இந்த புத்தாண்டு எந்த ராசிக்கெல்லாம் ராஜயோக காலம்.... தெரிந்து கொள்ளுங்கள்!

இந்த புத்தாண்டு எந்த ராசிக்கெல்லாம் ராஜயோக காலம்.... தெரிந்து கொள்ளுங்கள்!

இன்று புதன் கிழமை ஷஷ்டி திதி பூரட்டாதி நட்சத்திரம். மார்கழி மாதம் 16ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள். 

மேஷம்

செவ்வாயை அதிபதியாக கொண்ட மேஷ ராசிக்காரர்களே. பிறக்கப்போகும் 2020ஆம் புத்தாண்டு அதி அற்புதமான ஆண்டாக அமையப்போகிறது. இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. தடைப்பட்ட வேலையை முடிக்க முயல்வீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். 

ரிஷபம் 

2020ஆம் புத்தாண்டு யோகமான ஆண்டாக அமையப்போகிறது. தொழில் செய்வர்களுக்கு லாபம் கூடும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தாய்வழி உ றவினர்களிடம் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். சகோதர வகையில் சிறு சிறு சங்கடங்கள், அவர்களுக்காக வீண் செலவு களும் ஏற்படக்கூடும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.  

மிதுனம் 

2020ஆம் ஆண்டு உங்களுக்கு திடீர் உற்சாகத்தை தரும் ஆண்டாக அமைந்துள்ளது.மேம்படும். சிலருக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். தொட்டது துலங்கும் நாள்.

மேலும் படிக்க - உங்கள் ராசிக்கேற்ற மொபைல் கேஸ் கவர்கள் என்னென்ன என்று தெரியுமா!

கடகம் 

எதிர்ப்புகளை சமாளித்து வெற்றி பெறும் ஆண்டாக இந்த ஆண்டு இருக்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டு. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பிற்பகலுக்கு மேல் எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. மாலையில் நண்பர்களுடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். 

சிம்மம் 

2020ஆம் ஆண்டு உங்களுக்கு அற்புதமான புத்தாண்டாக அமையப்போகிறது. உற்சாகமான நாளாக அமையும். எதிர்பார்க்கும் காரியங்கள் சாதகமாக முடி யும். ஆனால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். 

கன்னி

அர்த்தாஷ்டம சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இந்த ஆண்டு விடிவுகாலம் பிறக்கப் போகிறது. குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உறவினர்கள் வீடு தேடிவருவார்கள். சொத்து வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். தொலைதூரத்திலிருந்து நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல தகவல் இன்று வந்து சேரும். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று வேண்டுதல்களை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.

youtube

துலாம்

2020ஆம் புத்தாண்டில் அர்த்தாஷ்டம சனி காலம் என்றாலும் சனி ஆட்சி பெற்று அமர்வதால் உங்களுக்கு பாதிப்புகள் அதிகம் இருக்காது. கணவன் -மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த  இடத்திலிருந்து நல்ல செய்திவரும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். 

மேலும் படிக்க - நேர்மறை சக்திகளை எப்படி அதிகரித்து, மகிழ்ச்சியான மற்றும் வெற்றி தரும் வாழ்க்கையை வாழ்வது?

விருச்சிகம்

ஏழரை ஆண்டுகளாக கஷ்டப்பட்டு, துன்பப்பட்டு மூச்சுவிட முடியாமல் தவித்து வந்த விருச்சிக ராசிக்கார்களுக்கு பிறக்கப் போகும் இந்த புத்தாண்டு விடிவுக்காலமாக இருக்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம் பக்கம் இருப்பவர்களை அனுசரித்து போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அனுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகளில் தடைகள் ஏற்படும். பொறுமைத் தேவைப்படும் நாள்.

தனுசு

இந்த புத்தாண்டில் உங்களுக்கு பல அற்புதங்கள் நிகழும். தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. 

மகரம் 

பிறக்கப்போகும் புத்தாண்டி கிரகங்களின் சஞ்சாரம் சுமாராகவே இருக்கிறது என்றாலும் ராசி நாதன் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மை உண்டாகும். சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். இன்றைக்கு உற்சாகமாகக் காணப்படுவீர்கள். 

கும்பம்

குரு பகவான் உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தில் அமர்வதால் 2020ஆம் ஆண்டு புத்தாண்டு உங்களுக்கு ஏராளமான லாபத்தை வழங்கும். பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து மகிழ்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

மீனம் 

2020ஆம் ஆண்டு உங்களுக்கு வெற்றிகரமான ஆண்டாக அமையப்போகிறது. நன்மைகள் நடைபெறும் அதிகம் நடைபெறும் ஆண்டாகவும் அமையப்போகிறது. குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். இன்று பொறுமையும் சகிப்புத்தன்மையும் அதிகம் தேவைப்படும். சிலருக்கு ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.  உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். 

மேலும் படிக்க - 2020ல் கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகும் 6 ராசிகள் இவைதான் ! உங்கள் ராசி இருக்கிறதா !

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!