காதலில் தோல்வியடைந்த மனதுக்கு ஆறுதலளிக்க பொன்மொழிகள்

காதலில் தோல்வியடைந்த மனதுக்கு ஆறுதலளிக்க பொன்மொழிகள்

எத்தனை உறவுகள் இருந்தாலும், காதலன், காதலி போன்ற ஒரு உறவு இந்த பூமியில் இருக்க முடியாது. அனைத்து உறவுகளும், நம் விருப்பம் இன்றியே விதிக்கப்படும் போது, வாழ்க்கைத் துணையை மட்டும் இறைவன் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளான். எனினும், நம்பிக்கையோடு தேர்வு செய்யும் வாழ்க்கைத் துணை திருமணம் வரை சென்று வெற்றி பெறுவது என்பது, ஒரு கேள்விக்குறியே?

இந்த பிரிவு நிச்சயம் உண்மையாக நேசித்த ஒவ்வொரு இதயத்திற்கும் மிகுந்த வலியை உண்டாக்கி விடும். ஏன், மரணத்தை விட அதிக வலியை ஏற்படுத்தி விடும் என்று கூறினாலும், அது மிகையாகாது!

அப்படி ஒரு வலியோடும், கணத்த மனதோடும் நீங்கள் வாழ்வுக்கும், சாவுக்கும் இடையில் செய்வதறியாது இருந்தால், இங்கே வரும் இந்த காதல் தோல்வி கவிதைகளின் (பொன்மொழி) தொகுப்பு(love failure quote), உங்கள் மனதிற்கு கொஞ்சம் ஆறுதலை தரும் என்று நம்புகின்றோம்!

Table of Contents

  ஆண்களுக்கு காதல் தோல்வி பொன்மொழிகள்(Love failure quotes for boys)

  1. வானவில்லாய் நினைவுகள் வந்து மறைந்தாலும்
  வண்ணங்கள் மனதில் பதிந்துவிடுகிறது!!!!

  2. நீயுமா இப்படி என்ற வார்த்தையில் மிச்சமிருந்த ஒருதுளி
  நம்பிக்கையும் உதிர்ந்துபோன வலியிருக்கும்
  மன காயங்கள் ஆறியபோதும் நினைவுக்கு வரும்போதெல்லாம்
  வலிகள் மட்டும் ஏனோ புதிதாகவே இருக்கின்றது!!!

  3. யாரை பிரிந்த பின் உன்னால் இயல்பாக
  இருக்க முடியவில்லையோ
  அவர்கள் தான் உன் இதயம் என்று புரிந்துக்கொள்!!!

  4. காயங்கள் உருவாக கத்திகள் தேவை இல்லை
  புரிதலற்ற உன் வார்த்தைகளே போதும்
  வலிக்க வலிக்க நின்று கொல்லும் என்னை!!!

  5. சில சந்தர்ப்பங்களில் இழப்பதற்கும்
  தயராக இருங்கள் எதுவும் எளிதில் கிடைப்பதில்லை!!

  6. அனைவரும் அருகில் இருந்தும்
  அனாதை போல் உணர வைக்கின்றது
  நாம் நேசித்தவரின் பிரிவு!!!

  7. புரிதல் இல்லையெனில் பிரிதலே மேல்
  அது எந்த உறவாக இருந்தாலும்!!!
  தனிமையின் வேதனையில் இருந்து ஒரு நாள் மீள்வேன்
  இது, தனிமையின் வேதனை எனக்கு கற்றுக் கொடுத்தது
  வாழ்க்கையின் மறுபக்கம்!!!

  8. மனம் தெளிந்த நீரை போன்றது
  முகவரி இல்லாத ஒருவர் எறியும்
  கல்லால் தான் அது கலங்கிய நீராக மாறிவிடுகிறது!!

  9. என் புன்னகைக்கு பின்னால் உள்ள வலி
  என்னை புரிந்தவர்களுக்கு மட்டுமே புரியும்
  கடந்து செல்கிறேன் காலம் மாறும் என்ற நம்பிக்கையில்!!
  ஆனால், எவ்வளவு தூரம் கடந்து தான் சென்றாலும்
  சில நினைவுகள் நிழலை விட மோசமாக பின் தொடர்கிறது!!!!

  10. நீ என்னை நேசித்ததாலோ என்னவோ...
  இந்த ஜென்மம் நான் வாழ்ந்துவிட்டேன்...
  இந்த ஜென்மம் போதுமென்று...
  நான் நினைக்கும் போதெல்லாம்...
  நீ என்னுடன் இல்லாமல் போனாலும்...
  உன் நினைவுகள் எனக்கு ஆறுதலாக வாழசொல்கிறது...

  11. ஒருமுறை மீண்டும் என்னை நேசித்துப்பார்...
  மறுஜென்மமும் உனக்காக பிறந்து...
  அதில் கொஞ்சம் நானும் வாழ்ந்துவிடுவேன்.....

  12. பேச தெரியாத குழந்தை எந்தன் இதயம்...
  அது கற்ற ஒரே வார்த்தை உந்தன் பெயர்...
  நித்தம் உன் பேர் சொல்லி அழும் இதயத்தின் குரல்
  விழவில்லையா உன் காதுகளில்?

  மனதை உருக்கும் காதல் தோல்விகள்(Heart touching love failure quotes)

  13. கல்லும் கூட கரைந்திடும் அந்த அழுகையில்...
  உன் மனம் கல்லினும் கடிதோ என் அன்பே??
  உனக்காக காத்திருந்து என் இமைகள் மூடினாலும்...
  என் இதய துடிப்பு உனக்காக துடித்து கொண்டே இருக்கும்...

  14. என்னை தொடர்ந்து வரும் என் நிழலை போல...
  உன் நினைவுகளும் என்னை தொடருதே அன்பே...
  காதலும் காதல் காயங்களும் தந்தவள் நீதான்...

  15.ஒருமுறை வந்து பார்த்து செல்...
  நீ கொடுத்த காதலையும்... நான் துடிக்கும் வேதனையையும்.....
  உனக்கு புரியும்!!!

  16. உனக்காக இன்றுவரை காத்திருக்கிறேன்...
  கண்களை மூடி கனவில் காண்கிறேன் தினம் தினம்...
  உன் பெயரை தினம் ஆயிரமுறை எழுதி பார்க்கிறேன்...
  பார்க்க துடிக்கும் என் கண்களுக்கு...
  இமைகளை மூடி நினைவுகளால் காட்டுகிறேன் உன்னை...
  இனியும் என்னை காக்க வைக்காதே...

  17. உனக்காக எதையும் இழக்கும் இதயம் இருக்கு
  என்னிடம் இதை தவிர வேறு என்ன எதிர்பார்க்கிறாய் இப்பெண்ணிடம்.
  நிஜங்களில் நான் உன்னை விட்டு பிரிந்தாலும்
  என்றுமே உன் கண்களுக்கு மருந்தாகவும்
  உன் கனவுகளுக்கு உரியவனாகவும் இருப்பேன்....

  18.நீ என்னை பிரிந்த போதே உன்னை
  என் நினைவில் இருந்து மறந்து விட்டேன், ஆனபோதும்
  என் மனம் என்ற கோட்டையில் என்னில் வாழ்ந்து தான் வருகிறாய்.

  19. போதும் பெண்ணே இத்தோடு நிறுத்தி கொள்
  என் காதலால் உயிர் போகும் அளவிற்கான வலியை
  நீ உணர்த்தி விட்டாய்!!!!
  என் இதயத்தை நீ உடைத்து விட்டாய்.!!!

  20. நிலவிற்கு கூட வானம் விடுமுறை அளிக்கலாம்
  ஆனால் உன் நினைவுகளுக்கு என் மனதில் என்றுமே விடுமுறை இல்லை.

  21. திடீரென்று என்னை தவிக்க விட்டு சென்று
  எனக்கு தக்க பாடம் புகட்டி விட்டாய்
  வாழ்க்கையில் யாரையும் நம்பி விடாதே என்று.

  22. என் மனதின் வேதனையை நிலவிடம் கேட்டுப்பார்
  அது சொல்லும் என் காதல் வலிகளை ஆயிரம் மொழிகளில்.

  23. பல பேரின் ஒரு பாதி வாழ்க்கையில்
  பாசத்தை தேடியே அலைவதும் மீதி வாழ்க்கையில்
  பாசம் வைத்து ஏமாறுவதிலேயே முடிந்து விடுகிறது.

  24. உன்னை மறப்பதும், இறப்பதும் ஒன்றே ...!!!
  தோப்பில் இருந்த மரங்கள் வெட்டப்பட்டு தனிமரமாய் நிற்பதுபோல் ....
  உன்னை இழந்து தனியே நிற்கிறேன் .....!!!

  சிறந்த காதல் தோல்விகள்(Best Love failure quotes)

  25. திட்டு திட்டாய் திருஷ்டி பொட்டு வைத்தாற்போல்...
  உன் நினைவுகள் தினம் தினம் என்னை வதைக்குதடி.....

  26. என்னை காதலில் ஏமாற்றியது உன் பிழை என்றால் உன் பொய்யான நேசத்தை கூட உணராது ஏமாறியது என் பிழை தான்......

  27. உருகிய என் எண்ணங்கள் உறைகின்றது
  உடையாமல் உன் மௌனங்கள் தொடர்கிறது
  உனக்காக கடும் வெய்யலில் காத்திருந்தது
  வியர்வைத்துளிகள் வெந்நீராய் சுடுகின்றது
  திசைகள் எட்டும் திரிகிறேன்
  ஓர் திசையிலாவது உன் பார்வையில் படுவேனென்று......

  28. உன் மனம் கல்லாக இருந்தாலும் கவலையில்லை....
  அதில் கொஞ்சம் இடம் கொடு,
  என் அன்பை செதுக்கி வைத்துவிட்டு செல்கிறேன்......

  29. உன் மனம் நஞ்சாக இருந்தாலும் நல்லதுதான்
  அதை கொஞ்சம் எனக்கு கொடு
  உண்டுவிட்டு உன் நினைவோடு
  உயிர் விடுகிறேன்.......

  30. அவளோடு பேசாத மௌனம் கொடியது என்றால்
  என்னை கொடுமை படுத்தும் அவளின் நினைவைக் கொல்ல
  கொடிய மௌனமே சிறந்தது.......

  31. இன்னும் எத்தனை நாட்கள் எனை இப்படி கொல்வாய்
  போதும் போதும் அட்டை புழுவாய்
  ஒட்டிக்கொண்டு உயிரை உறிஞ்சும்…
  உன் நினைவுகள் போதும்......

  32. பிரிவை விட கொடுமை காதலில் மௌனம்.....
  மௌனத்தை விட கொடுமை, காதலில் சந்தேகம் ....!!!
  உன்னை கனவில் மட்டும் காதலித்திருந்தால் கலங்கியிருக்க மாட்டேன்....
  நினைவில் மட்டும் காதலித்திருந்தாலும் கலங்கியிருக்க மாட்டேன்....!!!
  உன்னை உயிராய் காற்றாய் காதலித்ததால் தான் இந்த அவஸ்தைப்படுகிறேன்.....!!!

  33. காதலை சொல்லவேண்டிய, நேரத்தில் சொல்லி விடு ....
  இல்லையேல் காலம் முழுவதும் காதலால் காயப்படுவாய் .....!!!
  என்றோ ஒருநாள் சொல்லாமல் விட்ட காதல்
  இதயத்துக்குள் முள்ளாய் குத்திக்கொண்டே இருக்கும் .....!!!
  காதலை சொல்லி வேதனை பட்டவர்களை விட
  காதலை சொல்லாமல் வேதனை பட்டவர்களே அதிகம் .....!!!

  34. உயிருள்ள வரை உன்னுடன் இருப்பேன் என்றாய்..
  இன்றோ.. பிரிந்து போகிறேன் என்கிறாய்...
  ஒரு வேளை நான் இறந்து விட்டதாய் எண்ணிவிட்டாயோ... !

  35. வானம் என்பது தூரம் அல்ல, பூமி என்பது ஆழம் அல்ல,
  ஆழம் என்று நான் கண்டது, அந்த பெண்ணின் மனம் மட்டுமே...
  விலகிசெல்லும் போது அணைக்க துடிப்பதும் பெண்ணே!
  அணைக்க துடிக்கும் போது விலக சொல்லவதும் பெண்ணே!!

  36. பெண்ணின் மனதை அளக்க அளவை இருந்தால் சொல்லுங்கள்
  அளந்து பார்க்கலாம் என்னதான் ஆழம் என்று...
  தெரிந்து கொல்லட்டும் அப்பாவி ஆண்கள்!!!!!!!!!!!!!!!!

  அழகான காதல் தோல்விகள்(Beautiful love failure quotes)

  37. விடியலுக்கில்லை தூரம் – விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்..
  மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
  மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை..

  38. பாச பந்தங்கள் உண்டானது, அது பாதியில் ஏனோ முடிந்து போனது...
  நேசமும் பாசமும் தோற்று போனது, என் நெஞ்சத்தில் ஈரமும் காய்ந்து போனது..
  துள்ளி திரிந்த காலம் இன்று தூரம் சென்று மறைந்து போனது.....
  துன்பத்தை மட்டுமே ஏந்தி இன்று துடிக்கும் மனது வெந்து சாகுது......

  39. ஒரு கோடி நினைவுகளை என் உள்ளத்தில் சுமந்து துடிக்கிறேன்…
  உனக்காய் வாழ்ந்த வாழ்க்கையை நான் தினம் எண்ணி தவிக்கிறேன்..

  40. காதலில் தோற்ற ஒவ்வொரு இதயமும் தீயில் கருகிய இதயம் ...
  மீண்டும் துடிக்க விரும்பாது .....!!!

  41. மறுத்தால் மன்னித்துவிடுவேன்....
  மறந்தால் மரினித்து விடுவேன்......
  ஜோடியாக நடந்து திரிந்த செருப்பில் ஒன்று அறுந்துவிட்டால் ....
  மற்றொரு செருப்பின் நிலை?
  என்னை பிரிந்த நீயும் சந்தோசமாய் இல்லை ...
  உன்னை பிரிந்த நானும் நிம்மதியாய் இல்லை ...!!!

  42. தனிமையில் இருக்கும் போது கூட உன்னோடு தான் பேசிக்கொண்டிருப்பேன் ...!!!
  இதுவரை இன்பத்தில் இருந்த இதயம்இப்போ துன்பத்துக்கு பயிற்சி எடுக்கிறது ....!!!

  43. பேசாமல் விட்டு விடலாம், ஆனால் பேசாமல் இருப்பதுபோல் ....
  நடிப்பதுதான் கடினம் ....!!!
  காதலிக்காமல் இருக்கலாம், ஆனால் காதலிப்பதுபோல் நடிப்பது
  சொல்லமுடியாத கொடுமை ....!!!

  44. நீ புரிந்து கொள் , பிரிந்து செல்
  ஆனால், இரண்டும் கலந்த கலவை காதலுக்கு விஷம் போன்றது .....!!!
  நீ என்னை புரிந்து கொள்ளும் வரை நான் உனக்கு பொய்யானவனாகவே தெரிவேன்....
  புரிந்தபின் இழந்த காதலை நினைத்து கண்ணீர் விடுவாய் ....!!!

  45. நான் இல்லாயெனில்,
  உனக்காக காத்திருக்க பலர் இருப்பார்கள்.......
  ஆனால்.......நீ இல்லையெனில்
  எனக்காக காத்திருப்பது மரணம் மட்டுமே......

  46. உன் பார்வைகள்., உன் புன்னகைகள்......
  உன் வார்த்தைகள், உன் தவிப்புகள்.....
  நீ வந்து போன நாட்கள், அத்தனையையும் ரசிக்கிறேன்........
  நீ இல்லாத தனிமையைத் தவிர...........

  47. நான் எங்கேயோ இருக்கிறேன்...,
  நீ எங்கேயோ இருக்கிறாய்...' என்று சொல்லிச் சொல்லியே...
  உன் பிரிவை எனக்கு ஞாபகப்படுத்துகிறாய்!!
  மீண்டும் அவ்வாறு சொல்லாதே....இனி நான் அழுவதற்கு கண்களில் ஈரமில்லை......

  48. இனி ஓர் பெண் வேண்டாம் என் வாழ் நாளிலே..
  இதுவரை இழந்தது போதும்...
  எல்லாமே அவள் தந்த மோகம்....
  சிறு சிறு சில்லாய்அவள் நினைவை உடைப்பேன்....
  சிறகை விரித்து என உலகை இரசிப்பேன்....

  வாட்ஸ் ஆப் காதல் தோல்வி பொன்மொழிகள்(Loves failure quotes for whatsapp)

  49. காதலர் தினம் இருப்பதால்
  தானோ என்னவோ தெரியல
  "பிப்ரவரி" மாதத்திற்கு கூட
  ஆயுள் குறைவு..!

  50. ஒவ்வொரு முறை என் செல்போன் சிணுங்கும் போதும்
  எதிர்பார்ப்புடன் பார்க்கிறேன் அது நீயாக இருக்க வேண்டுமென்று..!

  51. உனக்காக காத்திருக்கும்
  ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது
  நீ வராத வாழ்க்கை தனிமை என்று..!

  52. உன்னை நினைத்து துடித்திருக்கும் இதயம்
  ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது
  நீ இல்லாத வாழ்க்கை வெறுமை என்று..!

  53. துடிக்கும் இதயம் நின்று போகலாமென்றால்
  நின்ற இதயம் கூட ஒருநாள் துடிக்கலாம்,
  என் கல்லறை அருகே நீ வந்தால்..!

  54. காதலில் தோற்பவர்கள் பிணமாகிறார்கள்
  அல்லது பிணமாக வாழ்கிறார்கள்..
  நினைவுகள் மட்டும் உயிரோடு !!

  55. நான் உன்னை நேசிப்பது உனக்கு தெரிந்திருந்தும்...
  என் காதலின் ஆழம் உனக்கு தெரியவில்லையடி...
  எல்லைமீறி உன்னை நேசித்ததால் என்னவோ...
  என்னையும் மீறி வழிகிறது கன்னத்தில் கண்ணீர் துளிகள்...

  56. சொர்கத்தைவிட சிறந்தது உன் நினைவுகள்...
  எனக்குள் சுகமாக இருப்பதால், எனக்கு நீ வலிகளை கொடுத்தாலும்...
  என் காதல் என்றும் உன்னை வெறுக்காது என்னுயிரே.....

  57. பழகிடும் உறவுகள் விலகிடும் பொழுதினில்
  இதயங்கள் தா(தூ)ங்காது

  58. நேசித்தலை விட பிரிதலின் போது
  உன் நினைவுகள் இரட்டை சுமை...
  மனதின் அழுத்தம் குறைக்க ஒருமுறை கடன்கொடு
  உன் இதயத்தை...

  59. கண்களில் மிதந்த
  அழகிய காட்சியெல்லாம்
  சில நேரங்களில் தூசியாகி
  கண்ணீரை தருகிறது.

  60. உறக்கம் தொலைந்த இரவுகளில்
  உறங்கிய நினைவுகள்
  விழித்துக்கொ(ல்)ள்கிறது...

  மேலும் படிக்க - காதல் தோல்வியில் இருந்து உடைந்து போகாமல் ..வெளிவருவது எப்படி?

  கண்ணீரோடு காதல் தோல்வி பொன்மொழிகள்(Love failure quotes with tears in heart)

  61. தொட்டுச்செல்லும் நினைவுகளைதான்
  விடாமல் துரத்துகின்றது மனம்...
  சில ரணங்களை மறக்க ஏதோவொன்றை
  மனம் ரசிக்கதான் வேண்டும்....
  கலைந்து போன கனவிலும் வலியான நினைவுகள்.....

  62. உன்னை காண எதிர் பார்த்திருக்கும் கண்கள்
  ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது
  உன்னை காணாத வாழ்க்கை இருள்மை என்று..!
  உன்னோடு பேசி பழகிற்கும் மனது
  ஒவ்வொரு நிமிடமும் உணர்கிறது
  நீ சொன்ன வார்த்தை பொய்மை என்று..!

  63. பசித்தவருக்கு தெரியும்
  உணவின் அருமை...
  இழந்தவருக்கு புரியும்
  உறவின் அருமை....

  64. சிரித்த நிமிடங்களை விட,
  அழுத நிமிடங்களே...
  என்றும் மனதை விட்டு நீங்குவதில்லை.... (ஞாபகங்கள்)

  65. பிரிவின் வலி பிரிந்தவர்களுக்கு மட்டுமல்ல
  பிடித்தவர் அருகில் இல்லாதவர்களுக்கும் தான்...

  66. நினைவுகள் என்னை துரத்த...
  சற்றும் நிற்காமல் ஓடிக்கொண்டே
  நானும் முடிவுறா பயணமாக!!!

  67. சில காயங்கள் ஆறாதிருப்பதே நல்லது
  மீண்டும் காயங்களை ஏற்படுத்திக்கொள்ளாதிருக்க...

  68. எரிந்து கொண்டிருக்கும் நினைவுகளை
  அணைத்து கொண்டிருக்கின்றேன் மையில் வரிகளாக...

  69. பேசி பயனில்லாத போது மெளனம் சிறந்தது
  பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்தது

  70. பிறரிடம் பகிர முடியாத வேதனையைக் கூட
  ஆற்றிட விழிகள் உளற்றெடுக்கும் அருவி தான் கண்ணீர்!!!

  71. நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு இருந்து விட்டால்
  நினைவின் மொழியும் பிரிவின் வலியும் உணர முடியாமலே போய்விடும்!!!

  72. பிரிந்து போவாய் என தெரியும்
  மறந்து போவாய் என் தெரியாது
  மலரும் நினைவுகளிலும் சில வாடியேதான் இருக்கின்றது!!!

  வயதான தம்பதியின் காதல் தோல்விகள்(Love failure quotes for aged husband & wife)

  73. காதல் வலி என் உச்சம் தலையில் ஏற...
  கதறி அழும் என் மனதை கண்டு கண்கள் இரண்டும் கண்ணீர் வடிக்கிறது..
  உனை பிரிந்தால் நான் நடை பிணம் ஆவேன் என்பதை அறிந்தும்,
  என் உயிரை உரசி தீ மூட்டி அதில் ஏன் குளிர்காய துடிக்கிறாய்.
  உன்னை காதலித்த குற்றத்திற்காக என்னை கல்லறைக்கு அனுப்ப துடிப்பது நியாமா என் கண்மணியே..

  74. என் கனவுகளையும் ஆசைகளையும் சேகரித்த...
  என் தலையணை இன்ற, சோகத்தை மட்டுமே சுமக்கிறது...
  இரவெல்லாம் சொட்டு சொட்டாய் சேகரித்த
  என் கண்ணீர்துளிகளை எல்லாம், பகலில் நினைவு படுத்துகிறது.....

  75. உன் நினைவை மறக்க மூலை சொல்கிறது
  உன்னை மட்டுமே நினைக்க என் நெஞ்சம் துடிக்கிறது..
  நீருக்குள் மூழ்கிய தாமரையாய் நான் வெளியே சிரித்து,
  உள்ளே உன் நினைவென்னும் போதையில் மூழ்கி தவிக்கிறேன்..

  76. உன்னை காதலித்து மறக்க முடியாமல் தினம் தினம் சாகிறேன்...
  ஆனால் உன் நினைவு மட்டும் என்னுள் இருந்து நீங்கிய பாடு இல்லை..
  என் படுக்கை தலையணையில் தான் எத்தனை ஈரங்கள் அதில் ஒரு துளியேனும் உன் உள்ளத்தில் இருந்திருந்தால்
  உன்னோடு நான் இன்று கை கோர்த்து உறங்கி இருப்பேன்..

  77. என்னை உனக்காக மாற்றியதும் நீ தான்...
  இன்று மனம் மாறி என்னை விட்டு பிரிந்து செல்வதும் நீ தான்....

  78. உனக்குள் என் நினைவு என்ற ஒன்று இருக்குமேயானால்
  பிரிவு என்ற ஒன்றினால் கூட நம்மை பிரிக்க முடியாது.

  79. உலகில் யாரும் துணையின்றி தனிமையில் வாழ்ந்து பழகி போன எனக்கு..
  காதலாக வந்தாய் ஆறுதலை தந்தாய்...
  இன்று என்னை காதல் தோல்வியில் தவிக்க விட்டு சென்று விட்டாய்.....

  80. என் அன்பை உணராது பிரிந்து வாழ பழகி கொண்ட உன்னால்....
  என் காதல் வலியை கட்டாயம் கண்டு பிடிக்க முடியாது உன் கண்ணால்....

  81. உன்னை காணாமல் திரும்பி செல்ல என்னால் முடியவில்லை,
  உன்னை என் பிரிவினால் தவிக்க விடவும் என் மனதில் நினைக்கவில்லை, மௌனம் போதும் என்ற பார்வை மொழிகளால்
  உன்னிடம் உண்மையை உரைக்கிறேன் என் காதல் உனக்கானதே என்று.

  82. நாம் உயிராய் பழகிய அந்த பொன்னான சொர்க்க காலங்கள்
  இன்று காதல் தோல்வியின் விரக்தியில்
  நான் தவிக்கும் நரக வேதனைகளாக மாறிப்போயின.

  83. தொலைவில் நீ ஒரு ஓரம் நான் ஒரு ஓரம்
  என்று இருந்து அன்பு காட்டுவதை விட
  அருகில் இருந்து என்னிடம் அடங்காமல் சண்டையிடு
  அது கூட ஒரு சுகம் தான் என் ஆருயிரே.

  84. மீண்டும் ஓரு முறை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்
  என்னை விட்டு சென்ற நீ மீண்டும் திரும்பி வர மாட்டாயோ என்று.

  ஒருதலை காதல் தோல்வி(One sided love failure quotes)

  85. சில நேரங்களில் தனிமை கடினம்
  சில நேரங்களில் தனிமை
  தான் இனிமையான தருணம்...!

  86. உன் விழிப்பார்த்து சொல்ல தெரியாத காதலை...
  கடிதத்தில் சொன்னேன் உன்னிடம்...
  கண்கள் பேசியதை விட, உனக்கும் எனக்கும் கடிதங்கள் பேசியதே அதிகம்...
  உன் கைகளில் காகிதம் பார்த்தாலே... எனக்குள் கோடி இன்பம் தோன்றுமடி...
  இன்று உன் கைகளில் இருக்கும் காகிதம்... என்னை கொள்ளும்
  ஆயுதமாக மாறிவிட்டதடி...
  அது உன் திருமணஅழைப்பிதழ் என்பதால்...

  87. உடைந்த என் உள்ளத்தில் ஒரு கோடி சிதில்களாய் நீ உறைகிறாய்..
  என் கனவும் உன் மீது காதல் வயப்படுமோ என்று கண் விழித்து தவிக்கிறேன் தூக்கமின்றி..

  88. வேண்டாம் என்று தான் இருந்தேன் விரும்பி வந்து என்னை நீ விரும்ப வைத்தாய்
  இன்று ஏன்தான் உன்னை விரும்பினோமோ என்று என்னை புலம்ப வைக்கிறாய்

  89. உன்னை பார்த்த நிமிடத்தில் என் மனம் பறி போனது...
  அந்த நாளில் இருந்தே உன்னை தேடியே என் நாட்கள் தேய்ந்தது.. கனவுகளில் உன் காலடி சத்தம் என் கண் முன்னே பாய்ந்தது..
  நீ இல்லாத இந்த நிஜ உலகில் உன் பிரிவில் என் இதயம் வாடுது.....

  90. நான் பல முறை பார்த்தால் தான்
  நீ ஒரு முறை பார்க்கிறாய்
  அந்த ஒரு முறையும் உன் வேண்டா வெறுப்பாக பார்க்கும் பார்வைகளால் என்னை சுட்டெரித்து விடுகிறாய்.....

  91. என் உயிரே என்னை காதல் செய் என்று நான் உன்னிடம் கேட்க போவது இல்லை.....
  உன் பார்வைகள் போதும் எனக்கு உன் காதல் விருப்பத்தை என்னிடம் உணர்த்துவதற்கு....

  92. நம் காதல் தோல்வி என்னோடு போகட்டும்
  உன் மணாளனோடு நீ வாழ்க்கையில் மகிழ்ந்து இருந்து
  நான் அதை பார்த்தாலே போதும்
  அதுவும் எனக்கு வெற்றி தான்......

  93. அனைவர்க்கும் இங்கே நேசிக்க தெரியும்
  இதில் என்ன வித்தியாசமெனில்
  சிலர் நேரில் சொல்வார் பலர் சொல்லாமல் கொல்வார்......

  94. அன்று நாம் காதலிக்கும்போது எனக்கு தெரியவில்லை
  உன்னை பிரிந்தால் என்னால் தாங்க முடியாது என்று
  தனிமையில் இன்று ஒருதலை காதலுடன் தள்ளாடுகிறேன்.

  95. என் அன்பு காதலை உணராமல்
  உன் பிரிவினால் கொல்லாதே
  மீண்டும் என்னால் உன்னை மறந்து
  வேறு ஒருவரை காதல் செய்ய முடியாது…!

  96. பெண்ணே காதல் தோல்வி கண்டால்
  இதில் இருந்து மீழ்வது அடுத்த பிறவி எடுப்பதை போன்றது
  எனக்கு இப்பிறவியே போதும், இன்னொரு பிறவி வேண்டாம்
  இப்பிறவியில் உன் மீது கொண்ட காதலோடு போகிறேன், இந்த உலகைவிட்டு!!!!

  மேலும் படிக்க - தமிழ் சினிவாவில் நீங்கா இடம் பிடித்த காதல் வசனங்கள்!

  பட ஆதாரம்  - Shutterstock 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!