அனைத்து விதமான சருமத்திற்கும் க்ரீன் டீ ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

அனைத்து விதமான சருமத்திற்கும் க்ரீன் டீ ஃபேஸ் பேக் பயன்படுத்துங்கள்!

க்ரீன் டீயில் உள்ள அதிகப்படியான ஃப்ளேவோனாய்டுகள், வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் எண்ணற்ற நன்மைகளைத் தருகின்றன. 

மேலும் க்ரீன் டீயில் டானிக் ஆசிட் நிறைந்திருப்பதால், சரும சுருக்கங்கள், கரும்புள்ளிகள், பொலிவிழந்த சருமம் போன்றவற்றை தடுப்பதில் சிறந்தது. சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய க்ரீன் டீயை பயன்படுத்தி எப்படி ஃபேஸ் பேக் போடுவது என்பது குறித்து இங்கு காண்போம். 

நார்மல் சருமத்திற்கு 

 • நார்மல் சருமத்திற்கு மஞ்சள் தூளுடன், 1 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து நன்கு கலந்து பேஸ்ட் செய்து பேக் போட வேண்டும். சுமார் 15 - 20 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதனை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் அழுக்கு, தூசுகளை நீங்கி சருமம் புத்துணர்ச்சியாகும். மஞ்சளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் முகப்பரு போன்ற பிரச்சினைகளை சரிசெய்யும். 
twitter

 • 1 டீஸ்பூன் கிரீன் டீ, 1 டீஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடரை எடுத்து அதனுடன் ½ தேக்கரண்டி தேன் கலந்து நன்கு கலந்து முகம் மற்றும் கழுத்தின் அப்ளை செய்து உலர்ந்தவுடன் கழுவ வேண்டும். ஆரஞ்சு தூள் கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து, முகப்பரு வடுக்களை மறைந்து போக செய்கிறது. மேலும் தேன் உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. 

மேலும் படிக்க - சருமத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்கும் வைட்டமின் ஈ எண்ணெய்!

எண்ணெய் பசை சருமத்திற்கு 

 • எண்ணெய் பசை சருமத்தால் அவதிப்படுபவர்கள் 1 ஸ்பூன் முல்தானி மெட்டியுடன், 2 ஸ்பூன்  கிரீன் டீ கலந்து முகம் மற்றும் கழுத்தில் பேக் போட வேண்டும். இதனை வாரம் ஒரு முறிய செய்து வந்தால் சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெய் பசை கட்டுப்படுத்தப்படும். முல்தானி மெட்டியில் அதிகளவிலான தாதுக்கள் நிறைந்துள்ளதால் இது உங்கள் சருமத்திலிருந்து அதிகப்படியான எண்ணெய்களை உறிஞ்சி உடனடி பிரகாசத்தை தருகிறது.  
 • சருமத்தில் அதிக அளவில் எண்ணெய் பசை இருந்தால் அதனை நீக்க 1 டீஸ்பூன் அரிசி மாவுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும். மேலும் மூக்கின் ஓரங்களில் வெண் புள்ளிகள் இருந்தால் இந்த கலவையை கொண்டு ஸ்கரப் செய்தால் எளிதில் நீங்கிவிடும். 

வறட்சியான சருமத்திற்கு 

 • உங்கள் முகத்தில் வறட்சி அதிகம் இருந்தால் 1 டீஸ்பூன் மில்க் க்ரீம், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அதனுடன் 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ (green tea) சேர்த்து கலந்து முகத்தில் தடவி பேக் போட வேண்டும். பின் மென்மையாக மசாஜ் செய்து 15 நிமிடம் ஊற வைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் வறட்சியினால் ஆங்காங்கு வெள்ளைத்திட்டுகள் காணப்படுவது தடுக்கப்படும்.
twitter

 • 2 டீஸ்பூன் க்ரீன் டீயுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து முகத்தில் தடவ வேண்டும். 15 நிமிடங்களுக்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும். க்ரீன் டீயில் சரும செல்களைப் பாதுகாக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளதால் சருமம் பொலிவாகும். தேனில் இருக்கும் ப்ளீச்சிங் தன்மை சருமத்தை பிரகாசமடைய செய்கிறது. 

மேலும் படிக்க - அடர்த்தியான கூந்தல் மற்றும் தெளிவான சருமத்திற்கு - பீட்ரூட் !

சென்சிடிவ் சருமத்திற்கு 

 • சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் 1 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறுடன், 1-2 டீஸ்பூன் க்ரீன் டீ சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவி வந்தால், முகத்தில் உள்ள பருக்கள், கருமை, கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி முகம் பொலிவோடு மின்னும்.
 • 1 டீஸ்பூன் மசித்த வாழைப்பழ கூழுடன், 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1-2 டீஸ்பூன் க்ரீன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வந்தால் முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், வைட்டமின் பி  ஆக்ஸிஜனேற்ற செயல்பாட்டை அதிகரித்து தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
twitter

பட்டுபோன்ற சருமத்திற்கு க்ரீன் டீயை பயன்படுத்தும் விதம்! 

 • பப்பாளியை அரைத்து, அதில் சிறிது க்ரீன் டீ (green tea) சேர்த்து கலந்து கொள் வேண்டும். பின்னர் முகத்தை நீரில் கழுவி பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவினால் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும். 
 • சருமத்தில் முதுமை தோற்றத்தை தரும் சுருக்கத்தை போக்குவதற்கு 3 ஸ்ட்ராபெர்ரியை அரைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் க்ரீன் டீ மற்றும் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் சுருக்கமின்றி இளமையுடன் காணப்படும்.
twitter

 • 1 டீஸ்பூன் தேனில், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, அத்துடன் 1 டீஸ்பூன் க்ரீன் டீ பவுடரை சேர்த்து கலந்து லேசாக சூடேற்றி முகத்திற்கு தடவி மசாஜ் செய்து 20-30 நிமிடம் ஊற வைத்து கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.
 • கற்றாழை ஜெல்லுடன் க்ரீன் டீ (green tea) , எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து பின் 15 நிமிடம் கழித்துக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேற்றப்பட்டு சரும பொலிவு அதிகரிக்கும். 

மேலும் படிக்க - உங்கள் கழுத்தின் வடிவங்களில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்கள்

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!