சானியா மிர்ஸாவின் சொல்ல மறந்த காதல் கதை-தேசங்களைத் தாண்டிய காதல்

சானியா மிர்ஸாவின் சொல்ல மறந்த காதல் கதை-தேசங்களைத் தாண்டிய காதல்

ஒரு இந்திய பெண் பாகிஸ்தான் நாட்டிற்கு மருமகள் ஆவது என்பது மிகப்பெரிய சவால். அந்த சவாலை ஜஸ்ட் லைக் தட் போல செய்து முடித்திருப்பவர் நம் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா.இதுவே ஒரு சாமான்ய பெண்ணிற்கு சாத்தியமா என்று கேட்டால் உறுதியாக ஆமாம் என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் இதுபற்றிய சுவாரஸ்யமான ஒரு திரைப்படம் வந்து வெற்றியும் பெற்றிருக்கிறது. ராஸி எனும் உண்மைக்கதையை அடிப்படையாக கொண்ட ஹிந்தி திரைப்படம்தான் அது.

நாம் சானியா மிர்ஸா (sania mirza) காதல் கதைக்கு வருவோம். சானியா மிர்ஸா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கை காதலித்தார். பாகிஸ்தான் இந்தியா கிரிக்கெட் மேட்ச் என்றாலே ஆர்ப்பாட்டம் செய்யும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பார்களா.. தெரிவித்தார்கள்.

Youtube

ஆனால் சானியா மிர்ஸா தனது காதலில் உறுதியாக இருந்தார். கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது ஆண் மகவு ஒன்றைப் பெற்றெடுத்து தாயாகவும் ஆகி இருக்கிறார். மாலிக்கும் சானியா மிர்ஸாவும் சந்தோஷமாக தங்கள் மணவாழ்க்கையை கொண்டாடி வருகின்றனர்.

சர்ச்சைகளுக்குரிய எல்லைகளைக் கடந்து இவ்விருவரும் செய்த காதல் திருமணம் பற்றி அனைவருக்குமே தெரியும். ஆனால் அவர்களது காதல் பற்றி எதுவும் தெரியாது. சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் சோயப் மாலிக்கை (shoab malik) முதன் முதலில் சந்தித்தது பற்றி மனம் திறந்திருக்கிறார் சானியா மிர்ஸா.

Youtube

நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் விளையாட்டு வீரர்கள் என்கிற அடிப்படையில் பொதுவாக தெரியுமே தவிர தனிப்பட்ட முறையில் எதுவும் தெரியாது. மாலிக்கை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் முதல் முறையாக சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே இருவரும் மோதிக் கொண்டோம்.

அது யதார்த்தமான ஒரு சந்திப்பு என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். உண்மையில் நான் அந்த ஹோட்டலில் இருக்கிறேன் என்பதை அறிந்து கொண்டே சோயப் திட்டமிட்டுதான் அந்த ஹோட்டலில் அந்த சந்திப்பை நிகழ்த்தி இருக்கிறார் என்பதை அறிந்த பின்பு ஆச்சர்யமாக இருந்தது.

எங்கள் சந்திப்பு விதி என்றுதான் நினைத்தேன். ஆனால் உண்மையில் அது விதி அல்ல என்பதை பிற்பாடுதான் புரிந்து கொண்டேன் என்று தனக்கே உரித்தான அழகிய புன்னகையுடன் கூறுகிறார் சானியா மிர்ஸா.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!