உங்கள் கழுத்தின் வடிவங்களில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்கள்

உங்கள் கழுத்தின் வடிவங்களில் ஒளிந்திருக்கும் உளவியல் ரகசியங்கள்

நமது நடத்தையை வைத்து நமது ஆளுமையை எடை போடுவது ஒரு சாராரின் வழக்கம். அதனைத் தாண்டி ஒரு சிலரின் உடல் உறுப்புகளின் தன்மையை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து கொள்ளும் தந்திரங்கள் பல உள்ளது.

ஒருவரது நற்தன்மைகள் பொய் சுபாவங்கள் முகமூடி முகங்கள் ஆகியவற்றை கிழித்து உள்ளே பார்க்க வேண்டும் என்றால் ஒருவரது கழுத்தின் வடிவங்கள் (neck shape) அவரை யார் என காட்டிக் கொடுத்து விடுமாம்.

 

நேரான கழுத்து

இவ்வகை கழுத்து கொண்டவர்தான் பெரும்பான்மை மக்களாக இருக்கின்றனர். இவர்களுக்குள் எப்போதும் தன்னைப் பற்றிய பெருமிதங்கள் அதிகம் இருக்கும். நேரம் தவறாமை இவர்கள் கொள்கையாக இருக்கும். தங்களுடைய கொள்கைகள் மீது எப்போதும் வைராக்கியத்துடன் இருப்பார்கள்.                                                        

Pinterest

சிறிய கழுத்து

குறுங்கழுத்துக்காரனை நம்பாதே என்றொரு பழமொழி நமது ஊர்பக்கங்களில் சொல்வதுண்டு. அப்படி எதுவும் இல்லை. சிறிய கழுத்துக்கு சொந்தக்காரர்கள் தனித்துவம் ஆனவர்கள். கடினமாக உழைப்பார்கள். உள்முகமாக சிந்திப்பவர்கள். அதே சமயம் சுயநலம் மற்றும் மற்றவர் மீது நம்பிக்கையின்மை இருக்கும். அவ்வளவுதான். அறிவாளிகள் இவ்வகை கழுத்துக்களை பெற்றிருப்பார்கள்.                                                           

Pinterest

நீண்ட கழுத்து

வழக்கமான நீளத்தை தாண்டி அதிகமான நீளம் கொண்ட கழுத்துக்கு சொந்தக்காரர்கள் நிறைய பேசுவார்கள். நடுக்கம் மனசோர்வு ஆகியவை இருக்கும். தன்னைப் பற்றிய பெருமையிலேயே காலம் கழிப்பதால் உதவிகள் இவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.

Pinterest

தடிமனான கழுத்து

இந்த வகை கழுத்துக்கு சொந்தக்காரர்கள் கொஞ்சம் ஆபத்தானவர்கள். ஊழல் செய்வதில் வல்லவர்கள். மற்றவர் மீது சந்தேகம் கொள்பவர்கள். மது போன்ற போதை பொருள்களுக்கு பழக்கம் ஆகியிருப்பவர்கள். கோபம் ஆக்ரோஷம் இருப்பதால் இவர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும்.                                                                                           

Pinterest

வறட்சியான கழுத்து

இவ்வகை கழுத்து கொண்டவர்களுக்கு கழுத்து நரம்புகள் தெளிவாக தெரியும். மந்தமானவர்களான இவர்களுக்கு நோக்கம் என்ற எதுவும் இருக்காது. சோம்பலாக காணப்படுவார்கள். அபத்தமான காரணங்களுக்காக கோபம் கொள்வது இவர்கள் குணம்.

Pinterest

ஒட்டகம் போன்ற கழுத்து

இந்த வகை கழுத்துக்கு சொந்தக்காரர் பொறுமையானவராக இருப்பார். பக்குவம் கொண்டவராக இருப்பார், கடினமாக உழைப்பார். ஆனால் இவர்களுக்கு நயவஞ்சக எண்ணம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.

Pinterest

சீரான கழுத்து

இந்த வகையான கழுத்து குடம் போன்ற வடிவத்தில் இருக்கும். இப்படியான கழுத்தை பெற்ற பெண்கள் கலை மீது ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். மென்மையானவர்கள். அன்பானவர்கள். கவர்ச்சியானவர்கள். வளமான வாழ்க்கை இவர்களுக்கானது.

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!