பாலிவுட் படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்... வாய்ப்பை தட்டி சென்ற மற்றொரு நடிகை!

பாலிவுட் படத்தில் இருந்து விலகிய கீர்த்தி சுரேஷ்... வாய்ப்பை தட்டி சென்ற மற்றொரு  நடிகை!

தென்னிந்திய சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக அவதாரம் எடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் சினிமாவில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். 

தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். 

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான “நடிகையர் திலகம்” படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், சாவத்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

twitter

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியானது. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்தது.

மேலும் இந்த படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வாங்கினார். இந்த படத்தை தொடர்ந்து திரைப் படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று பல கருத்துக்கள் சமூக வலைகளில் பரவியது. 

இறுதி நேரத்தில் மலர்ந்த காதல்..நெகிழ்வில் முடிந்த நேசம்..திருமணத்தில் இணைந்த முதிய நட்பு !

பல நடிகைகளுக்கும், மிக பெரிய கனவாக இருக்கும் நிலையில் அந்த கனவு குறுகிய காலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்தது. பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கும் “மெய்டன்” என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. 

இப்படத்திற்காக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து நியூ லுக்கிற்கு மாறினார். ஆனால் தற்போது இந்த படத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ் விளக்கியுள்ளார். கீர்த்தி கால்ஷீட் கொடுத்த நாட்களில் இவரின் படப்பிடிப்பை நடத்தாமல், படக்குழு தாமதித்தது தான் இப்படத்தில் இருந்து விலக காரணம் என கூறப்படுகிறது. 

சேலையில் க்யூட் புகைப்படங்கள் வெளியிட்ட நடிகை பேபி அனிகா... கடும் வியப்பில் ரசிகர்கள்!

twitter

மேலும் அஜய் தேவ்கனை விட கீர்த்தி சுரேஷ் மிகவும் இளமையாக தெரிவதால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறுகிறார்கள். அந்த கதாபாத்திரத்தில் நடிகை கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை ஒப்பந்தம் செய்து உள்ளார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே  கீர்த்தி சுரேஷ் ப்ரியதர்ஷன் இயக்கியுள்ள மரக்கர் அரபிகடலிண்டே சிம்ஹாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மோகன்லால் நடித்துள்ள இந்த படம் குஞ்சலி மரக்கர் IV வரலாற்றை கூறும் படமாகும்.

தற்போது வெளிவந்துள்ள லேட்டஸ்ட் போஸ்டரில் நடிகை கீர்த்தி சுரேஷின் புது கெட்டப் காட்டப்பட்டுள்ளது. அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னணி சீரியல் நடிகை ஸ்ரித்திகாவிற்கு கேரளாவில் திருமணம் : வைரலாகும் புகைப்படங்கள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!