logo
ADVERTISEMENT
home / அழகு
சருமத்தில் ஆங்காங்கே இருக்கும் பழுப்பு நிற புள்ளிகள்… வீட்டிலேயே  எளிதாக நீக்கலாம்!

சருமத்தில் ஆங்காங்கே இருக்கும் பழுப்பு நிற புள்ளிகள்… வீட்டிலேயே எளிதாக நீக்கலாம்!

சிலருக்கு சருமத்தில் பழுப்பு அல்லது வெளிர் புள்ளிகள் தோன்றுவதை நாம் கவனித்திருக்கலாம். முகம், கழுத்து  பகுதியில் பெரும்பாலும் காணப்படும். மெலனின் அதிக உற்பத்தி காரணமாக உருவாகும் இந்த பாதிப்பில்லாத புள்ளிகள் சருமத்தின் அழகை கெடுக்கும் வகையில் இருக்கும். 

மனித தோல் நிறம் மெலனின், கரோட்டின், ஆக்ஸெமௌக்ளோபின் மற்றும் மற்ற பொருட்களின் நிறமியின் நிறத்தை உள்ளடக்கியது. மெலனின் அதிகப்படியான உற்பத்தி காரணமாக இந்த பழுப்பு புள்ளிகள் (freckles) தோன்றுகிறது.

மேலும் அளவுக்கு அதிகமாக வெயிலில் சுற்றினால், வைட்டமின் குறைபாடு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றாலும் ஏற்படுகிறது. இந்த புள்ளிகளை நீக்க அழகு நிலையங்கள் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

எனினும் தோல் ஒளிரும் கிரீம்கள்,  நிறமி ஒளிக்கதிர்கள் சிகிச்சை உள்ளிட்டவைகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே எளிமையான முறையில் இந்த புள்ளிகளை எளிதில் நீக்குவது குறித்து இங்கு காண்போம்.

ADVERTISEMENT

எலுமிச்சை

எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. வைட்டமின் சி ஒளிச்சேர்க்கை மற்றும் சூரியனின் தீங்கு விளைவிக்கும் கதிர்களிடமிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவும் நிறமி எதிர்ப்பு பண்புகள் எலுமிச்சையில் உள்ளதால், இது சருமத்தில் இருக்கும் பழுப்பு புள்ளிகளை (freckles) நீக்க உதவுகிறது. எலுமிச்சை சாற்றை ஒரு காட்டனில் நனைத்து புள்ளிகள் இருக்கும் இடத்தில் அப்ளை செய்ய வேண்டும். 15-20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதை வாரத்தில் இரண்டு முறை செய்யலாம்.

மேலும் படிக்க – சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

கற்றாழை

கற்றாழை சருமத்தின் மெட்டாலோதியோனின் உற்பத்தியைத் தூண்டுகிறது. இது புறஊதா கதிர்களால் சேதமான சருமத்தின் பொலிவை புதுப்பிக்கிறது. 1 தேக்கரண்டி அளவு கற்றாழையை எடுத்து கழுவிவிட்டு சருமத்தில் புள்ளிகளில் இருக்கும் இடங்களில் தடவ வேண்டும். பின்னர் கழுவி வர விரைவில் சருமம் பொலிவாகும். இதை நீங்கள் தினமும் செய்யலாம்.

ADVERTISEMENT

மஞ்சள்

மஞ்சள் இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும். மஞ்சளின் முதன்மை அங்கமான குர்குமின் சருமத்திற்கு பிரகாசம் அளிக்கிறது. 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறை எடுத்து ஒன்றாக கலந்து  பேஸ்ட் செய்யுங்கள். இந்த பேஸ்டை சருமத்திற்கு தினமும் பயன்படுவதால் உடனடி மற்றம் கிடைக்கும். இதில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட் உங்கள் சருமத்தில் இருக்கு பழுப்பு புள்ளிகளை நீக்கி ஜொலிக்க செய்யும். 

சந்தன பவுடர்

ஒரு பௌலில் 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அந்த பேஸ்ட்டை பழுப்பு நிற புள்ளிகளின் மீது தடவி 15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும். உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் அப்பகுதியை கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால் அந்த புள்ளிகள் (freckles) காணாமல் போய்விடும். 

தேன்

தேனில் டைரோசினேஸ் செயல்பாட்டைத் தடுக்க உதவும் பினோலிக் மற்றும் ஃபிளாவனாய்டு கலவைகள் உள்ளன.  1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், சுத்தமான தேனை கலந்து பேஸ்ட் செய்து பழுப்பு புள்ளிகள் இருக்கும் பகுதியில் அப்ளை செய்ய வேண்டும்.  இதை வாரத்திற்கு இரண்டு முறை செய்யுங்கள். மேலும் இது சருமத்திற்கு ஈரப்பதத்தை கிடைக்கச் செய்கிறது.

ADVERTISEMENT

தயிர்

தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது அதிகப்படியான மெலனின் உருவாக்கத்தை அடக்குகிறது. இதற்கு 2-3 தேக்கரண்டி தயிர் தேவைப்படும். தயிரை எடுத்து புள்ளிகள் இருக்கும் பகுதிகளில் தடவி சுமார் 15-20 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யவும். பின்னர் தண்ணீரில் கழுவ வேண்டும். இதை நீங்கள் தினமும் செய்து வந்தால் விரைவில் புள்ளிகள் மறைந்துவிடும். 

மேலும் படிக்க – அனைத்து வித சரும பிரச்சனைகளையும் தீர்த்து பொலிவான சருமத்தை பெற ஆக்ஸிஜன் பேஷியல்!

யூகலிப்டஸ் எண்ணெய்

யூகலிப்டஸ் எண்ணெய் ஒரு அத்தியாவசிய எண்ணெயாகும், இது அதன் மருந்தியல் பண்புகளுக்கு பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. யூகலிப்டஸ் எண்ணெய் டைரோசினேஸ் செயல்பாடு மற்றும் மெலனின் தொகுப்பைத் தடுக்கிறது. மேலும் இது ஹைப்பர்கிமண்டேஷனைக் குறைக்க உதவுகிறது.

ADVERTISEMENT

யூகலிப்டஸ் எண்ணெய்யுடன், சில துளிகள் பாதாம் எண்ணெய் கலந்து சருமத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் விடவும். பின்னர் கழுவி விட வேண்டும்.  தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன் ஒவ்வொரு நாளும் ஒரு முறை இதனை செய்து வந்தால் பழுப்பு புள்ளிகள் மறந்துவிடும். 

கோகோ வெண்ணெய்

கோகோ வெண்ணெய் பாலிபினால்கள் உள்ளிட்ட பயோஆக்டிவ் சேர்மங்களை கொண்டுள்ளது, அவை ஒளிச்சேர்க்கையை வழங்குகின்றன மற்றும் புற ஊதா தூண்டப்பட்ட தோல் சேதத்தின் விளைவுகளை மாற்றியமைக்க உதவுகின்றன. கோகோ வெண்ணெய்யை பயன்படுத்தி பழுப்பு நிற புள்ளிகளின் வளர்ச்சியை தடுக்கலாம். 1-2 டீஸ்பூன் கோகோ வெண்ணெய்யை சருமத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். ஒரே இரவில் அதை விட்டுவிட்டு மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.  

வாழைப்பழ தோல்

வாழைப்பழத் தோலில் மெலனோஜெனீசிஸை தடுக்கக்கூடிய பயோஆக்டிவ் சேர்மங்கள் உள்ளன. முதலில் பாலை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். ஓரளவு உலர்ந்ததும் காட்டன் துணியால் முகத்தை துடைக்க வேண்டும். அதன் பிறகு வாழைப்பழத்தோலின் உள் பகுதியை எடுத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் பழுப்பு புள்ளிகள் நீங்கி சருமம் பளிச்சிடும்.

ADVERTISEMENT

தக்காளி

நற்பதமான தக்காளியை அரைத்து கூழ் எடுத்து, அதனை பழுப்பு நிற புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 20-25 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரால் அப்பகுதியை கழுவ வேண்டும். இந்த சிகிச்சையை தினமும் செய்து வந்தால், சருமத்தில் அசிங்கமாக இருந்த பழுப்பு நிற புள்ளிகள் நீங்கி பிரகாசமாக இருக்கும். 

கிவி பழம்

கிவி பழத்தில் குரோசெட்டின் போன்ற ஃபிளாவனாய்டுகள் உள்ளன. அவை டைரோசினேஸ் செயல்பாட்டைத் தடுக்கக்கூடும். இது எந்தவிதமான தோல் நிறமிகளையும் குறைக்க வழிவகுக்கும்.  1 கிவி பழம் மற்றும் 2-3 ஸ்ட்ராபெர்ரி பழங்களையும் கலந்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி உலர்ந்த பின்னரே கழுவ வேண்டும். இதை வாரத்தில் இரண்டு முறை செய்யுங்கள். சருமம் பொலிவாகும். கிவி பழத்தை சாப்பிட்டு வந்தாலும் தோலில் மினுமினுப்பு தன்மை அதிகரித்து இளமை தோற்றத்தை உண்டாக்கும். 

மேலும் படிக்க – இளம் அம்மாக்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பாகவும்,ஆரோக்கியமாகவும் வளர்க்க பயனுள்ள குறிப்புகள்

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

06 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT