வெள்ளிக்கிழமை சகல ஐஸ்வர்யங்களும் உங்கள் வீடு தேடி வர இந்த முறையில் விளக்கேற்றுங்கள் !

வெள்ளிக்கிழமை சகல ஐஸ்வர்யங்களும் உங்கள் வீடு தேடி வர இந்த முறையில் விளக்கேற்றுங்கள் !

விளக்கேற்றுவது என்பது இந்து மதத்தின் அடிப்படையான வழிபாட்டு முறையாகும். இதனைப் போலவே கிறிஸ்துவர்கள் மெழுவர்த்தி ஏற்றுகின்றனர். ஒளியின் ரூபமே இறைவனின் ரூபம் என்பதே இதன் தத்துவம். நமது ஜீவாத்மாவும் ஒளி ரூபத்திலேதான் நம்முள்ளே இருப்பதாக ஐதீகம்.               

அதனால்தான் சில பழங்கால ஓவியங்கள் கூட உயிர் உடலைப் பிரியும் சமயம் ஒளி ரூபமாக மேலே செல்வதாக வரையப்பட்டிருக்கின்றன. ஒளிக்கும் நமக்குமான உறவு என்பது மிக முக்கியம் வாய்ந்தது. அதனால்தான் நமது கண்களால் காண முடியாத நமது அக ஒளியை தினமும் வீட்டில் விளக்கேற்றுவதன் மூலம் நம்மையறியாமல் நமது உள்ளிருக்கும் அக ஒளியின் பிம்பத்தை பார்த்து வருகிறோம்.

இது கார்த்திகை மாதம். நேற்றுதான் கார்த்திகை தீபம் நடந்து முடிந்தது. இன்றும் நாளையும் நாம் தீபங்கள் (lamp) ஏற்றுவோம். இப்படியான ஒரு நல்ல மாதத்தில் எந்த தீபம் ஏற்றினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

Youtube

திருக்கார்த்திகையை ஒட்டி அடுத்து வரும் நாட்களிலும் முக்கியமான தீபங்கள் ஏற்றப்படுகின்றன. அவை என்ன என்பதை பார்க்கலாம். ஆரம்பத்தில் காளிதேவியை வழிபடும் நோக்கத்தில் பரணி தீபத்தைக் கொண்டாடினார்கள். அதன் பின்னர் அண்ணாமலையார் தீபம் கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். தீபத்திருவிழா என்பது சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். அதனாலேயே அதனை அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.

3வது நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்கள் விஷ்ணு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதனை விஷ்ணு கோயில்களில் வழிபடுகின்றனர். நான்காவது நாள் மிருகசீரிஷ நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது நாட்டுக் கார்த்திகை தீபம் ஆகும். இந்நாளில் பெண்ணையும் மருமகனையும் வீட்டுக்கு அழைத்து வந்து சிறப்புகள் செய்து விருந்து வைப்பர். இன்று குலதெய்வங்கள் வீட்டுக்கு வந்து அருள்புரிவதாக நம்பிக்கை. ஐந்தாம் நாள் திருவாதிரை தினத்தில் வணங்கப்படுவது தோட்டக்கார்த்திகை தீபம். வயல்கள், தோட்டங்கள், கிணற்றடிகளில் தோட்டக்கார்த்திகை தீபங்களை ஏற்றி வழிபடுகின்றனர். இது கிராம தேவதைகளுக்கான வழிபாடு எனவும் கூறப்படுகிறது.

Youtube

தீபம் ஏற்றும்போது குறிப்பிட்ட எண்ணெயினால் ஊற்றும்போது அதற்கேற்ற பலன்கள் அதிகம் கிடைக்கும். அந்த எண்ணெய் சூடாவதால் ஏற்படும் நறுமணம் ஒரு நேர்மறை ஆராவை உருவாக்குகிறது. இதுவே சூட்சுமம். நெய் தீபம் ஞானத்தை உண்டாக்கும். நல்லெண்ணெய் தீபம் எம பயம் தீரும். இலுப்பை எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றினால் நோய்களால் பாதிப்புகள் இருப்பவர் நோய் நீங்கி குணம் ஆவார்கள். விளக்குக்கு என்றே உருவான எண்ணெய்தான் விளக்கெண்ணெய். இந்த எண்ணெயில் தீபம் ஏற்றுவதால் சகல ஐஸ்வர்யங்களும் உங்களுக்கு வசப்படும்.

பூஜை அறையில் ஒருமுக தீபம் ஏற்றுவதால் நடுநிலையான பலன் தான் கிடைக்கும். இருமுகமாக தீபம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை சித்திக்கும்.மூன்று முகமாக தீபம் ஏற்றினால் புத்திரர்களால் சுகம் உண்டாகும். நான்குமுக தீபம் ஏற்றுவதால் நிலம்,பசு மூலம் சுகம் உண்டாகும். ஐந்து முக தீபம் ஏற்றினால் சகல செல்வமும் பெருகும்.

Youtube

தீபம் ஏற்றும்போது கிழக்கு திசையில் ஏற்றினால் பீடைகள் விலகும். துன்பங்கள் நீங்கும். மேற்கு நோக்கி விளக்கேற்றினால் கிரக தோஷங்கள் கடன்தொல்லைகள் நீங்கும்.வடக்கு நோக்கிய தீபம் சுபிக்ஷம் தரும். திருமண தடைகளை நீக்கும். சர்வமங்கலம் உண்டாகும். வடக்கு மஹாலக்ஷ்மிக்கு உரிய திசை. தெற்கு திசையில் தீபம் ஏற்றினால் நல்லதல்ல. எம தீபம் மட்டுமே அந்த திசையில் ஏற்ற வேண்டும்.

தீபத்தை சுத்தம் செய்வது செவ்வாய் , வெள்ளி புதன்கிழமைகளில் செய்யாதீர்கள். ஞாயிறு சுத்தம் செய்தால் கண்பார்வை நன்றாக இருக்கும். திங்கள் சுத்தம் செய்தால் அடங்காத மனமும் அடங்கும். வியாழக்கிழமை சுத்தம் செய்தால் மனக்கவலைகள் மாயமாய் மறையும். சனிக்கிழமை சுத்தம் செய்தால் வாகன விபத்துக்கள் ஏற்படாது.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!