அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்பவர்கள் வளர்க்க சில செல்லப்பிராணிகள்!

அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்பவர்கள் வளர்க்க  சில செல்லப்பிராணிகள்!

நமது அன்பை பகிர்ந்து கொள்ள மனிதர்களுக்கும் அப்பார்பட்டு சில உயிர்கள் நமக்கு அவ்வப்போது தேவைப்படுகின்றது. இந்த வகையில், செடிகளும், மரங்களும் ஒரு முக்கிய பங்கு வகித்தாலும், மனிதர்களோடு விளையாடி, நேரத்தை செலவிட மேலும் சில நண்பர்கள் தேவைப்படத் தான் செய்கிறார்கள். இந்த வகையில், செல்லப்பிராணிகளுக்கு (pet animals) ஒரு முக்கிய பங்கு உள்ளது.

எனினும், இது அடுக்குமாடி (apartment) குடியிருப்பில் வசிப்பவர்களுக்கு ஒரு சொப்பனமாகவே இருந்து வருகின்றது. இதற்கு காரணம், அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன சொல்வார்கள், இந்த செல்லப் பிராணிகளால் ஏதாவது பிரச்சனை வந்து விடுமா என்று பல கேள்விகள் மனதில் எழுவது தான்.

உங்கள் கவலையை விடுங்கள்!உங்களுக்காக, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாமல், உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு பங்கு போட ஒரு செல்லப்பிராணியை தேர்வு செய்ய இங்கே உங்களுக்காக சில குறிப்புகள்:

1. நாய்

நாய் எப்போதும் செல்லப்பிராணி பட்டியலில் முதல் இடத்தை பிடிக்கும். பல வகை நாய்கள் உள்ளன. வீட்டு காவலுக்காக வளர்ப்பது மற்றும் வேட்டைக்காக வளர்ப்பது மட்டும் இல்லாமல், செல்லப்பிராணியாகவும் வளர்க்க பல வகை நாய்கள் உள்ளன. இவை அளவில் சிறியதாகவும், எளிதாக பராமரிக்கக் கூடியதாகவும், அதிக செலவு இல்லாததாகவும் இருக்கும். மேலும் முக்கியமாக, அதிகம் குறைக்காத நாய்களும் உள்ளன. அவ்வகை நாய்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு எந்த தொந்தரவும் தராத வகையில் உங்கள் வீட்டிற்குள்ளேயே இருந்து விடும். மேலும் அன்போடும் உங்களுடன் பழகும்.  

மேலும் படிக்க - உங்கள் செல்ல நாய்க்குட்டியை பிராண்ட் அம்பாசிடராக்கும் பேக் ரகங்கள் !

2. பூனை

Pexels

இது மற்றுமொரு பிரியமான வளர்ப்பு பிராணி. இன்று பல வெளிநாட்டு பூனைகள் இறக்குமதியாகி வருகின்றது. அவற்றை மக்கள் விரும்பி அதிக பணம் ஆனாலும், கொடுத்து வாங்கி வளர்கின்றனர். எனினும், ஒரு சில பூனைகளுக்கு சற்று பராமரிப்பு அதிகம் தேவைப்படக் கூடும். இந்த வீட்டில் வளர்க்கும் பூனைகள் அதிக பிரியத்தோடும், விளையாட்டாகவும் பழகக் கூடியவை.

3. கோழி

வீட்டில் வளர்க்கும் வழக்கமான கோழிகள் மட்டுமல்லாது, இன்று பல வகை பேன்சி கோழிகள் வந்து விட்டன. இவை வெளிநாடுடலில் இருந்தும் இறக்குமதி ஆகின்றன. இந்த நம் நாட்டில் கிடைக்கும் சண்டை சேவல்களும், உங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் பால்கனியில் வளர்க்க ஏற்றதாகவே இருக்கும். மேலும் இந்த வகை சேவல் மற்றும் கோழிகள் மனிதர்களுடன் நட்போடு நல்ல புரிதலோடும் பழகும் சுபாவம் கொண்டவையாக இருக்கும். நட்டு கோழிகளை வளர்ப்பவர்கள், அவை ஒரு நல்ல காவலாளியாகவும் இருப்பதை உணர்ந்து இருப்பார்கள்.

4. லவ் பேர்ட்ஸ் / பின்செஸ்

Pexels

இந்த வகை சிறிய பறவைகளை பெரும்பாலும் பல வீடுகளில் செல்லப்பிராணிகளாக பார்க்க முடியும். இவற்றிற்கு சிறிதளவு இடம் இருந்தால் போதும். மேலும் பராமரிப்பும் மிகக் குறைவானது. இந்த சின்ன பறவைகள் மனிதர்களுடன் நன்கு பழகும் குணமும் கொண்டது. இவற்றுடன் பேசி நேரம் செலவழிப்பது, மிகவும் சுவாரசியமான ஒன்றாக இருக்கும்.

5. மீன் / ஆமை

சிறிய மீன் தொட்டி இருந்தாலும் போதும், உங்களுக்கு பிடித்த மீன் வகையை வாங்கி நீங்கள் வீட்டில் வளர்க்கலாம். இவற்றிற்கு நீங்கள் தினமும் காலை மற்றும் மாலையில் உணவு போடுவதும், ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றுவதும் தவிர, பெரிதாக எந்த பராமரிப்பும் தேவை இல்லை. சில வகை மீன்கள், மனிதர்களுடன் பிரியமாக பழகக் கூடியவையாக இருக்கும். மேலும் சிறிய வகை ஆமைகளையும் நீங்கள் மீன் தொட்டியில் போட்டு வளர்க்கலாம்.

6. முயல்

Pexels

உங்கள் வீட்டில் இருக்கும் பால்கனியில், ஒரு சிறிய கூண்டில் வைத்து எளிதாக வளர்க்கும் விதத்தில் இந்த முயல்கள் இருக்கும். பல வகை முயல்கள் உள்ளன. இவை சத்தம் போடாது, மேலும் மனிதர்களுடன் பிரியமாகவும் பழகும் குணம் கொண்டது. இவற்றிற்கு கொஞ்சம் பராமரிப்பு தேவைப்படலாம். எனினும், மிகவும் அழகான ஒரு செல்லப்பிராணி என்று கூறலாம்.

7. எலி / குனியா பன்றி

இந்த இரண்டும் தற்போது மிகவும் பிரபலமாகிக் கொன்று வருகின்றது. இவை முயல்களைப் போலவே அமைதியாகவும், மனிதர்களுடன் நல்ல நட்போடு பழகக் கூடியவையாகவும் இருக்கும் பிராணிகள். இவை பல நிறங்களில் வரும். மிகவும் அழகாக இருக்கும். இவற்றை நீங்கள் பார்த்து இரசித்துக் கொண்டே இருப்பீர்கள்.

8. கிளி

Pexels

சிறிய நட்டு வகை கிளிகளில் இருந்து பெரிய அளவிலான கிளி வகைகள் உள்ளன. இவை மனிதர்களுடன் மிக நெருக்கமாகவும், தன்னை போன்று ஒருவர் என்ற உணர்வோடும் உங்களுடன் பேசி மகிழ்ச்சியாக பழகும் குணமுடையது. கிளிகளுக்கு அதிக இடமோ, பராமரிப்போ தேவை இல்லை. இவை மிகவும் சுவாரசியமான செல்லப்பிராணி என்றும் கூறலாம்.

மேலும் படிக்க - வீட்டில் வளர்க்க அதிர்ஷ்டம் தரும் சில செடிகள்! 

பட ஆதாரம் - Shutterstock, Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!