logo
ADVERTISEMENT
home / வாழ்க்கை
பாரம்பரிய மருத்துவ குணங்கள் கொண்ட வேப்ப எண்ணெய்யின் ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள்!

பாரம்பரிய மருத்துவ குணங்கள் கொண்ட வேப்ப எண்ணெய்யின் ஆரோக்கிய மற்றும் அழகு நன்மைகள்!

ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவத்தில் வேப்ப எண்ணெய் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெய் என்பது வேப்ப மரத்தின் பழ விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் ஆகும். வேப்ப பழங்களை வெயிலில் உலர்த்தி அதன் விதையை எடுத்து அரைத்தால் வேப்ப எண்ணெய் கிடைக்கும். 

ஒரு வித மணமும், கசப்புத்தன்மையும் உடைய இந்த எண்ணெய் மருத்துவக் குணமுடையது. விதைகளை அரைத்த பின் கிடைக்கும் சக்கை வேப்பம் புண்ணாக்கு எனப்படும். இது ஒரு சிறந்த மண்ணுக்கான உரமாகவும் பூச்சிக்கொல்லியாகவும் பயன்படுகிறது.

வேப்ப எண்ணெய்யின் ஆரோக்கிய நன்மைகள் (Health benefits )

இந்திய துணைக் கண்டத்தில் முக்கியமாகக் காணப்படும் வேப்பமரத்தின் விதைகளிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வேப்ப எண்ணெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. வேப்ப எண்ணெய்யை (neem oil) தினமும் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இங்கு காண்போம். 

ADVERTISEMENT

twitter

புற்றுநோயைத் தடுக்கிறது (Prevents cancer )

வேப்ப எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. இதை  தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்றுநோய்கள் உள்ளிட்ட அனைத்து புற்றுநோய்களும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் வெகுவாக குறைகிறது. வேம்பில் உள்ள முக்கிய அங்கமாக இருக்கும் நிம்பிடைட்  தான் இதற்கு முக்கிய காரணம். மேலும் வேப்ப எண்ணெய்யில் உள்ள சக்திவாய்ந்த புற்றுநோய் எதிர்ப்பு மற்றும் ஹீமோ பாதுகாப்பு பண்புகள், புற்றுநோய்களின் உயிரணு சுழற்சியை இடைமறித்து செயல்படுகிறது. இதனால் அவற்றின் வளர்ச்சி மற்றும் பரவுதல் தடுக்கப்படுகிறது. 

கெட்ட சுவாசம் (Bad breath)

அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேம்பிற்கு உண்டு. கெட்ட சுவாசம், ஆஸ்துமா போற்றவற்றை குணப்படுத்த வெப்ப எண்ணெய் பயன்படுகிறது. அப்ளைட் சயின்சஸ் அண்ட் டெக்னாலஜி இன்டர்நேஷனல் காப்பகத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் இலைகள் சுவாசப் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. வேப்ப விதைகள், பழங்கள், வேர்கள் மற்றும் பட்டை ஆகியவை பயனுள்ளவையாக இருப்பதாகவும், ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் வெப்ப எண்ணெய் காலங்காலமாக பயன்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

மேலும் படிக்க – அனைத்து வித சரும பிரச்சனைகளையும் நீக்க கடலை மாவு ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது (Boosts immune system )

நோயெதிர்ப்பு சக்தி என்பது நமது உடலின் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கிய தொடக்கம் ஆகும். இது பல்வேறு பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பிற நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. வேம்பு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.  வேம்பில் இருந்து பெறப்படும் வேப்ப எண்ணெயில் லிம்போசைட்கள் மற்றும் மோனோசைட்டுகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இவை இரண்டும் வெள்ளை இரத்த அணுக்களின் ஒரு வகை ஆகும். வேப்ப எண்ணெயில் அடிக்கடி உணவில் சேர்த்து வர தொற்று நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராடும் பண்பு இயற்கையிலேயே கிடைக்கிறது. 

pixabay

ADVERTISEMENT

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் (Beneficial to liver health )

நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் சென்ஸிட்டிவ்வான உறுப்பான கல்லீரலை காப்பாற்ற வேப்ப எண்ணெய் பயன்படுகிறது. வேம்பு பூ மற்றும் வேப்ப எண்ணெய்யை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் 5 கிராம் உலர்ந்த வேம்புப் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு, அதனுடன் சில துளிகள் வேப்ப எண்ணெய் சேர்த்து மூடி வைத்திருந்து வடிகட்டிச் சாப்பிட்டு வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி நீக்கி கல்லீரலை நன்கு இயக்குவிக்கும்.

கொசு விரட்டியாக செயல்படுகிறது (Neem Oil as a Mosquito Repellent)

மலேரியா, டெங்கு, யானைக்கால் வியாதி மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் உருவாவதற்கு காரணமாக கொசுக்கள் இருக்கின்றது. வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை (neem oil) 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்து கொண்டு உறங்கினால் கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம். கொசுக்கள் தொல்லை நீங்க கொசு உற்பத்தியாகும் தேங்கியிருக்கும் நீர்நிலை தென்னை சிட்டைகள் போன்ற இடங்களில் வேப்ப எண்ணெய்யை தெளித்து வந்தால் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுத்தொல்லை நீங்கி சுகாதாரமாக இருக்கலாம்.

பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது (Promotes dental health )

பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேம்பு முக்கிய பங்காற்றுகிறது. வேப்ப மரக் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கினால் அது பற்களைத் தூய்மைப்படுத்தும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. அதேபோல காலையில் எழுந்ததும் பிரஷ் செய்யும் முன் வேப்ப எண்ணெய்யை கொண்டு வாய் கழுவிவிட்டு பிரஷ் செய்தால் பல் உறுதியாக இருக்கும். சொத்தை பல்லால் அவதிப்படுபவர்கள் வேப்பம் எண்ணெய் சின்ன பஞ்சில் நனைத்து பல்லில் வைத்தால் பல் வலி உடனே தீர்ந்துவிடும். ஈறுகளைப் பாதுகாப்பதற்கு வேப்ப எண்ணெய் பெரிதும் உதவும். வாயில் உண்டாகும் கிரிமிகளை ஒழிக்க வேப்ப எண்ணெய் பெரிதும் பயன்படுகிறது. 

ADVERTISEMENT

pixabay

தசைவலிக்கு உதவுகிறது (Helps for muscular pain)

தசைவலி நோயாளிகளுக்கு வேப்ப எண்ணெய் தடவினால்  வலி எளிதில் குணமாகும். பாலிசாக்கரைடுகளை, கேட்டச்சின்கள்  மற்றும் ஃபிளாவனாய்டுகளின் வலி நிவாரணிகளுக்கு வேம்பு பயனுள்ளதாக இருக்கிறது. தசைவலி, கால் சுளுக்கு போன்ற பாதிப்புகளுக்கு வலி இருக்கும் இடத்தை சுத்தமான துணியில் துடைத்து  வேப்ப எண்ணெய் மசாஜ் செய்வது நல்லது. இதனை தொடந்து செய்துவர தசைவலி முற்றிலும் குணமாகிவிடும். வேப்ப எண்ணெய்யை மிதமாக சூடு செய்தும் மசாஜ் செய்யலாம்.

அரிப்பை நீக்குகிறது (Relieves itching )

தடிப்புத் தோல் அழற்சி, அரிக்கும் தோலழற்சி மற்றும் பிற தோல் வியாதிகளின் அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்க வேப்ப எண்ணெய் உதவுகிறது. தோலில் இருக்கும் செல்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களாலும், பரம்பரை காரணத்தாலும் சிலருக்கு சோரியாசிஸ் எனப்படும் நோய் ஏற்படுகிறது. இதன் தாக்கத்தை குறைப்பதில் வேப்ப எண்ணெய் சிறப்பாக செயல்படுகிறது. இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்னையை குணப்படுத்தலாம்.

மேலும் படிக்க – மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!

ADVERTISEMENT

காயங்களுக்கு சிகிச்சையளிக்கிறது (Treats wounds )

வேப்ப எண்ணெய் காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது. பாத நோய்கள் மழைக்காலங்களில் சேற்றில் இருக்கும் கிருமிகளின் தொற்று சிலருக்கு ஏற்படுவதால் சேற்றுபுண்கள் ஏற்படுகின்றன. ஷூ காலணிகள் அதிகம் உபயோகிப்பவர்களுக்கு பாதங்களில் கிருமி தொற்று ஏற்பட்டு படர் தாமரை போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை சீக்கிரம்  குணமாக்க தினமும் சிறிது வேப்ப எண்ணையை பாதித்த இடங்களில் தடவி வந்தால் போதும். விரைவில் அனைத்து வித காயங்களும் ஆறிவிடும். 

pixabay

மூட்டு வீக்கத்தை தடுக்கும் (Prevent joint inflammation)

மூட்டு  வீக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலரை பாதிக்கிறது. இதற்கு வேப்ப எண்ணெய் (neem oil) , விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு எடுத்து சூடாக்கி மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் தடவ  குறையும். அல்லது நொச்சி இலை, வெள்ளைப் பூண்டு, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து அதனை வேப்ப எண்ணெய் விட்டு காய்ச்சி வடிக்கட்டி அந்த எண்ணையை மூட்டு வீக்கம் உள்ள பகுதியில் தடவி வந்தால் வீக்கம் குறைந்து வலியும் இருக்காது. 

ADVERTISEMENT

சரும நன்மைகள் (Skin benefits )

ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி பல்வேறு அழகு நன்மைகளுக்கும் வேப்ப எண்ணெய் பயன்படுகிறது. வேப்ப எண்ணெயில் தோல் மற்றும் கூந்தலுக்கு அதிக நன்மை பயக்கும் பல பொருட்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. எனவே இது பலவிதமான அழகு சாதனங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெய்யை கொண்டு உங்கள் அழகை எப்படி மெருகேத்துவது என்பது குறித்து இங்கு காண்போம். 

முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கிறது (Treats acne )

முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் முகத்தை வறட்சியில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. இந்த சுரப்பிகள்  தூசு, அழுக்கு போன்றவற்றால் அடைபடும் போது கிருமி தொற்று ஏற்பட்டு முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இதனை சரிசெய்ய வேப்ப எண்ணெய்யை எடுத்து அதனை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படுத்தப்படுவதோடு, முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும். மேலும் பருக்களால் உண்டாகும் கிருமித்தொற்றை கட்டுப்படுத்தி முகப்பருக்கள் வருவதை தவிர்க்க முடியும். 

ADVERTISEMENT

pixabay

வறண்ட சருமத்திற்கு ஏற்றது (Good for dry skin)

உடலில் நீர்ச்சத்து அதிகம் இல்லாத போது சருமம் வறண்டு, வெடிப்பு ஏற்பட்டு கடினமாக மாறும். வேப்ப எண்ணெய் சரும வறட்சியை நீக்கும். வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் ஆகியவை சருமத்தை நன்றாக பாதுகாக்கும். இந்த மூன்று எண்ணெய்களையும் நன்றாக கலந்து சருமத்தில் அப்ளை செய்து ஊறவைத்து சில நிமிடங்கள் கழித்து குளிக்கலாம். இதனை தொடர்ந்து செய்து வர சரும வறட்சி நீங்குவதோடு குளிர்கால பிரச்சினைகளும் தீரும்.

சுருக்கங்களுடன் போராடுகிறது (Fight with wrinkles)

வயது அதிகரிக்கும் போது நமது சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. வேப்ப எண்ணையில்  ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் கரட்டினாய்டு சத்துகள் அதிகம் இருக்கின்றன. எனவே வேப்ப எண்ணையை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும். வேப்ப எண்ணெய்யைத் தொப்புளை சுற்றித் தடவுவதன் மூலம் முகத்தில் உள்ள  கரும்புள்ளிகள், சரும சுருக்கங்கள் , முகப்பருக்கள், தேம்பல்கள் ஆகியன நீங்கும்.

ADVERTISEMENT

pixabay

வடுக்கள் மறைய உதவுகிறது (Help to fade scars)

சருமத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், இறந்த செல்கள், மாறும் பருக்களால் உண்டாகும் வடுக்கள் போன்றவற்றை நீக்க வேப்ப எண்ணெய் உதவுகிறது. உடலில் அடிபடும் போது ரத்த காயங்கள் ஏற்படுகின்றன. இந்த ரத்த காயங்களை சீக்கிரத்தில் ஆற்றும் தன்மை வேப்ப எண்ணெய் கொண்டுள்ளது. காயங்களில் கிருமி தோற்று ஏற்படுவதையும் தடுத்து, காயங்களை சீக்கிரம் ஆற்றுகிறது. காயங்களால் உடலில் அழுத்தமான தழும்புகள் ஏற்படாமல் இருக்க தொடர்ந்து அந்த இடங்களில் வேப்ப எண்ணையை தடவுவது நல்லது.

பூஞ்சைகளை எதிர்த்துப் போராடுகிறது (Fight off food fungus)

வேப்ப எண்ணெய் நுண்ணுயிர் எதிர்ப்பிகளாக செயல்படுவதால்  ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவத்தின் சில முறைகளில் வேப்ப எண்ணெய் நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெயில்  இரண்டு பெரிய சேர்மங்களான அசாதிராச்ச்டின் மற்றும் ட்ரைடர்பெனாய்டு உள்ளது. இது வேப்ப எண்ணெய்க்கு அதன் கிருமி நாசினிகள், பூஞ்சை காளான், ஆண்டிபிரைடிக் மற்றும் ஆண்டிஹிஸ்டமைன் பண்புகளைக் கொடுக்கின்றன.  எனவே பூஞ்சை மற்றும் ஆன்டிவைரல் என பல நுண்ணுயிர் விகாரங்களுக்கு எதிராக வேப்ப எண்ணெய் பயன்படுத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

pixabay

கொலாஜனை தூண்டுகிறது (Stimulates collagen)

நம் உடலில் இருக்கும் ஒரு வகையான புரதமே கொலாஜன். சரும பளபளப்பிற்கு கொலாஜனே முக்கிய காரணம். சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றான கொலாஜனை ஊக்குவிக்கும் தன்மை வேம்பிற்கு உண்டு. வேப்ப எண்ணெயில்  அழற்சி எதிர்ப்பு மற்றும் காயம் குணப்படுத்தும் பண்புகள் உள்ளதால் சோர்வடைந்த உங்கள் சருமத்தை புத்துயிர் பெறச் செய்யும். மேலும் வைட்டமின்கள் ஏ, சி, டி மற்றும் ஈ ஆகியவை நிறைந்து இருப்பதால் சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்தி சருமத்தினை மென்மையாக வைக்கிறது.  

மேலும் படிக்க – நீண்ட கால திருமண உறவில் கணவனும், மனைவியும் அன்பு நிறைந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது?

ADVERTISEMENT

கூந்தல் நன்மைகள் (Benefits for hair)

வேப்ப எண்ணெயில் அதிக அளவு கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன, அவை பல தோல் மற்றும் முடி பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. வேப்ப எண்ணெய் உங்கள் தலைமுடியை பாதுகாக்க பல வழிகளில் உதவுகிறது. 

பொடுகை நீக்க (Rid of dandruff)

பொடுகு, உலர்ந்த அல்லது மெல்லிய உச்சந்தல் போன்ற பிரச்சனைகளுக்கு வேப்ப எண்ணெய் பெரும்பாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இயற்கை தீர்வாகும். கேண்டிடா  போன்ற பல பூஞ்சைகளுக்கு எதிராக போராட வேப்ப எண்ணெய் பயனுள்ளதாக இருக்கும். மேலும் பொடுகுத் தொல்லை ஏற்படும் போது அத்துடன் தலையில் சிவப்பு நிற காயங்கள், அரிப்பு மற்றும் எரிச்சல் போன்றவை ஏற்படுகிறது. வேப்ப எண்ணெயில் நிம்பிடின், பூஞ்சை காளான், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆண்டிசெப்டிக் போன்ற பண்புகள் நிறைந்துள்ளன. இந்த பண்புகள் தலையில் உள்ள பொடுகு மற்றும் நமைச்சல்களை நீக்க சிறந்த தீர்வாக அமையும். 

pixabay

ADVERTISEMENT

முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது (Encourages hair growth)

கறிவேப்பிலை, மருதாணி, வெந்தயக்கீரை, கரிசலாங்கண்ணி, கீழாநெல்லி இவை எல்லாம் தலா 1 பிடி எடுத்து நன்கு அரைத்து ஒரு கடாயில் மூழ்கும் வரை நல்லெண்ணெயுடன் சேர்த்து ஓசை அடங்கும் வரை காய்ச்சவும். கடைசியில் சிறிதளவு வெட்டி வேர் போட்டு இறக்கவும். தலையில் தேய்த்து மசாஜ் செய்யவும். உடல்நலமின்றி, சத்துக்குறைபாடால் பாதிக்கப்பட்டோருக்கு தலைமுடி பலவீனமாகிறவர்களுக்கு இது மிகச் சிறந்த சிகிச்சை.

முடி பிளவை நீக்குகிறது (Removes split ends)

கூந்தல் நன்கு வளர்வதற்கு போதுமான விட்டமின்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் தேவை. இதில் கூந்தலில் செயல்படுத்தும் எண்ணெய் ஒரு  முகவராக மட்டுமே செயல்படுகிறது. எண்ணெய் மசாஜ் செய்வதனால் உச்சந்தலையைச் சுத்தப்படுத்தி துளைகள் திறக்க காரமாகிறது. வேப்ப எண்ணெய்யை தலைக்கு குளிக்கும் போது தேய்த்து குளித்து வந்தால் முடி நன்கு வளரும் . மேலும் வேப்ப எண்ணெய்யில் இருக்கும் கசப்பு தன்மையானது முடி பிளவு பிரச்னையை சரி செய்கிறது. 

pixabay

ADVERTISEMENT

வலுவான வேர்களுக்கு (Promotes healthy scalp)

வேப்ப எண்ணெய் உச்சந்தலையை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது. அத்துடன் வேப்ப எண்ணெய் உச்சந்தலையில் இருக்கும் நுண்ணுயிரிகளிடமிருந்து எந்தவித இடையூறும் இல்லாமல் முடியின் வேர்பகுதியை நன்கு வளரச் செய்கிறது. மேலும் இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முடியை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. வேப்ப எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் அடிக்கடி மசாஜ் செய்வதால் முடி அடர்த்தியாகவும், வலுவாகவும் மாறும். 

முடி அமைப்பை மேம்படுத்த (Improves hair texture neem oil)

ஷாம்பூக்கள் உட்பட பல முடி பராமரிப்பு பொருட்கள், வேப்ப எண்ணெயை அதன் மருத்துவ குணங்கள் காரணமாக ஒரு முக்கிய பொருளாக பயன்படுத்துகின்றன. முடி வளர்ச்சி மற்றும் அமைப்பை மேம்படுத்த இவை வேப்ப எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. வேப்ப எண்ணெயைக் கொண்ட ஷாம்புகள் தலை பேன்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேப்ப எண்ணையுடன் தேங்காய் எண்ணைய் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் ஊறவைத்தபின்னர் குளித்து வர, நீண்ட நாட்களாக இருந்த ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லை குறையும்.

pixabay

ADVERTISEMENT

வேப்ப எண்ணெயை பயன்படுத்துவதும் விதம் (How to use neem oil )

பல தோல் மற்றும் உச்சந்தலையில் நிலைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது. நமது சரும அழகு மற்றும் ஆரோக்கியத்திற்கு வேப்ப எண்ணெய்யை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து இங்கு காண்போம். 

  • வாரம் ஒரு முறை உடம்பில் வேப்ப எண்ணெய் தேய்த்து குளித்து வர தோல் சுருக்கம் நீங்கி வயது முதிர்வை குறைக்கும். மேலும் வேப்ப எண்ணையை தோலில் தடவுவதால் தோல் மேன்மையடையும்.
  • வேப்ப எண்ணெய்,  ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் உச்சந்தலை மற்றும் கூந்தலில் நன்றாக மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர முடி செழித்து வளரும். 
  • வேப்ப எண்ணையை காலை, மாலை இருவேளைகளிலும் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
  • தினமும் தூங்க செல்லும் முன்னர் சருமத்தில் வேப்ப எண்ணெய்யை தடவ வேண்டும். இதனால் பருக்கள் மற்றும் கொப்புளங்கள் நீங்கி முகம் பளிச்சிடும்.

pixabay

ADVERTISEMENT
  • வேப்ப எண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். உங்கள் சருமத்தில் அரிப்பு ஏற்படும் இடத்தில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி உங்கள் சருமம் எண்ணெய் உறுஞ்சும் வரை மசாஜ் செய்யுங்கள். சருமம்  பிரகாசமடையும். 
  • வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து கொள்ளுங்கள். முடி வளர்ச்சியை அதிகரிக்க இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யுங்கள். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து நல்ல ஷாம்பூ பயன்படுத்தி அலசினால் கூந்தல் மிருதுவாகும்.
  • தினமும் சிறிது வேப்ப எண்ணெய் சாப்பிட்டால் நீரிழிவு எனும் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். 
  • குளிர்காலத்தில் வேப்ப எண்ணெயை சூடாக்கி அதில் கட்டி கற்பூரத்தை பொடித்துப் போட்டு அந்த எண்ணெயை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்றாக சூடு பறக்க தேய்த்தால் வறட்சி நீங்கும்.

கேள்வி பதில்கள் (FAQ’s)

வேப்ப எண்ணெயின் பக்க விளைவுகள் என்ன? (What are the side effects of neem oil?)

வேப்ப எண்ணெய் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும்,  சில கடுமையான பக்க விளைவுகளையும் தரவல்லது. அதாவது வாந்தி, வயிற்றுப்போக்கு, மயக்கம், இரத்தக் கோளாறுகள், வலிப்பு, கோமா, மூளைக் கோளாறுகள் மற்றும் மரணம் ஆகியவை அடங்கும். ககர்ப்ப காலத்தில்  வேப்ப எண்ணெய் மற்றும் வேப்பம் பட்டை போன்றவை பாதுகாப்பற்றவை.அவை கருச்சிதைவை கூட ஏற்படுத்தும். 

twitter

வேப்ப எண்ணெயை நேரடியாக தோலில் பயன்படுத்த முடியுமா? (Can neem oil be used directly on the skin?)

முகப்பரு அல்லது அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் பிரச்சினைகளுக்கு ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை சருமத்தில் நேரடியாக வேப்ப எண்ணெய்யை தடவலாம். உங்கள் தோலில் நீர்த்த வேப்ப விதை எண்ணெயை நீங்கள் பயன்படுத்தக்கூடாது. உங்கள் சருமத்திற்கு எதிர்மறையான வினை இல்லை என்பதை உறுதிப்படுத்த, சருமத்தின் ஒரு சிறிய பகுதியில்  மிகச் சிறிய அளவு வேப்ப எண்ணெய்யை எடுத்து முயற்சிக்கவும்.

ADVERTISEMENT

வேப்ப எண்ணெய் எதைக் கொல்லும்? ( What does neem oil kill?)

வேப்ப எண்ணெய் பூச்சிக்கொல்லியாக செயல்படுகிறது. செடிகளில் இருக்கும் பூச்சிகள், பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகள், காயங்களில் இருக்கும் பூஞ்சைகள் உள்ளிட்டவற்றை அழிக்கும் தன்மை வேப்ப எண்ணெய்க்கு உள்ளது.  ஒயிட்ஃபிளை, அஃபிட்ஸ், ஜப்பானிய வண்டுகள், அந்துப்பூச்சி லார்வாக்கள், சிலந்திப் பூச்சிகள் உள்ளிட்ட பல பூச்சிகளைக் கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

10 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT