பெண்களை அதிகம் தாக்கும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை அறிகுறிகள் & சிகிச்சை முறைகள்!

பெண்களை அதிகம் தாக்கும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை அறிகுறிகள் & சிகிச்சை முறைகள்!

தற்போது பெண்கள் அதிகம் பாதிக்கப்படுவது பாலிசிஸ்டிக் ஓவரி சின்ட்ரோம் (pcos) எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனைதான். மாறிவரும் வாழ்க்கைமுறை, தவறான உணவுப் பழக்கம் காரணமாக ஹார்மோன் சுரப்பில் பிரச்னை ஏற்படுவதால் கர்ப்பப்பையில் சினைப்பை நீர்க்கட்டி பிரச்சனை ஏற்படுகிறது. 

கருப்பையில் கட்டிகள், இன்சுலின்  செயல்திறன் பாதிப்பு, குழந்தையின்மை, ஒழுங்கற்ற மாதவிலக்கு, ரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பு உள்ளிட்ட  காரணங்களால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. 

இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால் அறுவை சிகிச்சை வரை கொண்டு சென்றுவிடும். குறிப்பாக கருப்பையில் நீர்கட்டி உள்ளவர்களுக்கு மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும். மேலும் உடலில் ஆன்ட்ரோஜென் என்ற ஆண்தன்மை ஹார்மோன் அதிக அளவில் சுரக்க ஆரம்பித்துவிடும்.

pixabay

அறிகுறிகள்

 • சினைப்பை நீர்க்கட்டி அறிகுறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது. பெரும்பாலானவர்கள் கூறும் ஒரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி. 
 • சினைப்பை நீர்க்கட்டிகள் உடைய பெண்களில் மாதந்தோறும் நிகழும் மாதவிடாய் சுழற்சி சரிவர இருக்காது. 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி நிகழும். 
 • இந்நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக முடிவளர்ச்சி உடலில் உண்டாகும். 
 • மார்பகத்தின் அளவு குறைதல், முடி கொட்டுதல், குரலில் வேறுபாடு, முகப்பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம், மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படுகிறது.
pixabay

 • கருப்பை கட்டிகள் பாதிப்பு அதிகமாகும் போது திடீரென இடுப்பு வலி உண்டாகும். அது உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியதாகும்.
 • இடுப்பு பகுதிக்கு கீழே, வலது அல்லது இடது புறத்தில் வலி இருப்பது கருப்பை நீர்க்கட்டி இருப்பதற்கான பொதுவான அறிகுறியாகும். இந்த பகுதியில் அல்லது வேறு இடத்தில் திடீரென்று பாரமாக இருப்பது போல் நீங்கள் உணரலாம். 
 • சிறுநீர் கழித்த பின்னரும் வயிறு கனத்த உணர்வு மட்டும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு நீடித்தால் கருப்பையில் நீர்க்கட்டிகள் இருப்பதை உறுதி செய்யலாம். 

இயற்கை மருத்துவம்

 • சினைப்பை நீர்க்கட்டி பிரச்னைகளை சரிசெய்ய வெந்தியமும், வெந்திய கீரையும் பயன்படுகிறது. தினமும் வெந்தியத்தை இரவில் ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் உண்ண வேண்டும். அடிக்கடி வெந்தய கீரையை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். 
 • ஆளி விதையில் அதிகளவு ஒமேகா மற்றும் புரத சத்து அதிகம் உள்ளது. இந்த ஆளி விதை குளுகோஸ் பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. இதனால் ஆளி விதை பொடியை தினமும் தண்ணீரில் அல்லது பழச்சாரில் கலந்து சாப்பிட்டு வந்தால் நீர்க்கட்டி பிரச்சனைகள் குணமாக்கப்படுகிறது.
pixabay

 • தினமும் காலை வெறும் வயிற்றில் எட்டு துளசி இலையை மென்று சாப்பிட்டு வரலாம் அல்லது துளசியை கொதிக்க வைத்து தினமும் காலை வெறும் வயிற்றில் அந்த தண்ணீரை அருந்தலாம்.
 • இலவங்கப்பட்டை இன்சுலின் செயல்பாட்டை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. பட்டையை உணவில் சேர்த்துக்கொண்டால் நீர்க்கட்டியினால் உண்டாகும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். இலவங்கப்பட்டையை பொடியாகி கொண்டு தேனீர் அல்லது காபி குடிக்கும் பொழுது அதில்  கலந்து சாப்பிடலாம். 

மேலும் படிக்க - இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றி இத்தனை விஷயங்களா ! அறிந்து பயன்பெறுங்கள் !

 • 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை, 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் 2 டம்ளர் குடித்து வர வேண்டும். இதனால் நீர்க்கட்டிகள் மறைந்து, அதனால் உண்டாகும் வலியும் குறைந்து விடும்.
 • சீமைச் சாமந்தியில் உள்ள உட்பொருட்கள் நீர்க்கட்டிகளை கரைக்க உதவுகிறது. சீமைச்சாமந்தி டீயை தினமும் 3 கப் குடித்து வர நீர்க்கட்டிகள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து விடும். 
pixabay

 • உடல் எடை அதிகரிப்பின் காரணமாகவும் பெண்களுக்கு நீர்கட்டி உருவாகின்றது. எனவே இதை கட்டுப்படுத்த தேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் கொஞ்சம் தேனை கலந்து ஒரு டம்ளர் அளவு குடிக்க வேண்டும்.

மேலும் படிக்க - பெண்கள் ஒற்றை காலில் கறுப்பு கயிறு கட்ட அறிவுறுத்துவது ஏன்? உண்மை காரணங்கள்!

 • இவ்வாறு குடிப்பதன் மூலம் உடல் எடை குறைக்கப்படுகிறது. உடல் எடை குறைவதன் மூலமாக நீர்க்கட்டிகளும் கரைகிறது.
 • நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும்  காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
pixabay

சிகிச்சை

உலகில் குழந்தைப்பேறு இல்லாத பெண்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு கர்ப்பக் குழாயில் கட்டிகள் ஏற்படுவதே முக்கியமாக காரணமாக உள்ளது. இதை குணப்படுத்துவதில் நவீன எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை முறை நல்ல பலனைத் தருவது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த சிகிச்சை முறையில் கருப்பையில் செலுத்தப்படும் நுண்ணியகமரா மூலம் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை சிறிய கட்டிகளாக வெளியே கொண்டு வரப்படுகிறது. இந்த சிகிச்சைக்கு பின்னர் 70-80% பெண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க - மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!