வாழ்க்கையில் எது நடந்தாலும் கேரக்டரை குறை சொல்வார்கள்.. திருமண முறிவு பற்றி மனம் திறந்த DD

வாழ்க்கையில் எது நடந்தாலும் கேரக்டரை குறை சொல்வார்கள்.. திருமண முறிவு பற்றி மனம் திறந்த DD

தொகுப்பாளர் மற்றும் நடிகையாக இருக்கும் திவ்யதர்ஷினிக்கு பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் என்ன செய்தாலும் பாராட்டுவதும் அவரை புகழ்வதும் உண்டு. அவரது சமூக வலைதள பதிவுகளை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறது.

இப்படி அனைவருக்கும் பிடித்த நடிகையான டிடி (DD) என்கிற திவ்யதர்ஷினி தன்னுடைய இளமை மற்றும் புத்துணர்ச்சி ரகசியங்களை ஒரு விருது மேடையில் வெளியிட்டிருக்கிறார்.

199ம் ஆண்டு தொலைக்காட்சியில் குழந்தைத் தொகுப்பாளராக அறிமுகம் ஆனவர்தான் DD. இவரது சகோதரி ப்ரியதர்ஷினியும் ஒரு தொகுப்பாளர்தான். பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களாக இவர் நடித்திருக்கிறார். இவர்கள் இருவரில் பிரியதர்ஷினி ஒரு அற்புதமான பரதநாட்டிய கலைஞர்.

Youtube

இன்னமும் பிரியதர்ஷினி பார்ப்பதற்கு இளமையாகவே இருக்கிறார் எனும்போது அவரை விட சில வருடங்கள் குறைவாக பிறந்திருக்கும் டிடி மட்டும் சளைத்தவரா என்ன. தன்னுடைய 34 வயதிலும் எப்படி இப்படி பதின்ம பருவ உணர்வுகளை வெளிக்காட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் என்பதை திவ்யதர்ஷினியே கூறி இருக்கிறார்.

தொடர்ந்து தொகுப்பாளினி ஆகவே இருந்தாலும் திவ்யதர்ஷினி அவ்வப்போது திரைப்படங்களிலும் தலைகாட்டி இருக்கிறார். நள தமயந்தி திரைப்படம் இவருக்கு நல்ல திரைப்படமாக அமைந்தது. அதன் பின்னர் பல படங்களில் நடித்திருக்கிறார். நடித்துக் கொண்டிருக்கிறார் DD.

தொகுப்பாளினி டிடி எல்லோரின் எதிர்பார்ப்புக்களுக்கிணங்க சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்தார். இத்தனைக்கும் பால்ய கால நண்பனையே கை பிடித்தார் டிடி. எப்போது திருமணம் என்று அனைவரும் கேட்க அந்த நச்சரிப்பு தாளாமல் திருமணம் செய்தாரோ என்னவோ திருமணமான ஒரே வருடத்திற்குள் இருவரும் பிரிந்தனர்.

Youtube

அதை பற்றி பல்வேறு விதமான வதந்திகள் வந்தபடி இருக்கிறது. சமீபத்தில் அவருடைய முன்னாள் கணவர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் இதற்காகதான் நான் விவாகரத்து செய்தேன் என பேட்டி கொடுத்திருந்தார். இதைப்பற்றிய கவலைகள் எல்லாம் இல்லாமல் டிடி தன்னுடைய தொகுப்பாளினி வேலையில் கவனம் செலுத்தி வந்தார்.

தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் சிறந்த தொகுப்பாளினிக்கான விருது டிடிக்கு கிடைத்தது. அதில் தன்னுடைய இளமைக்கும் சுறுசுறுப்பிற்கு புத்துணர்வான மனநிலைக்கும் காரணம் என்ன என்கிற ரகசியத்தை உடைத்து பேசியிருக்கிறார்.

பள்ளி நாட்களிலேயே தொகுப்பாளினியாக வந்து விட்டதால் தன்னுடைய பள்ளி நாட்களை அவர் இழந்து விட்டதாக கூறியிருக்கிறார். அதனால் என்னுடைய பதின்ம பருவ சந்தோசங்களை நான் தவற விட்டிருக்கிறேன் எனும் டிடி இப்போதும் நிறைய பேர் எப்படி இன்னும் இளமையாகவே இருக்கிறீர்கள் என்று கேட்கும்போது இவர்கள் நிஜமாகவே கேட்கிறார்களா அல்லது கிண்டல் செய்கிறார்களா என்று குழம்பி இருக்கிறாராம்.

Youtube

அதன் பின்னர் ஒரு நாள் அமைதியாக அனைத்தையும் யோசித்துப் பார்த்தபோது தன்னுடைய பள்ளி நாட்களில் மிக முதிர்ச்சியான நடந்து கொள்வாராம் டிடி. இப்போது தனக்கு 34 வயதாகிறது எனும் டிடி குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை தான் செய்து முடித்து விட்டதாக கூறுகிறார்.

கடவுள் இப்போது தனக்கு தந்திருக்கும் எல்லாமே எக்ஸ்ட்ரா தான் என்று நெகிழும் டிடி அதனை முழுமையாக அனுபவித்து வருவதாக கூறி இருக்கிறார். இப்போதும் தன்னைக் குழந்தையாகவே நினைத்துக் கொள்வதாலேயே தான் இன்னும் இளமையாக இருப்பதாக கூறி இருக்கிறார் டிடி.

கூடவே வெளியே வந்து சாதிக்கும் பெண்களுக்காக ஒரு ஊக்கமளிக்கும் செய்தியையும் கூறி இருக்கிறார். நிறைய இளம்பெண்கள் தற்போது மீடியா துறைக்கு வருகை தருகிறார்கள். பலர் சமூக வலைத்தளங்களையும் ஒரு மீடியமாக எடுத்துக் கொண்டு அதிலும் அதிலும் இருக்கிறார்கள்.

 

Youtube

அதில் எவ்வளவோ பேர் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். வெற்றிக்கு ஒரு மந்திரம்தான் இருக்கிறது. யார் என்ன சொன்னாலும் நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி நம்முடைய கேரக்டரைத்தான் முதலில் விமர்சனம் செய்வார்கள்.

திருமண முறிவு, உறவுகள் முறிவு என எந்த ஒரு விஷயம் வேண்டுமானாலும் உங்கள் மனதை காயப்படுத்தலாம். குடையலாம். ஆனால் காலையில் எழுந்து நேரத்துக்கு மேக்கப் போட்டு சரியாக உங்கள் துறையில் வேலை செய்தால் உங்கள் வெற்றியைப் பறிக்க யாராலும் முடியாது என்று தன்னம்பிக்கையுடன் பேசி அசத்தி இருக்கிறார் டிடி.

இந்த பேச்சின் மூலம் தன்னை பற்றி பேட்டி அளித்த தன்னுடைய முன்னாள் கணவருக்கும் நல்லதொரு பதிலடியும் கொடுத்திருக்கிறார் டிடி. அதே போல தன்னுடைய மனதில் என்ன வேதனை இருந்தாலும் தன்னுடைய தொழிலை எந்த சொந்த காயங்களும் சிதைக்காமல் காப்பாற்றவும் செய்திருக்கிறார் டிடி. ஒவ்வொரு பெண்ணுக்கும் இப்படி ஒரு தன்னம்பிக்கை தேவையானதுதான்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!