கிறிஸ்துமஸ் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரசியமான தகவல்கள்!

கிறிஸ்துமஸ் பற்றி நீங்கள் அறிந்திராத சுவாரசியமான தகவல்கள்!

இயேசு பிறந்த தினத்தை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்துவர்கள் கொண்டாடுகிறார்கள் என்றதை நம் அனைவரும் அறிந்ததே! அதைத் தொடர்ந்து வரும் ஆங்கிலப் புத்தாண்டை அனைவருமே சிறப்பாக கொண்டாடி மகிழ்வர். நம் நாட்டின் பெரும்பாலான கணினி வேலைகள் மேற்கத்திய நாட்டைச் சார்ந்து இருப்பதால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அவர்கள் கொண்டாட ஆரம்பித்தவுடன், இங்கும் திருவிழா கலை ஆரம்பித்து விடும். கிட்டத்தட்ட டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல், ஆங்கிலப் புத்தாண்டு முடியும்வரை கொண்டாட்டம் தான். கிறிஸ்துமஸ் (interesting christmas facts)பற்றி சில சுவாரசியமான அறியாத விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமா?!

1. உதவும் மனநிலையை பிரதிபலிக்கும் விதமாக கொண்டாடப்படுவதுதான் கிறிஸ்துமஸ். அதனால்தான் கிறிஸ்துமஸ் தினத்தன்று பரிசுகள் பரிமாறிக் கொள்கிறோம். மேலும், வாய்ப்பு குறைவாக உள்ளவர்களுக்கு உதவ நினைவு கொள்ளும் தினமாகவும் கருதலாம்.

2. முதன் முதலில், டிசம்பர் 25ம் நாள், 336 ஏ. டி(இயேசு பிறந்த பின்), ரோமில் கொண்டாடப்பட்டது. 

3. டிசம்பர் 25ம் தேதியில் இருந்து ஜனவரி 5ம் தேதிவரை ‘கிறிஸ்துமஸ்டைட்’(‘Christmastide’) அல்லது ‘பனிரெண்டு புனிதநாட்கள் (‘Twelve Holy Days’) என்று கூறப்படுகிறது.

4. சாண்டாவிற்கு H0H 0H0 என்ற அஞ்சல் குறியீடு இருக்கிறது. ஒவ்வொரு வருடமும், உலகத்தில் உள்ள குழந்தைகள் மில்லியன் கடிதங்கள் அனுப்புகிறார்கள். கனடா அஞ்சல் அலுவலகத்தில் வேலை செய்யும் தொழிலார்கள், சில கடிதங்களுக்கு பதில் கூட அனுப்பியிருக்கிறார்கள்.

5. ஆங்கிலத்தில் X-Masல் உள்ள X, கிரேக்கத்தில் ‘கிரைஸ்ட்’ என்ற பொருளில் இருந்து வந்தது.

6. ‘மிட்வின்டர்’, ‘நேட்டிவிட்டி’, ‘யுளே’ போன்றவை பழங்காலத்தில் கிறிஸ்துமஸை குறிப்பதாக இருந்தது. ‘யுளே-ட்ரீ’ என்பது ‘கிறிஸ்துமஸ் ட்ரீ’யின் மற்றொரு பெயராகும்.

மேலும் படிக்க - உங்களுக்கு பிடித்தமானவர்களுடன் பகிர, சில சுவாரசியமான கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

 

Pexels

7. கிறிஸ்துமஸ் பொது விடுமுறையாக இருந்தாலும், பைபிளில் கிறிஸ்துமஸ் தினத்தை புனித தினமாக எங்கும் குறிப்பிடவில்லை.

8. ஹால்மார்க் 1915ம் ஆண்டு தங்கள் முதல் கிறிஸ்துமஸ் கார்டை வெளியிட்டது. ஒவ்வொரு வருடமும் 3 பில்லியன் கிறிஸ்துமஸ் கார்டுகள் அமெரிக்காவில் மட்டும் அனுப்பப்படுகிறது. 

9. ஜெர்மனியின் 16ம் நூற்றாண்டில் தான் முதன்முதலில் கிறிஸ்துமஸ் ட்ரீ அலங்காரம் தோன்றியதாக நம்பப்படுகிறது.

10. முதன் முதலில், கிறிஸ்துமஸ் ட்ரீ பழங்களால் முக்கியமாக ஆப்பிள் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. பின்னர், மெழுகுவர்த்தி, விளக்குகள் என 1895ம் ஆண்டு முதல் அலங்கரிக்க ஆரம்பித்தனர். 

11.அமெரிக்காவில், மஸ்ஸச்சுசெட்ஸ்(Massachusetts) என்ற இடத்தில், ஜேம்ஸ் பியர்பாண்ட் ‘ஜிங்கிள் பெல்ஸ்’ என்ற பிரபலமான கிறிஸ்துமஸ் பாடலை இசையமைத்தார். ஆனால் இந்த பாடல் கிறிஸ்துமஸ்காக இல்லை, ‘தேங்க்ஸ் கிவ்விங்’ நாளிற்கானது. 1965ம் ஆண்டு, டிசம்பர் 16ம் தேதி, விண்வெளியில் டாம் ஸ்டாஃபோர்ட் மற்றும்  வேளி ச்சிரா ஆகிய விண்வெளி வீரர்கள் முதன் முதலில் இந்தப் பாடலை பாடினார்கள்.

Pexels

12. உலகிலேயே 2007ம் ஆண்டு பிரேசில் நாட்டில், ரியோ டீ ஜெனிரோ(Rio de Janeiro)வில், மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் ட்ரீ 278 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.

13. டின்ஸ்ல் எனப்படும் அலங்கரிக்கும் ஜிகுனா 1610ம் ஆண்டு ஜெர்மனியில் வெளியில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு ஈயம்(lead) மூலம் தயாரிக்கப்பட்டதால், அமெரிக்க அரசு தடை விதித்திருந்தது. இப்போது நெகிழியால் பரவலாக தயாராகி எந்த பார்ட்டியிலும் அலகாரமாக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், குழந்தைகள் விழுங்கிவிடாமல் கவனமாக கையாள வேண்டும். 

14. டட்ச் புராணக்கதையின் வாயிலாக காலுறைகளை(stockings) தொங்கவிடும் மரபு துவங்கியது. செயின்ட். நிக்கோலஸ் என்பவர், ஏழை மனிதரின் மூன்று மகள்களுக்கும் திருமணம் செய்ய பணம் இல்லாமல் தவித்ததைப் பார்த்து, அவர்கள் நெருப்பூட்டும் இடத்தில் தங்க நாணயங்களைப் போட்டாராம். அங்கு காய்ந்து கொண்டிருந்த காலுறைகுள் தங்க நாணயங்கள் விழுந்தது. அதனால், வீதியில் வாழும் நிலை மாறி அவருடைய மகள்களுக்கு திருமணம் ஆனது. அதை நினைவு கூறும் விதமாக இன்றளவும் காலுறைகளை கிறிஸ்துமஸ் ட்ரீயில் தொங்க விடுகிறார்கள். 

15. முதலில், சாண்டா கிளாஸ் பச்சை, நீளம், பர்பில் போன்ற நிறங்களில் உடை உடுத்தினார். பல வருடங்களாக, கோகோ கோலா நிறுவன பிராண்ட்க்கு இணங்க சிவப்பு நிற ஆடை அணிவதை வழக்காமாக்கிக் கொண்டார். 

Pexels

16. கிறிஸ்துமஸ் பரிசில் உயிர்காத்த ரகசியம் ஒன்று இருக்கிறது. இரண்டாம் உலகப்போரின்போது, ஐக்கிய நாட்டு பிளேயிங் கார்ட்ஸ் கம்பெனி அமெரிக்கா மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை முகவர்களுடன் சேர்ந்து ஒரு விசேஷமான கார்டுகளைத் தயாரித்து, ஜெர்மன் கைதிகளுக்கு பரிசாக கொடுத்து, உயிர் பிழைக்க வைத்தது. அந்தக் கார்டுகளை தண்ணீரில் நனைத்தால், சிறைச்சாலையில் இருந்து தப்பிக்கும் வழி கொண்ட கோப்பு(map) வெளிப்படும் விதமாக தயாரிக்கப்பட்டிருந்ததுதான் அதன் ரகசியமாகும்.

17. 1886ம் ஆண்டு பிரெஞ்சு சுதந்திர தேவி சிலை(The Statue of Liberty)யை ஐக்கிய நாட்டிற்கு கிறிஸ்துமஸ் தினத்தன்று பரிசளித்தது. 225 டன் எடை உள்ள இந்தச் சிலைதான் உலகத்திலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் பரிசாக கருதப்படுகிறது.

18. உலகத்தில், பசிபிக் பெருங்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் ஆகிய இடங்களில் உள்ள இரண்டு தீவுகளுக்கு ‘கிறிஸ்துமஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. 

19. சாண்டா கிளாஸ்ஸை ‘கனகலோகா’(Kanakaloka) என்று ஹவாய்யிலும்; க்ரிஸ் க்ரிங்கில்(Kriss Kringle) என்று ஜெர்மனியிலும்; லீ பெஃபனா(Le Befana) என்று இத்தாலியிலும், பெரே நோயல்(Pere Noel) என்று பிரான்ஸிலும்; டியூஷ்கா மோரோஸ்(Deushka Moroz) என்று ரஷ்யாவிலும் அழைக்கிறார்கள்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை பற்றி  நீங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை  மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டு, குதூகலமாக கொண்டாடுங்கள். இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்!

மேலும் படிக்க - ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை பகிர்ந்து கொள்ள இனிமையான வாழ்த்துக்கள்!

பட ஆதாரம்  - Shutterstock , Pexels

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!