கடந்த 2008ம் ஆண்டு பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் காஜல் அகர்வால். விஜய், அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.
தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தும் பிரபலமாக இருக்கிறார். காஜல் நடிப்பில் தமிழில் கடைசியாக வெளியான கோமாளி திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்த இந்த திரைப்படம் 100 நாட்களை கடந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.
சாக்ஷிக்கு ஏற்ற கணவராக நடக்கிறேன்.. ஆம்.. சரி.. இதுவே சாக்ஷிக்கு பிடித்த வார்த்தைகள்-தோனி
இதனை தொடர்ந்து பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. அடுத்து இந்தியன் 2-ம் பாகம் படத்தில் கமல்ஹாசனுடன் நடிக்க உள்ளார்.
இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் (kajal agarwal) வயதான பெண்ணாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகளில் அடுத்த மாதம் காஜல் பங்கேற்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 படத்தை தவிர தமிழில் வேறு படங்கள் கைவசம் இல்லாததால் இந்தி திரையுலகில் காஜல் கவனம் செலுத்தி வருகிறார்.
இதனிடையே திருமணம் செய்துகொண்டு வாழ்க்கையில் செட்டிலாகலாம் என்ற ஐடியாவில் இருக்கும் காஜல், தனது வருங்காலக் கணவர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஒரு பெரிய பட்டியலே வெளியிட்டார்.
காஜலுக்கு மாப்பிள்ளை கிடைத்துவிட்டதாக சமீபத்தில் செய்தி வெளியானது. தொழிலதிபர் ஒருவருடன் காஜலின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் அவர் குடும்பத்துடன் சென்று அஜ்மீர் தர்காவில் தலையில் பூக்கூடையை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
இந்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகின. இதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஜல் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. ஒரு கடற்கரையில் சூர்ய உதயத்தின் போது கடலை பார்த்தப்படி நிற்கும் காஜல் (kajal agarwal) கைகளை மேலே உயர்த்தியபடி நிற்கிறார்.
வாழ்க்கையில் எது நடந்தாலும் கேரக்டரை குறை சொல்வார்கள்.. திருமண முறிவு பற்றி மனம் திறந்த DD
அவரது கை விரல்கள் ஹாட்டின் வடிவத்தை குறிக்கின்றன. இதை பார்த்த காஜல் அகர்வாலின் ரசிகர்கள், ‘தான் காதலில் இருப்பதை தான் காஜல் சூசகமாக வெளிப்படுத்தி இருக்கிறார்’ என கமெண்ட் செய்தனர்.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் நியூஇயர் கொண்டாட குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ள காஜல் அகர்வால், அங்கு எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
மாலத்தீவில் தனது குடும்பத்துடன் டின்னர் சாப்பிடும் புகைப்படங்கள் மற்றும் காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலுடன் மாலத்தீவில் உள்ள ரீத்தி ஃபாரு ரெசார்ட்டில் நீச்சல் குளம் அருகே இருக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.
அந்த வகையில் நீச்சல் குளத்தில் காஜல் (kajal agarwal) பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். செம்ம ஹாட் லுக்கில் காஜல் அகர்வால் நீச்சல் குளத்தில் என்ஜாய் செய்யும் அந்த புகைப்படங்கள் லைக்குகளை வாரி குவித்து வருகிறது.
சின்ன குழந்தை போல நீச்சல் குளத்தில் ஆட்டம் போடும் காஜல் அகர்வால், தனது விடுமுறையை முழு சந்தோஷத்துடன் கழிப்பதை அந்த புகைப்படங்களைப் பார்த்தலே தெரிகிறது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இரு மத முறைப்படி நடைபெற்ற ஒஸ்தி நடிகை ரிச்சாவின் திருமணம்… ரசிகர்கள் வாழ்த்து!
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!