கண்ணாடி அணிவதால் ஏற்பட்ட தழும்புகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

கண்ணாடி அணிவதால் ஏற்பட்ட தழும்புகள் மறைய இதை ட்ரை பண்ணுங்க..!

ஆண்கள், பெண்கள் இருவருமே கண்ணாடி அணிந்து கொள்ளும் எண்ணிக்கையின் அளவு அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதற்கு என்ன காரணம் என்றால் கண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உடலில் போதிய அளவு இல்லை என்பதுதான். 

இதனால் சிறு வயதிலேயே கண்பார்வை குறைபாடு பிரச்சனையை அதிகளவு சந்திக்கின்றன.  கண்ணாடி தொடர்ச்சியாக அணிபவர்களுக்கு அவர்களின் மூக்கின் மேற்பகுதியில் இருபக்கமும்  தழும்புகள் பதிந்துவிடும். 

இது முகத்தின் அழகை கெடுக்கும் வகையில் உள்ளது. இதுபோன்று கண்ணாடி அணிவதினால் ஏற்படும் தழும்பை (spectacle marks) வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு எப்படி மறைப்பது என்பது குறித்து இங்கு காண்போம். 

pixabay

வெள்ளரிக்காய் : தோல் சீவிய வெள்ளரிக்காய் பாதியையும், ஒரு தக்காளியையும் எடுத்து மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்து  கிண்ணத்தில் எடுத்து கொள்ள வேண்டும். இதனுடன் கிளிசரின் சேர்த்து நன்றாக கலந்து மூக்கில் ஏற்பட்டுள்ள கோடுகள் மீது இந்த பேஸ்ட்டை அப்ளை செய்யுங்கள். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும். 

மேலும் படிக்க - சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு வாழைப்பழத் தோல்!

உருளைக்கிழங்கு : உருளைக்கிழங்கை தழும்புள்ள இடத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால், கண்ணாடி போடுவதால் ஏற்படும் தழும்புகள் (spectacle marks) மறையும். இவ்வாறு வாரம் 4 நாட்கள் செய்ய வேண்டும்.

எலுமிச்சை சாறு : எலுமிச்சை சாறும் கருமையான தழும்புகளை போக்க வல்லது. எலுமிச்சை சாற்றினை பஞ்சில் நனைத்து, தழும்புகள் உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்து 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். அதன் பின்னர் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் கருமை நிறம் மறையும்.

pixabay

கற்றாழை : கற்றாழை ஜெல்லும் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை போக்குவதற்கு சிறந்த பொருள். ஏனெனில் அதிலும் கிளின்சிங் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே இதுவும் தழும்புகள் மற்றும் வடுக்களை போக்குவதற்கு வல்லது. கற்றாழை ஜெல்லுடன் மஞ்சள் தோல் கலந்தும் பயன்படுத்தலாம். 

பாதாம் எண்ணெய்  : பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ அதிகம் இருப்பதால் அது சருமத்திற்கு மிகவும் சிறந்தது. பாதாம் எண்ணெயுடன் தேன், மில்க் க்ரீம், ஓட்ஸ் சேர்த்து பாதிக்கப்பட்ட இடத்தில் தினமும் இரவில் படுக்கும் முன் தடவி காலையில் கழுவ வேண்டும். இதனை தொடர்ச்சியாக செய்தால் கண்ணாடி அணிவதால் ஏற்படும் தழும்புகளை (spectacle marks) போக்கலாம்.

தேன் : தேன் பாரம்பரியமாக பல ஆண்டுகள் தோல் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது. சரும திசுக்களுக்கு ஊட்டமளித்து காயங்களுக்கு சிகிச்சையளிக்கிறது. மேலும் சருமத்தை பிரகாசம் மற்றும் ஈரப்பதமாக்குகிறது.

மேலும் படிக்க - வளர் இளம்பெண்கள் சாப்பிட வேண்டிய முக்கிய ஆரோக்கிய உணவுகள்!

ஒரு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் பால் கலந்து தழும்பு இருக்கும் இடத்தில் தினமும் இரவு தூங்குவதற்கு முன்  தடவி மறுநாள் காலை கழுவி வர வேண்டும். விரைவில் மூக்கு கண்ணாடி தழும்பு மறைய தொடங்குவதை நீங்களே கண்கூடாக காணலாம்.

pixabay

தண்ணீர் : தினமும் போதிய அளவில் தண்ணீர் குடித்து வந்தால் தான் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்து வெளியேறி உடல் ஆரோக்கியமாகவும், பொலிவோடும் இருக்கும். மேலும் வேறு எந்த ஒரு பிரச்சனையும் உடலில் ஏற்படாமல் இருக்கும்.

மேற்கண்ட முறைகளை பின்பற்றும் போது கண்ணாடி அணியாமல் இருந்தால் விரைவில் சரி ஆகிவிடும். கண்டிப்பாக கண்ணாடி அணிய வேண்டிய நிலை இருந்தால் அந்த இடத்தில் வறட்சி ஏற்படாமல் தடுக்க உங்கள் சருமத்திற்கு பொருத்தமான மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுத்து தடவி வாருங்கள். 

மேலும் படிக்க - குங்குமப்பூவின் அழகு மற்றும் ஆரோக்கிய பயன்கள்!

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!