மோமோஸ் பிடிக்குமா! வாங்க இனி வீட்லயே சுலபமா சமைக்கலாம் !

மோமோஸ் பிடிக்குமா! வாங்க இனி வீட்லயே சுலபமா சமைக்கலாம் !

மோமோஸ் (momos) பிடிக்காதவங்க இந்த காலத்துல ரொம்ப கம்மி. அந்த வெண்மையான பந்துகளுக்குள் இருக்கும்  நாவில் போட்டால் கரையும் படியான தனித்துவமான சுவை நமது சுவை அரும்புகளை ஆனந்தக் கண்ணீரில் மிதக்க செய்யும். 

அப்படியான சுவையான மோமோக்களை நீங்கள் வீட்டிலேயே ,ஓக்க சுலபமாக தயாரிக்க முடியும், இனிமேல் இதற்காக ஆன்லைன் ஆர்டர் செய்து காத்திருக்க வேண்டாம். நினைத்த உடன் செய்து சாப்பிட்டு ஆரோக்கியம் காத்து மகிழுங்கள்.                                               

youtube

தேவையான பொருட்கள்:

மைதா - 3 கப்


பேக்கிங் பவுடர் - 1/4 டீஸ்பூன்


வெங்காயம் - 4-5 (பொடியாக நறுக்கியது)


முட்டைகோஸ் - பாதி (பொடியாக நறுக்கியது)


கேரட் - 4 (பொடியாக நறுக்கியது)


வெண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்


இஞ்சி பேஸ்ட் - 1 டேபிள்ஸ் பூன்


அஜினமோட்டோ - 1/2 டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


சாஸ் செய்வற்கு.


தக்காளி - 3 பூண்டு பற்கள் - 2


பச்சை மிளகாய் - 2


மல்லி - 2 டேபிள் ஸ்பூன்


உப்பு - தேவையான அளவு

Youtube

முதலில் மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய்  சேர்க்கவும். வெண்ணெய் உருகியதும்,வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி பின்னர் இஞ்சி பேஸ்ட் சேர்த்து வதக்கி அதனுடன்  முட்டைக்கோஸ் மற்றும் கேரட் சேர்த்து, காய்கறிகள் வேகும் அளவு தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

காய்கறிகளானது நன்கு மென்மையாக வெந்து, தண்ணீர் வற்ற விடுங்கள். அதில் அஜின மோட்டோவைப் போட்டு கிளறி, இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனை ஆற விடுங்கள்.

பின்பு பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, ஒவ்வொரு உருண்டையையும் மெல்லிய வட்டமாக தட்டி,அதன் நடுவே காய்கறி கலவையை சிறிது வைத்து கொழுக்கட்டை வடிவில் செய்து கொள்ள வேண்டும்.இதேப் போல் அனைத்து மாவையும் செய்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள்.  இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி, அதில் செய்து வைத்துள்ள மோமோக்களை மூடி வைத்து, 15-20 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.

சாஸ் செய்முறை.

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் தக்காளியைப் போட்டு, அடுப்பில் வைத்து, 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.பின் தக்காளியில் உள்ள தோலை நீக்கி விட வேண்டும் அதன் பின்னர் மிக்ஸியில் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது சுவையான மோமோஸ்  தயார். தட்டில் மோமோக்களை வைத்து சாஸ் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். சுவையில் உங்களை நீங்களே மறப்பீர்கள்.                                        

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!