்கும். வாழ்க்கைத்துணை வழியில் வருமானங்கள் வரலாம். ஆன்மீக வழிபாடுகள் நன்மை சேர்க்கும். காரிய அனுகூலம் கொண்ட நாள்.
ரிஷபம்
காரியம் செய்வது காலதாமதங்கள் ஏற்படுத்தலாம். கணவன் மனைவி நெருக்கம் மேலும் அதிகரிக்கும். பயண நேரங்களில் கவனம் இருக்க வேண்டும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் அனுசரிப்பார்கள். புதிய செயல்கள் தொடங்கும்போது நிதானம் வேண்டும்.
மிதுனம்
குடும்பம் ஒற்றுமையாக இருக்கும். தொட்டதெல்லாம் வெற்றியாகும் நாள். பழைய நினைவுகள் மனதை அலைக்கழிக்கும். ஆனாலும் மனம் தளராமல் இருப்பீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்கள் உதவி செய்வார்கள். காரிய வெற்றிக்கான நாள்.
கடகம்
மனதில் குழப்பங்கள் வந்து பின்னர் நீங்கும். அன்னையின் உடல்நலன் கவனிக்க வேண்டி வரலாம். பயணங்கள் நல்ல பலன்களை கொடுக்கலாம். வழக்கமான வியாபாரத்தை எதிர்பார்க்கவும். தாய்மாமன் வழியில் உதவி கிடைக்கலாம். அலைச்சல் தரும் நாள்.
சிம்மம்
குடும்ப பெரியவர்கள் ஆலோசனையுடன் நீங்கள் முடிவெடுக்க வேண்டும். எந்த வேலை செய்தாலும் முழுக்கவனத்தையும் அந்த வேலையில் செலுத்த வேண்டி வரலாம். கணவன் மனைவி உறவு பலப்படும். நெருக்கமானவர்கள் உங்களுக்கு செலவு வைப்பார்கள்.
கன்னி
பங்குதாரர்கள் நம்பிக்கைக்கு உரியவர்களா என யோசிக்கவும். அவர்களால் செலவுகள் அதிகமாகும். குடும்பத்துடன் பயணம் செல்ல நேரிடலாம். எதிர்பாராத பணவரவுகள் மனதை மகிழ்ச்சியில் திளைக்க வைக்கும். நண்பர்கள் சந்திப்பு மேலும் மகிழ்வை கொடுக்கும்.
துலாம்
உயர் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவான சூழ்நிலைகளை கொடுப்பார்கள். தொழில் வியாபாரம் போன்றவற்றில் முக்கிய முடிவுகள் இன்றைக்கு எடுக்க வேண்டாம். வீட்டில் சந்தோஷம் பிறக்கும். சக பணியாளர்கள் தந்து வந்த மறைமுக தொல்லைகள் நீங்கும்.
விருச்சிகம்
தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றும் நாள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.பிடித்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தை வழி சொந்தங்கள் ஆதாயம் தருவார்கள். எதிர்பாராத பணவரவுகள் உங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தும்.
தனுசு
புதிய முயற்சிகள் நன்மையில் முடியலாம். புதிய பயணங்கள் உங்கள் வாழ்வை மேம்படுத்தும். கணவருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தந்தை வழியாக செலவுகள் வரலாம். மற்றவர் மனதை காயப்படுத்தும் வார்த்தை வீச்சை கட்டுப்படுத்தவும்.
மகரம்
கருணை பொங்கும் வார்த்தைகள் உங்களை வாழ செய்யும். ,மற்றவர் மனம் கவர இதனை ஒரு தந்திரமாக உபயோகிப்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். தந்தை வழியில் உதவிகள் வரலாம். சுப விரயங்கள் ஏற்படும். தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டிய நாள்.
கும்பம்
குழந்தைகளிடம் அன்பாக பழக வேண்டும். அலுவலகத்தில் சக பணியாளர்கள் மனசங்கடத்திற்கு ஆளாக நேரிடலாம். ஆன்மீக தேடல்கள் அதிகரிக்கும். பயணம் உங்களுக்கு சாதகமான பலன்களை கொடுக்கும். புது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டு. வியாபாரத்தில் லாபம் உண்டு.
மீனம்
மனதில் நினைத்தவைகளை சிறப்பாக செய்து முடிக்கும் திறமை உருவாகும். உயர் அதிகாரிகள் பாராட்டுவதால் ஊக்கம் அதிகரிக்கும். ஆயினும் பணிகளின் போது கவனம் சிதறாமல் இருக்கட்டும். தாயின் உடல்நலனில் கவனம் தேவை. உறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகள் கவனமாக விடவும்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!