கறுப்பான உதடுகளால் கவலை கொள்கிறீர்களா ! எளிதாக சரி செய்யலாம்.

கறுப்பான உதடுகளால் கவலை கொள்கிறீர்களா ! எளிதாக சரி செய்யலாம்.

கறுப்பான உதடுகளால் கவலை கொள்கிறீர்களா ! எளிதாக சரி செய்யலாம்.

உதடுகள்தான் பெண்களுக்கு பெரும் நம்பிக்கை தரக்கூடிய அடுத்தவரை உடனடியாக ஈர்க்கக் கூடிய இடம். கண்கள் , மூக்கு என சில உறுப்புகள் எதிர்பார்த்தாற்போல அமையாவிட்டாலும் மேக்கப் செய்து கொள்ளலாம். ஆனால் உதடுகள் மட்டும் அழகாக இல்லை என்றால் ஒரு பெண் தன்னுடைய தன்னம்பிக்கையை வெகுவாக இழக்கிறாள். 

சில பெண்களுக்கு உதடுகள் கருப்பாக இருக்கும், இதற்கு ஊட்டச்சத்து குறைபாடும், உடல் உபாதைகளுக்கு பயன்படுத்தும் மாத்திரைகளின் பக்கவிளைகளும் ஒரு காரணம் ஆகும். பித்த உடம்பு இருப்பவர்களுக்கும் கல்லீரல் சிக்கல் உள்ளவர்களுக்கும் உதடு கறுப்பாக இருப்பது என்பது நோயின் அறிகுறி ஆகும். 

எப்படி இருந்தாலும் கருமையான உதடுகள் (dark lips) என்பது ஆரோக்கிய குறைபாடு மற்றும் அழகுக் குறைபாடாகவே பார்க்கப்படுகிறது. அதனால் கருமையான உதடுகளை விரைவாக நிறம் மாற்ற முடியும் என்றால் மாற்றிக் கொள்வதே சிறந்தது.

தேன்

மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உங்கள் உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். பாதாம், ஓட்ஸ், எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்து நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் அலச வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு பொலிவாக இருக்கும்.


பாதாம் பால், பாதாம் எண்ணெய்

அனுதினமும் கறுப்பான உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவி வர வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை கூட மாற்ற முடியும். 

மாதுளை சாறு 

மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம். மாதுளை சாற்றை பஞ்சின் மூலம் தொட்டு உதடுகளில் ஒற்றி எடுக்க வேண்டும்.

கற்றாழை ஜெல்

இரவில் கற்றாழை ஜெல்லை உதட்டில் தடவி அடுத்த நாள் கழுவி விடுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் பலன் கிடைக்கும்.உதட்டின் கருமை நிறம் மாறும்.

சாறு வைத்தியம்

வெள்ளரி சாறு, பீட்ரூட் சாறு, கேரட் சாறு, மாதுளை சாறு, கொத்தமல்லி கீரை சாறு ஆகியவற்றைத் தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒருநாள் உதட்டில் தடவி வந்தாலும் விரைவில் பலன் கிடைக்கும்.உதடுகளின் கருமை நிறம் மறையும்.


எலுமிச்சை சாறு.

எலுமிச்சை ஒரு நல்ல ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் எடுத்து பஞ்சில் தொட்டு உதட்டில் தடவி, 4-5 நிமிடம் கைகளால் மசாஜ் செய்து, அதன் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப்- பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும் கருமை நீங்கும்.

தயிர்

பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். எலுமிச்சையை போலவே தயிருக்கு ப்ளீச்சிங் குணங்கள் உள்ளன. அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு, தயிரை உதட்டில் தடவி நன்கு  மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் கருமை நீங்கும்.இதனை தொடர்ந்து செய்து வந்தால் சில வாரங்களில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.

சர்க்கரை


உதட்டிற்கு ‘ஸ்கரப்’ செய்வதற்கு சர்க்கரை சிறந்த பொருள். அதிலும் சர்க்கரையை தேனுடன் சேர்த்து கலந்து, ஸ்கரப் செய்தால், சர்க்கரை உதட்டில் உள்ள இறந்த செல்களை நீக்கியும், தேன் ஈரப்பசையையும் கொடுக்கும். இப்படி செய்வதால் உதட்டின் கருமை நீங்கும்.

 

பீட்ரூட்


பீட்ரூட் உதட்டில் உள்ள கருமையை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு பொருள். அன்றாடம் பீட்ரூட் துண்டை உதட்டில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவினால், உதடு நாளடைவில் அழகான சிவந்த நிறத்தை பெறும்.

வெண்ணெய்

கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம் என்கிறார்கள். எனவே வறட்சியைப் போக்க உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால் சீக்கிரமே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.

கிளிசரின்

கிளிசரின் லிப்-பாம் போன்றது. உதடுகளின் நண்பன் எனவே கெமிக்கல் கலந்த லிப்-பாமை பயன்படுத்துவதற்கு பதிலாக, கிளிசரினைத் தடவி வந்தால், உதட்டை நீண்ட நேரம் ஈரப்பசையுடன் வைத்து, கருமையை போக்கும்.POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!