கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்து நீளமான கூந்தலை பெற உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்துங்கள்!

கூந்தல் பிரச்சனைகளை சரிசெய்து நீளமான கூந்தலை பெற உருளைக்கிழங்கு சாறு பயன்படுத்துங்கள்!

மண்ணில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும், அடர்த்தியான, நீளமான தலைமுடியை பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, தவறான உணவு பழக்கம், தண்ணீர், ரசாயணம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும்.

மேலும் ரசாயணம் மிகுந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது கூந்தல் உடைந்து, முடி உதிர்வு ஆரம்பிக்கும். முடி உதிர்வு பிரச்சனைக்கு எவ்வித ரசாயணங்களையும் பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை கொண்டே சரிசெய்து விடலாம். உருளைக்கிழங்கை பயன்படுத்தி கூந்தல் தொடர்பான பிரச்சனைகளை எப்படி சரி செய்வது என இங்கு காண்போம்.

pixabay

முடி வளர்ச்சிக்கு

உருளைக்கிழங்கை தோலுரித்து அதன் சாற்றை எடுத்து கொள்ளவும். இந்த சாறை தலையில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் இலேசான ஷாம்பு கொண்டு தலைமுடியை கழுவவும். ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் பொழுதும் இந்த முறையை பின்பற்றுங்கள். உருளைக்கிழங்கில் (potato) வைட்டமின் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியை தூண்டும்.  

மேலும் படிக்க - பெப்பர்மிண்ட் எண்ணெய் மற்றும் ஆச்சர்யம் தரும் அதன் பயன்கள் !

உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி நீங்கிவிடும். உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கல்பிற்கு மிகவும் நல்லது.

முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு

இரண்டு முதல் மூன்று உருளைக்கிழங்கினை துருவி சாறு எடுக்கவும். அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கிளறவும். 30 நிமிடங்கள் தலையில் தேய்த்து ஊறவைத்துப் பின் முடியை அலசவும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முடி உதிர்தல் விரைவில் குறைந்து விடும். 

youtube

நரைமுடி நீங்க

உருளைக் கிழங்கின் (potato) தோலினை பீலர் அல்லது கத்தியினால் உரித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். அதில் இந்த உரித்த உருளைக் கிழங்கின் தோலினைப் போட்டு 20 நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் அதனை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். தலைக்கு ஷாம்பு போட்டு குளித்தபின் கடைசியாக இந்த நீரை கொண்டு அலசுங்கள். இது கூந்தலுக்கு இயற்கையான கருமை நிறத்தை தரும். இதனை வாரம் இரு முறை செய்தால் நரை முடிக்கு நல்ல பலனை கொடுக்கும். 

மேலும் படிக்க - சரும அழகிற்கு கமலாப்பழம் தோல் - வீட்டில் எளிய முறையில் பேஸ் பாக் செய்யலாம்!

பொடுகை நீக்க

உருளைக்கிழங்கினை பாதியாக நறுக்கி நன்றாக வேக வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அது ஆறியதும். தோல் நீக்கி நன்றாக குழைய பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இதனுடன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு  சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை அப்படியே ஹேர் பேக்காக போட்டு 40 நிமிடங்கள் வரை ஊறியதும் தலைக்கு குளிக்கலாம். வாரம் ஒரு முறை இப்படி செய்வதால் பொடுகு நீங்கிவிடும். 

pixabay

நீண்ட கூந்தலுக்கு

உருளைக் கிழங்கு சாறு (potato) , சோற்றுக் கற்றாழை, தேன் இவற்றை எடுத்து நன்றாக கலந்து உங்கள் தலைமுடியின் வேர்கால்களில் படும்படி தடவி மசாஜ் செய்யவும். பின் 2 மணி நேரம் ஊற  வைத்து தலையை அலசுங்கள். இதனை வாரம் 2 முறை செய்தால் வேர்கால்கள் பலம் பெற்று, முடி அடர்த்தியாக வளர செய்கிறது.

முடி வெடிப்பு, அரிப்பு பிரச்சனைகளுக்கு

அரை கப் உருளைக்கிழங்கு சாறுடன், அரைகப் வெங்காய்ச் சாறு கலந்து தலை முழுவதும் தடவி ஒரு மணி நேரம் ஊற வேண்டும். இப்படி செய்வதானல் முடியின் வேர்கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியை அதிகரிக்கும். உருளைக்கிழங்கில் இருக்கும் அமிலம் தலையில் ஏற்ப்பட்டிருக்கும் பாக்டீரியாவை அழிக்க வல்லது. இதனால் அரிப்பு பிரச்சனைகள், நுனி முடி வெடிப்பு இருந்தாலும் விரைவில் நிவாரணம் கிடைக்கும். 

மேலும் படிக்க - குளிர்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் சுரத்தை போக்க வீட்டு வைத்தியம்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!