சிம்பு ஹீரோவாக நடித்த அன்பானவன், அடங்காதவன், அசராதவன் என்ற படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டு ரூ.1.51 கோடி அடவான்ஸ் தரப்பட்டது.
படம் வெளியாகி பல மாதங்களை கடந்த நிலையில் தற்போது வரை மீதி சம்பளத்தை தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சம்பள பாக்கியை பெற்றுத்தரும்படி நடிகர் சங்கத்தில் சிம்பு புகார் மனு அளித்த்துள்ளார்.
இதற்கிடையில் இப்படத்தல் பெரிய நஷ்டம் ஏற்பட்டது, அந்த பண இழப்பை சிம்புவிடமிருந்து (simbu) பெற்றுத் தரும்படி தயாரிப்பாளர் சங்கத்தில் மைக்கேல் ராயப்பன் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாகவும், தனது புகழை கெடுக்கும்வகையில் ஊடகங்களுக்கு அவதூறு பேட்டி கொடுத்ததாகவும், மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக ரூ.1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் சிம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் நடிகர் சங்க பொதுச் செயலாளராக இருந்த விஷாலையும், தயாரிப்பாளர் சங்கத்தையும் சேர்த்திருந்தார் சிம்பு. இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தென்னிந்திய நடிகர் சங்கம், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கங்களுக்கு தற்போது தனி அதிகாரிகளை அரசு நியமித்துள்ளதால், தற்போது நடிகர் சங்கத்தின் நிர்வாகியாக விஷால் இல்லை.
இதனால் விஷால் இந்த வழக்கில் பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என்பதால், இரு சங்கங்களின் தனி அதிகாரிகளை இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி தனது உத்தரவில், இந்த வழக்கில் சங்கத்தின் சிறப்பு அதிகாரிகளை எதிர்மனுதாரராக சேர்த்து புதிய மனு தாக்கல் செய்யும்படி சிம்புவுக்கு (simbu) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை வரும் ஜனவரி 3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இதனிடையே சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் மாநாடு படத்திற்காக சிம்பு தீவிர பாக்ஸிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
#STR Boxing Training for Maanaadu movie#STRReturns #STRisBack #VoiceofSTR pic.twitter.com/9vxr5GF5wX
— Satthi Eshwar (@SatthiEshwar) December 10, 2019
சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி படங்களும், அதைத்தொடர்ந்து வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் திரைக்கு வந்தன. இப்படங்களை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர்.
ஆனால் சிம்பு ஷூட்டிங் வருவது குறித்து எந்த தகவலும் படக்குழுவிடம் தெரிவிக்காமல் அவர்களை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஷூட்டிங் தள்ளிக்கொண்டே போக ஒரு கட்டத்தில் சுரேஷ் காமாட்சி படத்திலிருந்து சிம்பு நீக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து சபரிமலைக்கு விரதமிருந்து மாலை போட்ட சிம்பு இருமுடி கட்டி சாமி தரிசனம் செய்ய கிளம்பினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது.
கடந்த 27 வருடங்களுக்கு முன்னால் சினிமாத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் பொழுது சபரிமலைக்கு மாலை போட்டப் பின் தான் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் மலையில் இருந்து திரும்பிய சிம்புவிடம் தயாரிப்பாளர்களை வைத்து பேச்சு வார்த்தை நடைபெற்றது.
இதில் சுமூகம் மாநாடு படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநாடு படத்திற்காக சிம்பு (simbu) பாக்சிங் பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோ ட்விட்டரில் வைரலாகி வருகிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!