நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது..... உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!

நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது..... உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!

பிரசன்னா – சினேகா தம்பதியினருக்கு இரண்டாவதாக இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. மலையாளப் படத்தின் மூலம் திரைத்துறைக்கு நடிகையாக அறிமுகமானவர் சினேகா. மாதவனுடன் சேர்ந்து நடித்த என்னவளே படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல படங்களில் நடித்து வந்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தார்.  

சினிமாவின் திரை பிரபலங்களாக இருந்து காதலித்து திருமணம் செய்த கொண்டவர்கள் ஏராளம். அந்த வரிசையில்  ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடிக்கும்போது சினேகா – பிரசன்னா ஆகிய இருவருக்கும் காதல் மலர்ந்தது. 

twitter

அதனைத் தொடர்ந்து பெற்றோர் சம்மதத்துடன் 2012-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2015-ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு விஹான் என்று பெயரிட்டுள்ளனர். 

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு அடி எடுத்து வைக்கும் தொகுப்பாளினி நட்சத்திரா!

திருமணத்திற்கு பின்னரும் தனது நடிப்பை விடவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு 2-வது முறையாக கர்ப்பமானார் சினேகா. கர்ப்பத்துடனேயே ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்தார். 

சினேகா நடிப்பில் கடந்த 15ம் தேதி வெளியான பட்டாஸ் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த படத்தில் சினேகா கன்னியாகுமரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

படத்தை பார்க்கும் அனைவரும் சினேகாவின் நடிப்பை பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் சினேகா அடிமுறை கலையை பயன்படுத்தி காவலர்களுடன் சண்டை போடும் காட்சி வீடியோவை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில் அதிரடியாக பயிற்சி பெற்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

twitter

இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆன நடிகை சினேகாவிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலானது. இந்நிலையில் பிரசவ காலம் நெருங்கியதை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவ   மனையில் அனுமதிக்கப்பட்டார் சினேகா. 

‘வலிமை’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ரஜினி பட நடிகை ஹூமா குரேஷி... ரசிகர்கள் மகிழ்ச்சி!

அவருக்கு  பிற்பகல் 2.50 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்த தகவல் நடிகர் பிரசன்னாவுக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலை அறிந்ததும் நடிகர் பிரசன்னா மருத்துவமனைக்கு விரைந்து வந்து மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்தார். 

பின்னர் மருத்துவமனை ஊழியர்களுக்கு அவர் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சினேகாவும், அவருடைய குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து தை மகள் வந்தாள் என்று தனக்கு மகள் பிறந்துள்ளதை பிரசன்னா ட்விட்டரில் தெரிவித்து உறுதி செய்துள்ளார். 

அதனை பார்த்த ரசிகர்கள் சினேகா மற்றும் பிரசன்னாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் குட்டி சினேகாவின் புகைப்படத்தை வெளியிடுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து விரைவில் குழந்தையின் புகைப்படத்தை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் நடிப்பை பார்த்து ரசித்தேன்..... மனம் திறந்த அமலா!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!