அனைவருடனும் பகிர குடியரசு தின வாழ்த்துக்கள்! (Republic Day Wishes And Quotes In Tamil)

அனைவருடனும் பகிர குடியரசு தின வாழ்த்துக்கள்! (Republic Day Wishes And Quotes In Tamil)

குடியரசு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26, ஆம் நாள் வருகின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. இந்த திருநாளில், அனைவரும் ஒன்று கூடி, நம் பாரத மாதாவிற்கு நன்றி செலுத்தி, பெற்ற சுதந்திரத்தையும், உரிமையையும், நம்பிக்கையோடு கொண்டாடி மகிழ்வோம்.

இந்த ஆண்டு நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களுடன் குடியரசு தின விழாவை கொண்டாடி மகிழ, உங்களுக்காக இங்கே ஒரு அழகான குடியரசு தின வாழ்த்து(republic day wishes/greetings) தொகுப்புகள்.

Table of Contents

  குடியரசு தின வாழ்த்துக்கள் (Republic Day Wishes In Tamil)

  1. அரசியலமைப்பு, அமெரிக்க கொடுத்தது
  நம்பிக்கை, சுதந்திரம், சமாதானம் ஒரு பெருமை
  எனவே அது உருவாக்கப்பட்ட நாளை மதித்து
  ஒரு புன்னகையுடன்,
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  2. குடியரசு தேசம் நம் தேசம்
  நெடுந் புகழ் ஓங்கியொளி வீசும்
  அன்பின் வழியில் நாம் சென்றோம்
  அஹிம்சையால் அதை வென்றோம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  3. ஈகையும் இரக்கமும் இணைந்து இன்று
  பகையை வெல்வோம் நட்பால் நன்று
  ஒற்றுமை அன்பினை அனைத்து நின்று
  வேற்றுமை வென்றால் உண்டு ! மலர்ச்செண்டு!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  4. பட்டொளி வீசி பறக்கக் காணீர் !
  பாரத புகழ்க்கொடி சிறக்கக் காணீர் !
  செப்பும் செம்மொழிகளை சரம் தொடுத்து
  பாரத மாதாவுக்கு மாலை சூட வாரீர்!
  அடிமைச் சங்கிலியை உடைத்து எறிந்தோம்
  மனிதச் சங்கிலி என்னும் மகத்துவத்தால்
  புனித பாரதம் காக்க புறப்படுவோம் !
  இனிய இந்தியா இன்புற்று வாழியவே!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  5. ஆகாய சாகஸம் ஆர்ப்பரித்து காணீர்
  அலங்கார அணிவகுப்பை கொடியசைத்து காணீர்
  ஓர்வானம் ஓர்பூமி ஓர் மக்களாய் ஒன்றிணைவோம்
  பேரானந்தமிகு குடியரசுதினத்தினை போற்றிடுவோம் !
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  6. இளைஞர்கள் கைகோர்த்து நம்பிக்கை கொடிபிடித்து
  குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக் கொடிதனை ஏற்றுவோம்!!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  7. அன்று முதல் இன்று வரை முடிவை எட்டா தீப ஒளியாய்
  வேற்றுமையில் ஒற்றுமை நம்மோடும் நம் உணர்வோடும்
  தினமும் பயணம் செய்ய வழி வகுத்த அரசியல் அமைப்போடு
  அனைவரும் பயணிப்போம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  8. அடக்கு முறை செய்த அன்னிய ஆங்கிலேயர்களிடமிருந்து
  அகிம்சை என்னும் அறவழியில் வெற்றிவாகை சூடிய தினம்
  உப்பு சத்தியாகிரகங்களால் தன் உடல்களை வருத்தி
  தாயகத்திற்க்கு பெருமைத்தேடித்தந்த தினம்
  தன் குருதிகளையும் தன் தேகங்களையும் தன் தாய்நாட்டிற்காக
  அர்ப்பணம் செய்தவர்களை நினைவுக்கூறும் தினம்
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  9. தன் வம்சா வழியினர்கள் வசந்தமாய் வாழ
  தன் வாழ்நாட்களை வலியுடன் கழித்தவர்களை வருத்தமுடன் நினைக்க
  சுதந்திரக்காற்றை நம் தேசத்தில் நிலவவிட
  தம் சுகங்களையெல்லாம் தூக்கியெறிந்த தியாகிகளின் ஒரு தியாக தினம்
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  10. நம் தாய்நாட்டினை அன்னியர்களின் பிடியிலிருந்து காப்பாற்ற
  பாடுபட்டவர்களை இன்றுமட்டும் நினைப்பதில் நியாயமில்லை
  எந்த நோக்கத்தில் நமக்காக சுதந்திரத்தை வாங்கித்தந்தார்களோ
  அதை கண்ணியத்துடன் காத்துக்கொள்ளவேண்டியது நம் கடமை
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  குழந்தைகளுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் (Republic Day Quotes For Children)

  Pexels

  11. நாட்டை நினைக்கும்போது நாட்டுக்காக போராடியவர்களையும்
  நினைவு கூறுவோமாக!
  அத்தனை பேரையும் புகழ்ந்து போற்றுவோம்!
  எந்தாய் திருநாட்டில் வாழும் கோடான கோடி மக்களுக்கும்
  உலகம்முழுவதும் இருக்கும் என் இந்திய குழந்தைகளுக்கு
  என் அன்பான குடியரசு தின வாழ்த்துகள்!!

  12. சுதந்திர காற்றை சுகமாய் அனுபவிக்கும் நம் சுதந்திர கொடி போல்
  நாமும் நமக்காக பாடுபட்டு வாங்கித்தந்ததை பத்திரப்படுத்தி வாழ்வோமாக
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  13. விடுதலை இந்தியாவில் விடியலைத் தந்தது குடியரசு!
  பள்ளத்தில் வாழ்ந்தவர் சிலர்! வெள்ளத்தில் மிதந்தவர் சிலர்!
  அனைவரின் உள்ளத்தைச் சமப்படுத்தியது குடியரசு!!
  இந்த உரிமைக்குரிய நாளை போற்றிடுவோம்!
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  14. நல்லற நாடிய மன்னரை வாழ்த்தி
  நயம்புரிவாள எங்கள் தாய் - அவர்
  அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப்பின்
  ஆனந்தக் கூத்திடுவாள்.
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  15. நாட்டுப்பண் பாடியதும் - உடல்
  நரம்புகள் புடைப்பதல்ல தேசபக்தி
  நாட்டின் பிரச்சனைகள் களைய- நாம்
  நாளும் உழைப்பதே தேசபக்தி !..
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  16. கொடியேற்றி சுதந்திர தினம் கொண்டாடுவது மட்டுமல்ல தேசபக்தி-
  சாதி கொடுமைகள் செய்ய நினைக்காத
  கொள்கையுடன் வாழ்வதே தேசபக்தி !..
  பாரதமாதா படத்தினை வைத்து குனிந்து பணிவது மட்டுமல்ல தேசபக்தி-
  உயர் பட்டம் பெற்றும் பலநாட்டில் வசியாமல் -நம்
  பாரத மக்களுக்கு பணியாற்றுவதே தேசபக்தி !....
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  17. தியாகிகள் பெருமை நினைந்து தினம்
  திண்ணையில் அமர்ந்து பேசுவதை மட்டும் செய்யாமல்,
  தனித் திறமையதை வளர்த்து உலகில் – நம் தேசத்தின் புகழ் உயர்த்த வேண்டும்!
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  18. நள்ளிரவில் சுதந்திரம் பெற்றொம்; விடியலை நோக்கி செல்கின்றோம்;
  வேகம் கொஞ்சம் குறைவுதான்; தடைகளும் கொஞ்சம் அதிகம்தான்;
  ஆனாலும் தளர்ச்சி கண்டதில்லை; தயங்கி நிற்கவும் போவதில்லை;
  பயணம் என்றும் தொடரும்; விடியலை வென்றும் காண்போம்.
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  19. இந்தியா என் தாய்நாடென்று வெறுமனே
  இயம்புவதை விட்டு விட்டு – நம் இன ஒற்றுமை மற்றும்
  இயற்கைவளம் சீரழியாமல் இதயம் வைத்து காப்பதே நம் கடமையாகும்!..
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  20. மன்னர்கள் காலத்தில் முடியரசு!
  என்றுமே போற்றத்தக்கது நம் குடியரசு!!
  குழந்தைகளுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  கல்லூரி மாணவர்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் (Republic Day Quotes For Students)

  21. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் உரித்தாகுக!
  வாழ்க இந்திய குடியரசு!
  வீழ்க ஊழலும் அராஜகமும்!!
  மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  22. நெல்லுக்கு விலை கேட்டு நீங்கள் போராடினாலோ,
  நிலத்திற்கு உரிமை கேட்டு நீங்கள் நிமிர்ந்தெழுந்தாலோ
  வளம் கொழிக்கும் காடுகள் மலைகளை
  வளைக்கும் முதலாளிகளை நீங்கள் எதிர்த்தாலோ
  தொழிலாளர் உரிமையென்று துடித்தெழுந்தாலோ
  நிச்சயம் முப்படையுடன்
  உங்களுக்காகவே ’குடியரசு’ தயார்!
  மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  23. அன்னியரின் அடிமை ஆட்சி அகன்று
  அன்னை தேசத்தின் முடியாட்சி தோழர்களே!
  உங்களின் உள் இருக்கும் ஆக்க சக்தி!
  வளமான வாழ்க்கைக்கு பயன்படுத்து உன் புத்தி!
  வாழ்கின்ற சூழ்நிலையை பார் சுற்றி!
  நான் பேசுகின்றேன் உன் எதிர்காலத்தைபற்றி!
  சுதந்திரத்தின் காற்றை நீ சுவாசி!
  மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  24. தேசீய ஒற்றுமை தாங்கிய மணிக்கொடி தேரனெ அசைந்திட,
  தியாகத்தை காட்டுது!
  நேசிக்கும் நாட்டினை நெஞ்சினில் வைத்திட, நெகிழ்ந்திடும் உணர்வினை நிறைவாக கூட்டுது!
  வீசிடும் முப்படையும் வீரநடை காட்டிட வெற்றியென அணிவகுப்பு வீரத்தை ஊட்டுது!
  ஆசிய மண்ணினில் அகிம்சையை கொண்டிட அத்தனைத் துறையிலும் ஆக்கத்தைத் தீட்டுது!
  மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  25. மக்களாட்சி தத்துவ மகிமையில் திளைத்திட
  மாபெரும் குடியரசு மனங்களில் நின்றாடும்!
  பக்கத்து நாட்டோரும் பகையிலா நட்புறவால்
  பாரதம் வந்திட பாங்குடனே கொண்டாடும்!
  திக்கெட்டும் தாய்நாடு திருநாளைக் கண்டிட
  தீரர்களின் சுதந்திர தியாகமும் வந்தாடும்!
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  26. முக்கடல் சூழலாய் முகிலோடு இமயமும்
  முன்னேற்ற இந்தியா பகமையை பந்தாடும்!
  மூவண்ண கொடியோடு முத்திரை சக்கரமும்
  மூச்சென தாய்நாட்டில் முழுநிலவாய் வீசிடும்!
  பூவாலே மாலையிட்டு புன்னகையால் கோலமிட்டு
  பொன்னாக வரவேற்க பூவுலகம் பேசிடும்!
  மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  27. நாவாலே புகழ்மணக்க நாமெல்லாம் போற்றிட
  நல்லாட்சி குடியரசு நம் வீட்டு விழாவாக
  பாவாலே புகழ்ப்பாடு பாரதம் போற்றிடு
  பாரினில் உயர்ந்திட பன்பாடு காத்திடு!
  மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  28. குடியரசு தினம் பட்ட கஷ்டங்கள் பார் அறியும் ;
  பசுமை நெஞ்சின் சுதந்திர வேட்க்கை !
  சங்கடம் இன்றி சம உரிமை கொடுத்து ;
  சமயச்சார்பற்ற நாடாய் சமுதாய நலம் வேண்டி !
  சமத்துவமும் சகோதரத்துவமும் சமமாய் வேண்டி !
  இன்னன் நாளை போற்றிடுவோம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  29. ஒருமைபாட்டை ஊக்குவிக்கவும்: ஒற்றுமையை நிலைநாட்டவும்;
  அரசியல் அமைப்பை அழகாய் தந்தனரே !
  நாட்டு மக்களின் நலனை காக்க போற்றுவோம் குடியரசு தினத்தை !
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  30. சுதந்திரம் அடைந்தாலும் தந்திரமாய் நுழைந்தது ஜாதி!
  இந்தியாவில் சுதந்திரமாய் சுற்றித் திரிகிறது ஜாதி!!
  மானுடத்தை மந்திரம் போட்டு மரிக்கவைக்கிறது மதம்!
  இந்தியனை எந்திரமாய் ஓட வைக்கிறது தீவிரவாதம்!!
  இளைஞர்கள் கைகோர்த்து நம்பிக்கை கொடி பிடித்து
  குடியரசைப் போற்றுவோம்! – நம்தேசக்
  கொடிதனை ஏற்றுவோம்!!
  மாணவர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  மனம் கவர்ந்த குடியரசு தின வாழ்த்துக்கள் (Inspiring Republic Day Quotes)

  Pexels

  31. பேயவள் காண் எங்கள் தாய் - பெரும்
  பித்துடையாள் எங்கள் தாய்
  காயழல் ஏந்திய கையன் தன்னைக்
  காதலிப்பாள் எங்கள் தாய்....
  காளைக்காக போராடிய காளைகளே
  இன்று உங்களின் கொம்புகள் கூர்தீட்டப்படட்டும்.
  வலியின்றி கிடைக்கும் எதற்கும் மதிப்பில்லை...
  அன்று சுதந்திரத்திற்காகப் போராடிய குருதிகளின் ..மிச்சம் நீங்கள்..
  எங்களின் எதிர்கால நம்பிக்கைகளே.. உணர்வு பெற்று
  உள்ளம் தெளிந்தவர்களே..
  இத்தேசத்தின் எதிர்காலம் உங்கள் கையில்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  32. சுதந்திரத்திற்காக இன்றும் களம் இறங்க காத்திருக்கும் போராளிகளே...
  வடிவமையுங்கள் உங்களை...
  மனதால் இணைந்த மகிழம் பூக்களே மணத்தால் அழியுங்கள் கயவர்களை...
  ஒருவிரலால் விரட்டும் காலம் வரும்.. ஓயாமல் காத்திருங்கள்...
  இளைஞர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  33. பண்பாட்டு போராளிகளே... பண்பட்டு செயல்படுங்கள்...
  உரிமைக்காக புண்படவும் தயாராகுங்கள்....
  நம் நாடு உங்களால் உண்மையான குடியரசு நாடாகட்டும்....
  இளைஞர்களுக்கு இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  34. குடிகெடுக்கும் குடியொழியும் நாள்தான் ஒன்றே –உண்மைக்
  குடியரசாய் கொண்டாடி மகிழ்வோம் நன்றே -மேகம்
  இடியிடித்தும் மழையின்றி போதல் போல – வீணே
  எண்ணற்ற தியாகிகளின் தியாகம் சால -அழிந்து
  தடியெடுத்தோர் ஆளுகின்ற நிலைதான் கண்டோம்- நாளும்
  தாங்கிடவே இயலாத் துயரே! கொண்டோம் –நல்ல
  முடிவெடுத்து வாக்குகளைப் போட வேண்டும் –என்ற
  முடிவொன்றே குடியரசு வாழ்த்தாம் ஈண்டும்
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  35. துயரின்றி நாம் வாழ துன்பம் பல கண்டவர்களுக்கும்
  ஒய்யாரமாக நாம் வாழ உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
  மானத்தோடு நாம் வாழ செக்கிழுத்த செம்மல்களுக்கும்
  சுதந்திரமாக நாம் வாழ சண்டையிட்ட மறவர்களுக்கும்
  சுதந்திர நாளில் இதய அஞ்சலியை செலுத்துவோம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  36. திக்கு கால் முளைத்து சாதி ஆனதோ
  மதத்திற்கு மதம் பிடித்து மரணம் ஆகின்றதோ?
  இதுவா சுதந்திரம்?
  சாதியா நம் ஒருமைப்பாடு? மதமா நம் ஒற்றுமை?
  உண்மை தான் நம் பண்பு..! உழைப்பு தான் நம் தெம்பு..!
  அன்பு ஒன்று தான் நம் பிணைப்பு..!
  இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்..!

  37. சூரியனுக்கு இரவில் சுதந்திரமில்லை, சந்திரனுக்கு பகலில் சுதந்திரமில்லை
  பளிச்சென்ற பகலிலும் பனிவிழும் இரவிலும் முப்பொழுதிலும் எப்பொழுதிலும் இந்தியனுக்கு சுதந்திரம் உண்டு !!!
  ஆங்கிலேயனிடம் அடிமையானது அறியாமையினால், வளமையை விட்டது புரியாமையினால்
  மிஞ்சியவற்றை அந்நியனுக்கு விற்காமல் இநதிய வளர்ச்சிக்கு இயற்கையை
  அழைத்து மரியாதை செய்து வளம் பெருக்கி வானுலகம்
  போற்ற வல்லரசாக்கி இந்தியாவை இமயமெனத் தூக்கி நிறுத்துவோம்
  பெற்ற சுதந்திரத்தைப் போற்றுவோம், அனைவருக்கும் பயனுள்ளதாய் மாற்றுவோம் !!!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  38. இரவில் வாங்கினோம் இன்னும் விடியவில்லை!
  இன்னொரு சுதந்திரம் வேண்டும், இரவில் எதைக் கொடுத்தான்?
  எதை வாங்கினோம் எவர் வாங்கினார் ஏதும் தெரியவில்லை!
  ஒரு பகற் பொழுதில் உச்சி வெயிலில் ஒரு சுதந்திரம் வேண்டும்”
  இன்னொரு சுதந்திரம் நமக்கு கிடைக்குமா?

  39. முழுசுதந்திரமே எங்கள் உயிர்மூச்சு, மூவர்ண கொடி காண
  முன்னூற்றைம்பது ஆண்டுகள் அடிமைகளாக..
  எத்தனை உயிர்கள் கொடுத்திருப்போம், எத்தனை உணர்வுகள் இழந்திருப்போம்!
  சில விதைகள் பலிகளாக, பல விதைகள் வலிகளாக!!...
  உடல் மண்ணிலே வீழ்ந்தாலும் கொடியினை மார்பிலே சுமந்தோமடா!!
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!

  40. ஜாலியனில் சுட்ட சூடுகளை நெஞ்சில் மெடல்களாக ஏந்தினோம்!!
  உரிமைக் குரலுக்காக கொடுத்த சிறை வாசத்தை சொர்க்க தேசமாக பெற்றோம்!!
  பாதயாத்திரைகள் பல செய்தோம்! நித்திரைகள் பல இழந்தோம்!
  உன் முகத்திரையை கிழிப்பதற்கே!!
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!

  வாட்ஸ் ஆப்பில் பகிர குடியரசு தின வாழ்த்துக்கள் (Republic Day Status For Whatsapp)

  41. சட்டங்களை எதிர்த்தும் பட்டங்களை துறந்தும் - உன்
  கொட்டங்களை அடக்கினோமடா...
  போட்டிக்கு அடி பணியாத ஆங்கிலேயன்
  பாரதியின் பாட்டுக்கு அடிபணிந்தானே...
  இம்சைக்கு இனங்காத இனவெறியன்
  காந்தியின் அஹிம்சைக்கு அடிபணிந்தானே...
  பஞ்சம் பிழைக்க வந்த பரங்கியனே
  இனி உன்படம் இங்கு ஓடாது, ஓட்டமெடு உன் தேசத்திற்கு..

  42. வெள்ளையனே உன்சாயம் வெளுத்துப் போச்சு!
  அவனுக்கு எதிராக உப்பினைக்காச்சு!
  இனி உனக்கில்லை மரியாதைப் பேச்சு!
  முழு சுதந்திரமே எங்கள் உயிர் மூச்சு!
  உயிர் மூச்சு! உயிர் மூச்சு! உயிர்மூச்சு!...
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  43. அஞ்சி அஞ்சி வாழ்ந்த காலம், மிஞ்சி பேசி மாய்ந்த சோகம்
  உயிர்வதைய இறுதி வரை நிலைத்த தியாகம்
  ரத்தமும் சதையுமாய் உறவிழந்து கதறிய கண்ணீர் கோலம்
  இவைகள் மொத்தத்திற்குமான முற்றுப்புள்ளி வீர சுதந்திரம்!
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  44. உரிமைகள் தொலைத்து உயிர் பல கொடுத்து
  போராடி கண்ட பெருவிழா
  நம் ஒவ்வொருவருக்குமான திருவிழா!
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  45. எத்தனை எத்தனை தடியடிகள்!
  எண்ணிலடங்கா கசையடிகள்!
  இப்படித்தான் கழிந்தன பல நொடிகள்!
  அதை நொறுக்கிக் கண்ட பொன் விடியல்!
  உயிர் இனிக்கும் இந்த சுதந்திரப்படையல்!
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  46. வரி மறுத்து மேலை உடை வெறுத்து,
  செக்கிழுத்து உயிர்சிதைந்து, துயர் பல தாண்டி பெற்ற உயிர்
  தழைத்து நிற்குமிந்த சுதந்திரப் பயிர்
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  47. முன்னோர்தம் தியாகம் அறிவோம்
  அவர்களின்றி ஏது இந்த அளவிடற்கரிய ஆனந்தம்?
  அவர்களால் இன்று தேசம் நமக்குச் சொந்தம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  48. உதிரம் தந்து உவகை நல்கிய மறவர்களை நெஞ்சில் சுமப்போம்!
  வீசும் காற்றில் அசையும் கொடியினில் சுதந்திரம் உணர்வோம்!
  பாரத பூமியின் புதல்வர்கள் நாமும் தேசம் உச்சம் காண சூளுரைப்போம்!
  சுடரொளி பரவ சுகித்திருப்போம்
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  49. சுதந்திரம் பெற்றது நள்ளிரவில், அதனால் தான் என்னவோ
  முழுமையான விடியல் நோக்கி பயணம் இன்னமும் தொடர்கிறது...
  குடியரசு தின வாழ்த்துகள்

  50. தலைப்புச் செய்தி – நினைவூட்ட, மந்திரத்தாலும், தந்திரத்தாலும்
  பெற்றதல்ல எங்கள் சுதந்திரம்;
  உதிரத்தாலும், உயிர் தியாகத்தாலும் கிடைத்தது எங்கள் சுதந்திரம்;
  மாயத்திலும், துளி நிமிடத்திலும் அடைந்ததல்ல எங்கள் சுதந்திரம்;
  காயத்திலும், கடல் போரிலும்கண்டது எங்கள் சுதந்திரம்;
  இந்த சுதந்திரத்தை என்றும் போற்றுவோம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  தலைவர்களின் வாழ்த்துக்கள் (Quotes By National Leaders)

  Pexels

  51. குடியரசு தின அப்துல் கலாம் உரை
  “இந்திய குடிமக்களே, உங்கள் அனைவருக்கும் 57-வது குடியரசு தினத்தை முன்னிட்டு எனது வாழ்த்துக்கள். நமது நிலப்பகுதி, கடல் பகுதி, வான்பகுதிகளை பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், ஆயுதப்படை வீரர்கள், மத்திய மாநிலங்களின் காவல் துறையினருக்கும், உள்நாட்டில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
  நமது ராணுவத்தின் இளநிலை அதிகாரிகளுக்கு எனது அரசு, ஓய்வூதிய பலன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு ஜனவரி முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ள இந்த திட்டத்தின் மூலம் 12 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.”

  52. 2018 ஆம் ஆண்டு இந்திய குடியரசு தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் ஆற்றிய உரை -
  “நமது 69-வது குடியரசு நாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். நமது நாட்டையும், இறையாண்மையையும் கவுரவித்து, கொண்டாடும் நாள் இது. நாம் சுதந்திரம் பெறுவதற்கும், நமது குடியரசை உருவாக்கவும் ரத்தம் சிந்தி, எண்ணற்ற தியாகம் புரிந்த லட்சக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களை நினைவுகூரும் நாள் இது. அனைத்திலும் மேலாக நமது குடியரசின் பண்புகளை போற்றும் நாள் இது.”

  53. பாரத தேசத்தின் 67 வது குடியரசு தின நாளில், மான்புமிகு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஆற்றிய உரை
  ” குண்டு மழைக்கு மத்தியில் அமைதிப் பேச்சு சாத்தியமில்லை”

  ஊக்கமளக்கும் குடியரசு தின பொன்மொழிகள் (Motivating Republic Day Quotes)

  54. கோபத்திலும், வெறும் வாதத்திலும் பெற்றதல்ல இந்த சுதந்திரம்;
  வீரத்திலும், விவேகத்திலும் விளைந்தது இந்த சுதந்திரம்;
  ஏக்கத்திலும், தூக்கத்திலும் விழித்ததல்ல இந்த சுதந்திரம்;
  கவி ஏற்றத்திலும், கனவு மாற்றத்திலும் விடிந்தது இந்த சுதந்திரம்;
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  55. உயிர் ஓட்டத்திலும், விடும் மூச்சினிலும்
  பறக்குது பார் எங்கள் சுதந்திரம்-
  விண்ணில் பறக்குது பார் எங்கள் சுதந்திரம்!!
  வளர்க பாரதம்! வெல்க பாரதம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  56. வேறு!!! மனம் வேறு, மொழி வேறு, முகம் வேறு, வண்ணம் வேறு!!
  வருவாய் வேறு, நிறம் வேற, தரம் வேறு, குணம் வேறு!!
  குடிசை வேறு, ஆட்சி வேறு, அதிகாரம் வேறு, பணம் வேறு!!!
  பண்பு வேறு, பதவி வேறு, பரம்பரை வேறு!!
  ஆனால், கொடி மட்டும் ஒன்று!!!
  அதில், வண்ணம் நான்கு ஆனால் ‎நாடு_ஒன்று
  இந்தியன் என்று சொல்வதை விட, இந்தியர்கள் என்பதிலே
  பெருமைபடுகிறேன்...
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!

  57. சிப்பாய் கலவரம் மூலம்......
  இந்திய தாய் தன் இதய கருவரையில்
  சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் !
  அந்த.....விடுதலை குழந்தையை பலரின் உதிரம் ஊற்றி
  அவள் வளர்த்தாள்.......
  ஆங்கிலேயன் அதை கருவறுக்க விடாமல்
  அவள் சிலிர்த்தாள்....!
  இப்படி பெற்ற சுதந்திரத்தை போற்றுவோம்!
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!

  58. எனக்கென பிறக்கும் இம்மழலையை உயிரென காப்பேன்.....
  உயரிய கலவியும்.....ஊட்டமான இயற்கை செல்வமும்,
  பேணி வளர்க்க நல்மக்களும்...உலகெல்லாம் மெச்சி
  பேசி மகிழும் நற்புகழும் இவனுக்களிப்பேன் என சுதந்திரத்தாய்
  எண்ணியே கருவில் சுமந்தாள் !
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!

  59. முப்புறமும் சூழ்ந்த அலைகள், மகுடமாய் தலையில் மலைகள்
  நாற்திசை காக்கும் அன்னையவள், ஞாலத்தில் அவளுக்கினை யாருளர்?
  அந்நிய அச்சுறுத்தல் ஆயிரமுண்டு, அனைத்தையும் அழிக்கும் உரமுண்டு
  என் அன்னைதேசத்தில் வீரமுண்டு, எதிரிக்கும் இரங்கும் ஈரமுண்டு...
  வடமிருந்து தென்னோக்கி எனைத் தாங்கும் என் தாயின் கரம்!
  அவள் சேயாய் நான் பிறந்தது ஆண்டவன் எனக்களித்த வரம்!
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!

  60. அவனியில் ஆகப்பெரிய குடியரசு, அவளுக்குமுன் தலை தாழ்த்தும் முடியரசு!
  அனைத்திலும் வளர்ந்து வரும் வல்லரசு, அகிலமே விழிவியக்கும் நல்லரசு!
  அறுபதாம் குடியரசுக் கொண்டாட்டம், ஆச்சர்யத்தில் அடுத்த நாட்டின் திண்டாட்டம்!
  நாமெல்லாம் இத்தோட்டத்தின் வண்டாட்டம், நல்லதொரு நாட்டின் பூச்செண்டாட்டம்!
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!

  61. அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் உரித்தாகுக!
  வாழ்க இந்திய குடியரசு!
  வீழ்க ஊழலும் அராஜகமும்!
  உயிரினை ஈந்தும் பாரத நாட்டின் உயர்வினைக் காப்போம்!
  இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்!!

  குடியரசு தின தகவல்கள் (Republic Day Messages)

  Pexels

  62. நாடு இன்றுள்ள மோசமான ஊழல் மலிந்த, கறை படிந்த சூழலை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்!
  நாட்டின் ஒருமைப்பாடு பல மாநிலங்களில் கேள்விக்குறியாகி இருக்கும் நிலையை மாற்ற நாம் இன்று சபதம் ஏற்போம்!
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  63. நாட்டின் அனைத்து மக்களும் அடிப்படைத் தேவைகளைப் பெற்றிட, அனைவருக்கும் சமச்சீரான வாழ்க்கை கிட்டிட,
  நாம் இன்று உறுதி கூறுவோம்! இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  64. சுயநலம் மிகுந்த அரசியல்வாதிகளின் கெடுமதியால் நாடு சீரழியாமல் இருக்க நாம் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒருவகையில் பணி புரிவோம்!
  நாடு என்பது நாமே என்று உணர்வோம்! உணர்த்துவோம்! நமது நாட்டை நாமே காப்போம்!
  நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும், குடியரசு தின வாழ்த்துக்கள்.

  65. நாடு சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன
  இன்னமும் கூட சுத்தமான குடிநீர் உட்பட அத்யாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகள் அதிக பட்ச மக்களுக்கு கிட்டாமல் தானிருக்கிறது.
  எங்கு நோக்கினும் ஊழல், வறுமை வேலையில்லாத் திண்டாட்டம் நிறைந்திருக்கிறது.
  ஏனிந்த நிலை...? இது மாறுமா?

  66. நமக்கிருக்கும் அளவுக்கு மிஞ்சிய சகிப்புத் தன்மையே இதற்கெல்லாம் காரணம். ஆயிரக்கணக்கான கோடி ஊழல் என்று செய்தி கேட்கிறோம்
  பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கூட கோடி கோடியாய கொள்ளையடிப்பதைப் பார்க்கிறோம்;கோடி கோடியாய் நமது வரிப்பணம் ஊழல்
  பேர்வழிகளின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது;
  ஆனால் நாமோ யார் வந்தாலும் இப்படித்தான் என்று நம்மை நாமே சமாதானம் செய்து கொண்டு ஊழலை சகித்துக் கொள்கிறோம்;
  ஊழல் இல்லாத இடம்தான் ஏது என்று ஊழலுக்கு வக்காலத்தும் வாங்குகிறோம்!
  மாறுமா இந்நிலை இந்த குடியரசு தினம் முதல்

  67. அரசியல் வாதி தன் குடும்பத்தினர் அனைவரையுமே பதவியில் அமர வைத்து நாட்டைச் சுரண்டுவதைப் பார்க்கிறோம்;
  விலைவாசிகள் விஷம் போல் ஏறுகின்றன; வறுமை தலை விரித்தாடுகிறது; அனைத்திலும் போலிகள்..கலப்படம்.
  ஆனால், இவற்றையெல்லாம் மாற்ற முடியாது என்று நாம் சகித்துக் கொள்ள பழகிக் கொள்கிறோம்!
  இப்படிப்பட்ட பொறுமையும் சகிப்புத் தன்மையுமே இந்த நிலைக்கு பிரதான காரணமாகும்!
  இனியாவது மாறுவோமா

  68. அநீதிகளைக் கண்டு, முறைகேடுகளைக் கண்டு கோபம் கொள்ள வேண்டும்;
  இது நமது நாடு; இதன் ஒவ்வொரு வளர்ச்சியும் தாழ்ச்சியும் நம் ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கும்..
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  69. நம் நாடு உலகில் உயர்ந்தது என உறுதியாய் நம்புவோம்;
  நாட்டைச் சுரண்டும் தீய சக்திகளை அடையாளம் கண்டு அப்புறப்படுத்துவோம்;
  நாட்டின் வளர்ச்சிக்கு உழைப்போரை போற்றுவோம்.
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  மேலும் படிக்க - நீங்கள் அதிகம் நேசிப்பவருக்கு சுவாரசியமான காதல் கவிதைகள்!

  பட ஆதாரம்  - Shutterstock 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!