வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டிய அந்த இரண்டு ராசிக்காரர்கள் யார்

வாக்குவாதத்தை தவிர்க்க வேண்டிய அந்த இரண்டு ராசிக்காரர்கள் யார்

இன்று வெள்ளிக்கிழமை. பிரதமை திதி. பூராட நட்சத்திரம். மார்கழி மாதம் பதினோராம் தேதி. இன்றைய ராசிபலனை சரிபாருங்கள். 

மேஷம் 

மகிழ்வான மனநிலை உங்கள் நாளை அலங்கரிக்கும். உங்கள் குடும்பம் இன்றைக்கு மிக நிம்மதியாக இருக்கும். அதே சமயம் உங்கள் அதிகப்படியான ஆளுமை உணர்வால் அவர்கள் சந்தோஷத்தை கேள்விக்குறியாக்காமல் இருங்கள்.  பயன்பெறும் நாள். 

ரிஷபம் 

அதிகமான வாக்குவாதங்கள் உங்கள் வாழ்வை காவு வாங்கலாம். எளிதாக ஆரம்பித்தாலும் இறுதியில் கசப்புகளில் முடியும் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.பணியிடத்தில் முடிவெடுக்க முடியாமல் தவிக்கலாம். 

மிதுனம் 

இன்று கொஞ்சம் பாதிப்புகள் ஏற்படுத்தும் நாள். புதிதாக எதனையும் தொடங்க வேண்டாம். உத்யோகத்தில் கவனமாக இருக்க வேண்டும். பயணங்களை தவிர்க்க வேண்டும். எழுத்தாளர்கள் மாணவர்கள் பயன்பெறும் நாள். 

கடகம் 

இன்று மிக மிக சந்தோஷமான நாளாக இருக்கலாம் என நட்சத்திரங்களின் சேர்க்கை கூறுகிறது. முழுமையான திருப்தி மற்றும் நிம்மதி உங்களை வந்து சேரும். பரிசுகள் பாராட்டுக்கள் கிடைக்கலாம். பயன்பெறும் நாள்.

சிம்மம் 

இன்று லாபகரமான நாளாக இருக்கும். புதிய வியாபாரங்களை துணிந்து ஏற்கலாம். ஆனாலும் சிக்கனமாக இருப்பவர்களே கோடீஸ்வரர்கள் ஆவார்கள் என்பதை மறந்து விட வேண்டாம். 

கன்னி 

தவறான எண்ணங்கள் முளைக்கும் முன்பே பிய்த்து எறிந்து விடுங்கள். மற்றபடி நல்ல யோசனைகளை தடங்கல்கள் இல்லை. நோய்களில் இருந்து காப்பாற்றி கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை பின்பற்றுங்கள். உத்தமமான நாள்

2020ல் கோடீஸ்வர யோகம் கிடைக்கப்போகும் 6 ராசிகள் இவைதான் ! உங்கள் ராசி இருக்கிறதா ! 

துலாம் 

ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரார்த்தனைகள் பலிக்க கூடிய காலகட்டம் இதுதான். எது சரி எது தவறு என்கிற வாக்குவாதம் யாரிடமும் செய்ய வேண்டாம். குடும்பத்தினர் உடன் கோயில் செல்வதால் நல்ல அன்பும் இணக்கமும் ஏற்படும்.  பயன்பெறும் நாள். 

விருச்சிகம் 

கடினமான உழைப்பிற்கான லாபத்தை ஈட்டும் நேரம் இதுதான். புகழ், செல்வாக்கு எல்லாம் வந்து சேரும். வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் ஏற்படும். ஷாப்பிங் சென்று பொழுதை களியுங்கள். உத்தமமான நாள்

தனுசு 

இன்று எதிர்மறையான நாள் என்பதால் எதனையும் பார்த்து செய்யுங்கள். உடல் நலம் பாதிப்பு சிறு நோய்கள் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உணவில் கவனம் இருக்கட்டும்.  பயன்பெறும் நாள். 

மகரம் 

கண்களையும் காதுகளையும் கவனமாக பயன்படுத்துங்கள். அலுவலக சூழல் ஏற்றதாக அமையும். குடும்பம் உங்களுக்கு அவசியமான நிம்மதியை தரும். உத்தமமான நாள் 

கும்பம் 

கொஞ்சம் மத்திமமான நாள். கடுமையான முயற்சிகள் மட்டுமே ஓரளவிற்கு பலன் தரும். மற்றவர்களுடன் பொது இடங்களில் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பாதைகள் தடைகளுடன் புலப்படுகிறது.  பயன்பெறும் நாள். 

மீனம் 

நட்சத்திரங்கள் உங்களுக்கு பாதகம் செய்யவில்லை. ஆகவே உங்கள் நாள் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் தொடங்கும். தொழில் வியாபாரத்தில் நீண்ட காலமாக யோசித்து வந்தவைகளை செயல்படுத்தலாம்.  உத்தமமான நாள்

predicted by astro asha shah 

2020 காதல் ராசி பலன்கள் - யார் யாருக்கு காதல் செட் ஆகும்.. யார் யாருக்கு சிக்கல் ஆகும்...  

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!