இன்று திங்கள் கிழமை திரிதியை திதி ஆயில்யம் நட்சத்திரம். மார்கழி மாதம் 27ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
பல வகைகளிலும் அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். சில வேலைகளை விட்டுக்கொடுத்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
ரிஷபம்
உற்சாகமான நாளாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். சாதிக்கும் நாள்.
மேலும் படிக்க – உங்கள் சருமம் தங்கம் போல் பளபளக்க பாசிப்பயறு மாவு பயன்படுத்துங்கள்!
மிதுனம்
புதிய முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வீட்டிற்கு தேவையான வசதிகளை அதிகப்படுத்துவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சி கிட்டும் நாள்.
கடகம்
மகிழ்ச்சியான நாள். ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அனைவரையும் அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் கவனம் தேவை. பொறுமைத் தேவைப்படும் நாள்.
சிம்மம்
மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால் புதிய முயற்சி எதையும் இன்று மேற்கொள்ளவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும். எதிலும் விழிப்புணர்வு தேவைப்படும் நாள்.
கன்னி
சாமர்த்தியமாக செயல்பட்டு காரியங்களை சாதித்து கொள்வீர்கள். முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிள்ளைகள் நண்பர்கள் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.
youtube
துலாம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பழைய நல்ல சம்ப வங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
விருச்சிகம்
இன்று வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்தி வாழ்வில் உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதிக்கும் நாள்.
மேலும் படிக்க – பொங்கல் ஆன்லைன் ஷாப்பிங் ஸ்பெஷல் : பிராண்டட் பொருட்கள் , குறைவான விலையில்!!
தனுசு
சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. உங்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பிறரின் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டாம். பொறுமை தேவைப்படும் நாள்.
மகரம்
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். தாய்வழி உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.
கும்பம்
எந்த செயல்களையும் தீர்க்கமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.
மீனம்
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். பழைய பிரச்னைகளில் ஒன்றுதீரும். உறவினர்களில் உண்மை யானவர்களை கண்டறிவீர்கள். வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மேலும் படிக்க – சிவ பெருமானின் ஆருத்ரா தரிசனம் இவ்வளவு மகிமையானதா.. தரிசிப்போம்..சிறப்பாய் வாழ்வோம்..!
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!