அமெரிக்காவில் நண்பர்களுடன் அசைவ விருந்தில் நயன்தாரா... கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

அமெரிக்காவில் நண்பர்களுடன் அசைவ விருந்தில் நயன்தாரா... கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

நடிகை நயன்தாரா அசைவ உணவுடன் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இருவரும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருகின்றனர். 

நானும் ரவுடி தான் படத்துக்குப் பின்னர் நயன்தாரா - விக்னேஷ் சிவன் காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் (nayanthara) 35 வது  பிறந்தநாளை கொண்டாட இருவரும் அமெரிக்கா சென்றனர். 

அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை விக்னேஷ் சிவன் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். நயன்தாரா ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் கூறி இருந்தனர். இந்நிலையில்  அங்கு நண்பர்களுடன் தேங்க்ஸ் கிவ்விங் டே கொண்டாடி இருக்கிறார். 

மேலும் படிக்க - காதலன் விக்னேஷ் சிவனுடன் நியூயார்க்கில் நடிகை நயன்தாரா ... வைரலாகும் புகைப்படங்கள்!

twitter

அதற்காக விருந்து ஏற்பாட்டில் கோழி வறுவலை கையில் எடுத்து மாஜிக் செய்வது போன்று நயன்தாரா அவரது தோழியுடன் விளையாடுகிறார். இந்த வீடியோ காட்சிகளை நயன்தாரா அவரது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

மேலும்  நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த இந்த பார்ட்டியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளன. தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா, நெற்றிக்கண் மற்றும் ஆர்.ஜே.பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடிக்க உள்ளார். 

மேலும் படிக்க - ரம்யாபாண்டியன் பாணியில் இறங்கிய நடிகை நந்திதா : சேலையில் சிலிர்க்க வைக்கும் புகைப்படங்கள்!

வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுடன் (nayanthara) ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இந்தப் படத்தின் தொடக்க விழா கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளாத நடிகை நயன்தாரா அசைவ உணவுடன் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

twitter

முன்னதாக மூக்குத்தி அம்மன் படப்பிடிப்பு தொடங்கும் போது நயன்தாரா (nayanthara) சைவத்துக்கு மாறி விரதம் இருப்பார். அவரை தொடர்ந்து ஒட்டு மொத்த படக்குழுவும் சைவத்துக்கு மாறிவிட்டதாகவும் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் நடிகை நயன்தாரா அசைவ விருந்தில் உற்சாகமாக இருப்பதை பார்த்த நெட்டிசன்கள்  “மூக்குத்தி அம்மன் படத்துக்கு விரதம் என்று சொன்னார்களே அது இது தானா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

மேலும் இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் வழக்கம் போல் நயன்தாராவின் அழகை வியந்து பாராட்டி கமெண்ட் பதிவிட்டு வரும் நிலையில், ஒருசிலர் தர்பார் படத்தின் டப்பிங் பணிக்கு செல்லுங்கள் என்று அவருக்கு ஆலோசனையும் கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க - சீக்கிரமே டும் டும் டும் ! காதலரை மணக்கவிருக்கும் நிக்கி கல்ராணி !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!