பல நற்பலன்கள் கொண்ட அற்புத மூலிகை நாய் கடுகு!

பல நற்பலன்கள் கொண்ட அற்புத மூலிகை நாய் கடுகு!

நாய் கடுகு! பலர் இந்த பெயரை கேட்டிருக்க மாட்டார்கள். இது ஒரு அற்புதமான மூலிகை. இந்த செடியை  நீங்கள் தெருவோரங்களில், கட்டு பகுதியில், தரிசு நிலங்களிலும் அதிகம் காணலாம், மழை காலங்களில் இது அதிகமாக காணப்படும். ஆனால் அதுதான் நாய் கடுகு என்று பலருக்கும் தெரியாமல், ஏதோ ஒரு களைச்செடி என்று கடந்து சென்று விடுவார்கள்.

இந்த நாய் கடுகு (mustard seeds) செடியின், பூக்கள், விதைகள், மற்றும் இலைகள் அனைத்துமே, மருத்துவம் மற்றும் உணவுக்கு பயன்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர், கிளிமே விச்கோச (Cleome viscosa). இந்த நாய் கடுகை, நாய்வேளை, மற்றும் காட்டுகடுகு என்ற பெயரிலும் அழைப்பார்கள்.

இந்த நாய் கடுகை பற்றி தெரிந்து கொள்ள இங்கே உங்களுக்காக சில அறிய தகவல்கள்

Shutterstock

 1. இந்த செடி ஒரு மீட்டர் உயரம் வரை வளரும்
 2. இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிறிதாக இருக்கும்
 3. இந்தியாவில் மட்டுமல்லாது, பாகிஸ்தான், சைனா, அமெரிக்க போன்ற நாடுகளிலும் இந்த நாய் கடுகு செடி அதிகம் காணப்படுகின்றது.
 4. இதன் இலைகள் சிறிதாகவும், மூன்று பிரிவுகளோடும் இருக்கும்
 5. இதன் காய்கள் குச்சி போன்று நீளமாக இருக்கும். இதனுள் இருக்கும் விதைகள் கடுகு போன்று சிறிதாக இருக்கும், அது நாய் கடுகு என்று அழைக்கபடுகின்றது
 6. இந்த நாய் கடுகு செடியின் விதை, காய், பூக்கள், இலைகள், தண்டு, வேர் என்று அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டது
 7. இந்த நாய் கடுகு சித்த வைத்தியம், யுனானி மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது
 8. இது பல நோய்களை குணப்படுத்த பயன்படுகின்றது
 9. இந்த செடியில் ப்லேவனைடு, ப்லேனைடுஸ், டேர்பின், ஹைட்ரோகார்பன், பளிப்ளினைடுஸ் போன்ற பல நன்மை தரும் வேதி பொருட்கள் உள்ளன
 10. நுண்ணுயிர் எதிர்ப்பு செயல்பாடு,  ஹெல்மாடிக் எதிர்ப்பு செயல்பாடு டயரியல் எதிர்ப்பு, கட்டி எதிர்ப்பு, எமெடிக் எதிர்ப்பு, ஹெபடோ பாதுகாப்பு போன்ற பண்புகளும் இதற்கு உள்ளது
 11. கல்லீரல் குறித்த அனைத்து பிரச்சனைகளையும் குணப்படுத்த இது ஏற்ற மருந்தாக (பலன்) உள்ளது, குறிப்பாக் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டு குறைகள் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது  
 12. வயிற்றில் இருக்கும் கொக்கி புழு, மற்றும் நாடா புழுக்களை வெளியேற்ற இது உதவும்
 13. நரம்பு தளர்ச்சியை இது போக்க உதவும்
 14. ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும் 
 15. வாந்தி மற்றும் வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்
 16. உடலில் உருவாகும் தேவையற்ற அணுக்களை வளர விடாமல் தடுக்கும்
 17. தூக்கமின்மை பிரச்சனையை போக்கி, நல்ல தூக்கத்தை பெற உதவும்
 18. காது வலி, மற்றும் காதில் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவும்
 19. அனைத்து சரும பிரச்சனைகளை போக்க இது உதவும்
 20. இதன் இலைகள் பிசுபிருப்பாக இருக்கும்
 21. வயிற்று புண், மஞ்சக்காமாலை, சுரம் போன்ற பிரச்சனைகளை போக்க உதவும்
 22.  இதன் வேர்கள் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவும்
 23. வாயு பிரச்சனையை போக்க உதவும்

மேலும் படிக்க -  எள் விதையின் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்

நாய் கடுகை எப்படி பயன்படுத்துவது ?

இந்த நாய் கடுகை சரியான முறையில் பயன்படுத்தினால், பல நன்மைகளைப் (benefits) பெறலாம். இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்

1. வீட்டில் நேர்மறை சக்திகளை அதிகரிக்க

Shutterstock

இந்த நாய் கடுகு பூஜை / கடவுள் வழிபாட்டிலும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. குறிப்பாக, வீட்டில் நேர்மரஈ சக்திகளை அதிகரிக்க இது உதவுகின்றது. வாரம் இரு முறை, அல்லது தினமும், உங்களுக்கு கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப, இந்த நாய் கடுகை சாம்பிராணி புகையுடன் சேர்த்து வீட்டில் புகை போட்டு வருவது நல்லது. அப்படி செய்யும் போது, வீட்டில் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். மேலும் இதன் புகையை சுவாசிப்பதால், உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

2. காது வலி

இந்த நாய் கடுகின் இலைகள் காது வலியை போக்க பெரிதும் உதவியாக உள்ளது. காதில் ஏற்படும் வலி, அடைப்பு, சைனசால் ஏற்படும் வலி, போன்ற பல பிரச்சனைகளை இது குணப்படுத்த உதவும். இந்த நாய் கடுகின் இலைகளை தேவையான அளவு எடுத்து, நன்கு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சமமான அளவு நல்லெண்ணையை சேர்த்து நன்கு சூடு செய்ய வேண்டும். பின்னர் இது குளிர்ந்த பின் வடிகட்டி, ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக் கொண்டு, 3 -5 நாட்களுக்கு காதுகளில், இரண்டு சொட்டு விட்டு வர வேண்டும். இப்படி செய்து வந்தால், விரைவாக குணமடையலாம்.

3. உணவில் நாய் கடுகு கீரை

Shutterstock

இந்த நாய் கடுகு கீரையை சமையலில் பயன்படுத்தலாம். இதன் இலைகளை பறித்து மற்ற கீரை போல சமைக்கலாம். அல்லது பிற கீரைகளுடன் சேர்த்தும் சமைக்கலாம். இந்த கீரையில் துவையல், பொரியல் மற்றும் கடிந்தும் சமைத்து சாப்பிடலாம். இப்படி சாப்பிட்டு வந்தால், வயிற்றில் இருக்கும் பிரச்சனைகள், குறிப்பாக வாயு, வயிற்று புண், வயிற்றில் இருக்கும் நுண் புழு போன்றவை அகலும்.

4. வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேற

நாய் கடுகுப் பொடியை சிறிது எடுத்து அதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து காலை மற்றும் மாலையில் சாப்பிட வேண்டும். இப்படி இரண்டு நாட்கள் சாப்பிட்டால், வயிற்றில் இருக்கும் புழுக்கள் வெளியேறும்

5. மாதவிடாய் பிரச்சனையை போக்கும்

Shutterstock

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கை சீர் செய்ய இந்த நாய் கடுகு உதவியாக உள்ளது. சிறிது நாய் கடுகை எடுத்து, மிதமாக வறுத்து, துவையல் செய்து, சுடுசோற்றுடன் சாப்பிட வேண்டும். 

மேலும் படிக்க - பெருஞ்சீரகத்தை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள சில சுவாரசியமான தகவல்கள்!

பட ஆதாரம் - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!