ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டியை எரித்துக் கொன்ற 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

ஹைதராபாத்தில் பிரியங்கா ரெட்டியை எரித்துக் கொன்ற 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை!

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நெடுஞ்சாலையில் கடந்த 27ம் தேதி பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. 26 வயதான பிரியங்கா ரெட்டி ஹைதராபாத்தில் அருகே கொல்லூரில் உள்ள மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக பணியாற்றி வந்தார். 

தினந்தோறும் இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வந்த பிரியங்கா, சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து பொதுப்போக்குவரத்து  மூலம் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்.  

கடந்த 27ம் தேதி அவசர பணிக்காக சென்ற அவர்  மாலை 6 மணிக்கு சின்ஷபள்ளியில் உள்ள சுங்கச்சாவடியில் வண்டியை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். இதை மதுபோதையிலிருந்த முகமது அஷாவின் கும்பல் நோட்டமிட்டிருக்கிறது. 

twitter

அதன்படி கொடூரமாக திட்டம் தீட்டிய அவர்கள் பிரியங்காவின் (priyanka reddy) இருசக்கர வாகனத்தைப் பஞ்சராக்கியுள்ளனர். பின்னர் பிரியங்காவின் வருகைக்குக் காத்திருந்த அவர்கள் அவர் இரவு 9 மணியளவில் அங்கு வந்ததுடன் உதவி செய்வது போல நடித்து அந்த பெண்ணை தூக்கி சென்றுள்ளனர். 

பின்னர் சின்னகேசவலு, நவீன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துள்ளனர். பின்னர் கழுத்தை நெரித்து கொலை செய்து பிரியங்காவின் உடலை லாரியில்  எடுத்துக்கொண்டு கட்ட பள்ளி என்ற இடத்திற்குச் சென்று எரித்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

இதனிடையே நள்ளிரவாகியும் பிரியங்கா வீட்டிற்கு வராததால், மகளை காணவில்லை என்று பெற்றோர்கள் புகார் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் பிரியங்காவை தேடி வந்துள்ளனர். அப்போது பெண் ஒருவரின் உடல் எரிந்து கிடப்பதாக அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அளித்த தகவலின்படி போலீசார் உடலைக் கண்டறிந்தனர்.

twitter

ஹைதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள பாலத்துக்கு அருகே அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என பல தரப்பினரும் பிரியங்காவிற்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். 

இதனால் காவல்துறையினரும் குற்றவாளிகளை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுங்கச்சாவடி அருகே பதிவாகியுள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தது. 

அதன்படி இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களிடம் கொலை குறித்த வாக்குமூலமும் பெறப்பட்டது. சனிக்கிழமை இந்த வழக்கு குறித்து நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் பல அதிர்ச்சி உண்மைகள் தெரியவந்தது. ப்ரியங்காவின் பைக்கை பஞ்சர் ஆக்கி  அவருக்கு உதவி செய்வது போல நடித்து, பின்னர் விஸ்கி கலந்த ஒரு குளிர்பானத்தை அவரை கட்டாயப்படுத்தி கொடுத்து, பிரியங்காவை (priyanka reddy) தலையில் அடித்து மயக்கமுற செய்துள்ளனர். 

twitter

பின்னர் லாரி கேபினில் வைத்து அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பிரியங்கா அதிர்ச்சியில் உயிரிழந்துள்ளார். ஆனால் பிரியங்கா உயிரிழந்த பிறகும் அந்த நால்வரும்  ஒவ்வொருவராக அவரை மீண்டும் கற்பழித்துள்ளனர். 

அடையாளம் தெரியாமல் இருக்க அவரது உடலை எரித்தாகவும் குற்றவாளிகள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் நாட்டில் உள்ள அனைத்து பெற்றோர்களையும் நடுங்க செய்தது. கொலையாளிகள் மீது உட்சபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். 

இந்நிலையில் இன்று அதிகாலை பிரியங்கா ரெட்டியை (priyanka reddy) எவ்வாறு கொலை செய்தனர் என்று காவல்துறைக்கு செய்து காட்டுவதற்காக நான்கு குற்றவாளிகளையும்  சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். 

twitter

அப்போது திடீரென குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்கி அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த காவலர்கள் நான்கு பேரையும் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் குற்றவாளிகள் காவல்துறையினரை தாக்கவே வேறு வழியின்றி துப்பாக்கியால் அவர்களை காவலர்கள் சுட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட அதே இடத்தில் நான்கு பேரும் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு பிரியங்கா ரெட்டிக்கும் அவரது குடும்பத்திற்கும் உடனடி நீதி கிடைத்து விட்டதாக, உயர் அதிகாரிகள் முதல் சாமானிய மக்கள் வரை பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!