எடையை விரைவில் குறைக்க ஆயுர்வேதம் அளிக்கும் 5 எளிய வழிகள்!

எடையை விரைவில் குறைக்க ஆயுர்வேதம் அளிக்கும் 5 எளிய வழிகள்!

உடல் எடை அதிகமாக இருப்பது தற்காலத்தில் ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. அதிக கொழுப்பு உடலில் சேருவதால், நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற உபாதைகளுக்கு வழி வகுக்கும். சிலர் மன அழுத்தத்தோடு இருக்கும்போது, போர் அடிக்கும்போது, கோபப்படும்போது என்று பல நிலைகளில் அதிகமாக சாப்பிடுகிறார்கள். சரியான வாழ்க்கைமுறை, சரியான உணவு முறை, சரியான தூக்கமின்மை போன்ற பல காரணங்களினால், அவர்களையும் அறியாமல் உடல் பெருத்துவிடுகிறது. உடல் எடையை குறைக்க பல முறைகளை பின்பற்றி அலுத்து போய் விட்டீர்கள் என்றால் ஆயுர்வேத (ayurveda weight loss) முறையை எளிதில் பின்பற்றி பயன்பெறலாம்!

பழங்காலத்து மருத்துவ முறையாக இருந்தாலும், ஆயுர்வேதம் நமக்கு அதிகமான உடல் உபாதைகளில் இருந்து நம்மை விடுவிக்கிறது. ஆயுர்வேத மருத்துவம் ஒரு இயற்கை மருத்துவம் என்பதால், எந்தவித பக்கவிளைவுகளும் இருக்காது. மேலும், அலோபதி மருந்துகள் போல உடனே நோய் அறிகுறிகளை மட்டும் நீக்கிவிட்டு, பிறகு மறுபடியும் தோன்றுவதுபோல அல்லாமல், மெதுவாக வேலை செய்து, அடிப்படை காரணத்தை உடலில் இருந்து முற்றிலுமாக நீக்கி விடும். அதுவும், இயற்கையாகவே நடப்பதால், எந்த உபாதைகளும் இல்லாமல் சரியான உடல் வாகை அமைத்துத் தரும் ஆயுர்வேத மருத்துவம்.

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல்  எடையை குறைக்க பரிந்துரைக்கப்படும் சில இயற்கை பொருட்களை பார்க்கலாம்.

1. சோம்புத் தண்ணீர்

Pexels

ஆயுர்வேத மருத்துவத்தில் உடல் எடையைக் குறைக்க சோம்புத் தண்ணீரை பரிந்துரைக்கிறார்கள்.

செய்முறை:

ஒரு லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி, அதில் 2 தேக்கரண்டி சோம்புவை சேர்த்து ஆற விட வேண்டும். ஆறியதும் தினமும் பருகி வந்தால் உடல் எடை குறையும். 

சோம்பு உடல் எடை குறைய எப்படி உதவுகிறது?

 • பெரும்பாலும், உணவு உண்டபின் மறுபடியும் பசிப்பதைப் போல உணர்வீர்கள். அப்போது தான் ஏதாவது நொறுக்குத் தீனி இருக்கிறதா என்று பார்த்து உண்பீர்கள். அப்படி அடிக்கடி பசி தோன்றாமல் சோம்பு தண்ணீர் பசியை கட்டுக்குள் வைக்கும். தேவையில்லாத உணவை சாப்பிட மாட்டீர்கள்.
 • மேலும், ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை வெளியேற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தும். 
 • வேறு ஏதாவது நச்சுப் பொருள் உடலில் இருந்தால் அவற்றை நீக்கும் தன்மை கொண்டது சோம்புத் தண்ணீர். 
 • தூக்கமின்மையை சீராக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை வழங்கும்.
 • சோம்பு உடலில் பரிணாமத்தை சீராக்கி, கெட்ட கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும்.

2. திரிபலா

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க திரிபலா பெரிதும் உதவியாக இருக்கிறது. 

செய்முறை : 

1 தேக்கரண்டி திரிபலா சூரணத்தை சுடு தண்ணீரில் கலந்து, தேனுடன் பருகி வந்தால் வேகமாக உடல் எடை குறையும். 

திரிபலா பயன்கள் : 

 • திரிபலா உடலை சுத்தம் செய்கிறது. அதனால், குடல் ஆரோக்கியம் மேன்படுகிறது.
 • உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.

மேலும் படிக்க - பெண்களுக்கு இடுப்பு சதை அதிகரிப்பதற்கான காரணங்கள் & குறைப்பதற்கான எளிய வழிமுறைகள்!

3. குக்குலு

Pexels

குக்குலு பார்க்க பெருங்காயம் போல இருக்கும், இது ஒரு இந்திய மூலிகை பிசின். 

செய்முறை 1:

¼ தேக்கரண்டி குக்குழுவை நாக்கின் அடியில் வைத்துக்கொள்ளுங்கள். அது மெதுவாக கரையும். ஒரு நாளைக்கு 3 முதல் 4 முறை இப்படி சாப்பிடலாம். 

செய்முறை 2:

¼ தேக்கரண்டி குக்குழுவை ½ கப் தண்ணீரில் முதல் நாள் இரவு ஊற வைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீரை வடிகட்டி காலையில் குடித்து விடுங்கள். 

குக்குலு பயன்கள்

 • குக்குலு உடலில் கொலஸ்ட்ரால் அளவுகளை சீராக வைக்க உதவும். 
 • கல்லீரலில் இருந்து கொழுப்பை குறைக்கும். 
 • மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.
 • தைரொய்ட் சுரப்பதை சீராக்குவதால், உடல் இயக்கம் சரியாகி, உடல் எடை கட்டுக்குள் இருக்கும். 
 • உடலில் உள்ள கடுமையான கொழுப்பை குறைக்கக் கூடியது.

4. ஆளி விதை

ஆளி விதையை எதில் வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிடலாம். சாலட் செய்து அதில் சிறிது தூவி சாப்பிடலாம். ஏதாவதொரு பானம் அருந்துகிறீர்கள் என்றால் அதில் போட்டு பருகலாம்.

ஆளி விதை பயன்கள்:

 • கொலஸ்ட்ரால் அளவுகளை குறைத்து, இதயத்தைப் பாதுகாக்கும். 
 • இதில் உள்ள ஒமேகா 3 ஃபேட்டிக் அமிலம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.உடல் எடை விரைவாக குறையும்.

5. எலுமிச்சை சாறு

Pexels

தேனுடன் எலுமிச்சை சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும். 

செய்முறை 1:

1 டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 4 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்றாக கலந்து மூன்று முதல் நான்கு மாதங்கள் வரை பருகி வாருங்கள். 

செய்முறை 2:

1 டம்பளர் சுடு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். 4 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 மேஜைக்கரண்டி தேன்ஆகியவற்றை நன்றாக கலந்து பருகி வாருங்கள்.

எலுமிச்சைச் சாறின் பயன்கள்

 • உங்கள் உடல் மெட்டபாலிசத்தை நன்றாக வேலை செய்ய வைக்கும். அதனால், உங்கள் உடலில் உள்ள சக்தியை விரயம் செய்ய உதவி, புத்துணர்வாக வைக்கும். 
 • உங்களை நீரோட்டமாக வைத்துக்கொள்ளும். 
 • நீண்ட நேரம் பசி இல்லாமலும் பார்த்துக்கொள்ளும்.
 • எலுமிச்சை சாறில் அமிலத்தன்மை இருப்பதால், ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.  
 • மேலும், உடலில் உள்ள நச்சை வெளியேற்றும் தன்மை லுமிச்சை சாறுக்கு உண்டு.

மேல்  கூறியது மட்டுமின்றி ஒரு கப் முட்டைகோஸ் தினமும் சாப்பிட்டால் உடல் எடை குறையும். சாப்பாட்டிற்கு பதிலாக, முட்டைகோஸை வைத்து சாப்பிடலாம். இப்படி ஆயுர்வேத முறைகளில் எளிமையாக உடல் எடையை குறைக்க பல தீர்வுகள் இருக்கிறது. இருப்பினும், ஆயுர்வேத மருத்துவரை அணுகி, அவர் பரிந்துரைத்த பின்னர் தீவிரமாக மேலே குறிப்பிட்ட ஏதாவதொரு பொருளை எடை குறைக்க பயன்படுத்தலாம்.

அதை சாப்பிடுவதோடு நின்றுவிடாமல், உடற்பயிற்சி செய்ய வேண்டும். வாழ்க்கை முறையை சீராக வைக்க வேண்டும். அதாவது, சரியான தூக்கம், அளவான உணவு, போதிய உடற்பயிற்சி மேற்கொண்டால் உடல் நிச்சயம் அழகான வடிவில் மாறிவிடும். 

மேலும் படிக்க - மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!  

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!