அமெரிக்காவில் வளைகாப்பு.. புகைப்படங்களை வெளியிட்ட தமிழ் நடிகை.. !

அமெரிக்காவில் வளைகாப்பு.. புகைப்படங்களை வெளியிட்ட தமிழ் நடிகை.. !

தமிழில் நடித்த மலையாள நடிகையான திவ்யா உன்னி தற்போது அமெரிக்காவில் வளைக்காப்பை நடத்தி இருக்கிறார். இந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார் திவ்யா உன்னி (divya unni).

கேரளா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் நடிகை திவ்யா உன்னி. இவருக்கு பரதநாட்டியத்தில் தீராத பற்று இருந்ததால் முறைப்படி பரதம் மோகினி ஆட்டம் குச்சிப்புடி போன்ற நடனங்களை கற்றுத் தேர்ந்து பின்னர் சினிமாவிற்கு வந்தார்.

 

youtube

தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை போன்ற பல திரைப்படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி . கடந்த 2002ம் ஆண்டு மருத்துவர் சுதிர் சேகர் என்பவரை மணந்தார்.                                                            

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அர்ஜுன் , மீனாட்சி ஆகிய குழந்தைகளுக்கு பெற்றோர் ஆன இந்த ஜோடி 14 வருட தாம்பத்யம் போதுமென முடிவெடுத்து விவாகரத்து பெற்றுக் கொண்டனர். திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் செட்டில் ஆன திவ்யா உன்னி அங்கேயே பரதப்பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.                                 

Youtube
Youtube

இதன் காரணமாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இவர்களுக்குள் விவாகரத்து நடந்தது. பரதத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க விரும்பாமல் குழந்தைகளுடன் கேரளா வந்த திவ்யா உன்னி சில காலம் கழித்து மீண்டும் ஹூஸ்டனில் தன்னுடைய ஸ்ரீ பாதம் நடனப்பள்ளியை தொடர்ந்து நடத்தினார்.                                                       

இதனை அடுத்து சில ஆண்டுகளில் டெக்சாஸில் வசிக்கும் என்ஜினீயர் அருண் குமாரை இரண்டாவது திருமணம் செய்தார். இவர்கள் இருவருக்கும் ஹூஸ்டனில் இருக்கும் குருவாயூரப்பன் கோயிலில் வைத்து இரண்டாவது திருமணம் நடந்தது.

கேரளாவை சேர்ந்த அருண் குமாரை மணந்து ஒரு வருடம் ஆகிய நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் திவ்யா உன்னிக்கு முறைப்படி வளைகாப்பு நடத்தி இருந்தார்கள். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து தன்னுடைய சந்தோஷத்தை சொல்லி இருக்கிறார் திவ்யா உன்னி.                                 

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!