உளவியல் ரீதியாக ஒருவரை ஒருவர் கட்டிப்பிடிக்கும்போது மனஅழுத்தம் குறைவதாக சொல்லப்படுகின்றது. இதனையே திரைஞானி கமல்ஹாசனும் வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் காட்டி இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
ஆனால் ஒருவரை கட்டி அணைப்பதன் மூலம் ஸ்ட்ரெஸ் எப்படி குறைகிறது என்பது பற்றிய விபரங்களை நாம் யோசிப்பதில்லை. அடிக்கடி கட்டி அணைப்பதன் மூலம் உடல்நலக்கோளாறுகளை எளிதாக சரி செய்யலாம் என்று அமெரிக்காவில் உள்ள மெலன் பல்கலைக்கழகம் நிரூபித்திருக்கிறது.
ஸ்ட்ரெஸ் ஏற்படும்போது அட்ரினல் அதிகமாக சுரக்கும். இதனால் படபடப்பு உண்டாகும். இதனால் இதயத்தின் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதன் காரனாக உடலில் கார்டிசாலின் சுரப்பு அதிகமாக இருக்கும். இதனால் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மறதி நோய் உண்டாகும். ஸ்ட்ரெஸ் ஏற்படும் சமயங்களில் உடலின் உறுப்புகள் எல்லாம் ஒன்று சேர்ந்த இதனைக் குறைக்கப் போராடும்.
இந்த ஸ்ட்ரெஸ் ஹார்மோன்களை (stress hormone) சமநிலை செய்ய உடலில் இன்னொரு சுரப்பி இருக்கிறது. ஆக்சிடாஸின்(oxitocin) என்பது அதன் பெயர். இதைத்தான் நாம் செல்லமாக லவ் ஹார்மோன் (love hormone) என்கிறோம். பெண்களுக்கு பேறு கால நேரங்களில் இவை அதிகம் சுரக்கும். இந்த ஹார்மோன் நமக்கு பிடித்தமானவர் நம்மைத் தொடும்போது கொஞ்சம் அதிகமாகவே சுரக்கும்.
நமக்கு பிடித்தமானவர் நமது கைகளை பிடித்து பேசுவதால் மனநிம்மதி கிடைப்பது போன்ற உணர்வு லவ் ஹார்மோன் (ஆக்சிடாஸின்) சுரப்பதாலேயே ஏற்படுகிறது. அதேதான் இந்த சாய்ந்து கொள்ள தோள் வேண்டும் உணர்வுகளுக்கும் நேர்கிறது. ஒருவரை ஆறுதலாகக் கட்டி அணைப்பதன் மூலம் மூளை ஆக்சிடாஸினை அதிகம் சுரக்கிறது.
ஆகவே எல்லாவற்றிற்கும் விதி , ஜோதிடம் போன்றவற்றை நம்பாமல் அவ்வப்போது கொஞ்சம் அறிவியல் பக்கமும் நாம் திரும்பினோம் என்றால் அடுத்தமுறை ஆக்சிடாஸின் சுரக்கும்போது அது மூளையின் சங்கேத மொழி என்பதை உணர முடியும். ஏன் சுரக்கிறது என்பது பற்றிய யோசனையில் இறங்க முடியும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!