கடனை நினைத்து கலங்க வேண்டாம்.. தீராத கடனையும் தீர்த்து வைக்கும் பைரவ ரகசிய பரிகாரம் !

கடனை நினைத்து கலங்க வேண்டாம்.. தீராத கடனையும் தீர்த்து வைக்கும் பைரவ ரகசிய பரிகாரம் !

இந்த பூமியில் கடன் இல்லாமல் வாழும் மனித உயிர்கள் என்று எதுவும் இல்லை. எல்லோருக்குமே கடன் சுமை இருக்கத்தான் செய்கிறது. ஏழைகளுக்கு ஆயிரங்களில் கடன் , மத்தியதர வர்க்கத்திற்கு லக்ஷங்களில் கடன், மேல்தட்டு வர்க்கத்தினருக்கு கோடிகளில் கடன். ஆகவே நாம் மட்டுமே கடன் வாங்கி விழி பிதுங்கி நிற்கிறோம் என்று கவலை கொள்ள வேண்டாம்.

எப்படிப்பட்ட தீராத கடன் சுமையையும் தீர்த்து வைத்து உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் சக்தி வாய்ந்த பரிகாரம் பைரவருக்கு (bairava) நாம் செய்யும் பரிகாரம். சனிக்கிழமை மாலையில் இதனை செய்ய வேண்டும்.

 

Youtube

யாருக்கு கடன் இருக்கிறதோ அவர் நீண்ட நாள் பயன்படுத்திய ஆடையை எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை துவைத்து சுத்தமாக்கி காய வைத்துக் கொள்ளவும். வெண்மையான நிறம் உத்தமமானது. உதாரணம் ஆண்கள் அணியும் வேஷ்டி போன்றவை.

இதனை 10cm நீளம் 10cm அகலம் கொண்ட துண்டுகளாக கிழித்துக் கொள்ள வேண்டும். இப்படி 16 துண்டுகள் நீங்கள் செய்ய வேண்டும். இதன் உடன் கருப்பு நூல் கண்டும் மற்றும் மிளகும் கடையில் வாங்கி வைக்க வேண்டும். சமையல் அறையில் உள்ள மிளகை எடுக்க கூடாது.

 

Youtube

ஒரு சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் எட்டு மணிக்குள் இந்த 16 சதுர துண்டுகளை எடுத்து அதில் இரண்டில் மட்டும் 27 மிளகுகளை நிரப்பி கருப்பு நூலினால் கட்டிக் கொள்ள வேண்டும். இதனை எடுத்துக் கொண்டு கோயில் செல்லவும்.                                                                                   

ஒரு தேங்காய் வாங்கி உடைத்து பைரவ பெருமான் சன்னதி முன் வைத்து அந்த தேங்காய் துண்டிற்குள் இந்த 27 மிளகு வைக்கப்பட்ட துணியை வைத்து அந்த தேங்காய் நிறையும் வரை நல்லெண்ணெய் ஊற்றவும். பின்னர் மிளகு பொட்டலத்தில் தீபம் ஏற்றி கடன்களை குறைக்க அருளுமாறும் வருமானம் அதிகரிக்க வேண்டும் என்று பைரவரிடம் மனம் உருகி வேண்டுங்கள்.

Youtube

இப்படி தொடர்ச்சியாக எட்டு சனிக்கிழமைகள் செய்து வாருங்கள். நடுவே தீட்டு காரணமாக நின்றாலும் எட்டு சனிக்கிழமைகள் கணக்கிற்கு விளக்கேற்றுங்கள். எட்டாவது சனிக்கிழமை அன்று பீட்ரூட் சாதம் செய்து கோயிலில் உள்ளவர்களுக்கு பிரசாதம் தாருங்கள். எட்டாவது சனிக்கிழமை நிறைவடைந்தது முதல் 90 நாட்களுக்குள் உங்கள் வேண்டுதல் நிறைவேறும்.

கடன்கள் குறையும். கடன்களை அடைக்கும் அளவிற்கு வருமானம் அல்லது பணவரவு வந்து உங்களை சேரும். இந்த பரிகாரத்தை கணவனுக்காக மனைவி செய்யலாம். தந்தைக்காக மகள் அல்லது சகோதரனுக்காக சகோதரி செய்யக் கூடாது. சமையல் அறையில் உள்ள மிளகை பயன்படுத்தக் கூடாது.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                           

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!