இன்று செவ்வாய் கிழமை திரியோதசி திதி அனுஷம் நட்சத்திரம். மார்கழி மாதம் 8ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதிர்பார்ப்புகள் தாமதமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிற்பகலுக்கு மேல் உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும், பாதிப்பு எதுவும் இருக்காது. குடும்ப அந்தரங்க விஷயங்களை, வெளி நபர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். முன் கோபத்தைத் தவிர்க்க வேண்டிய நாள்.
ரிஷபம்
நன்மை கிட்டும் நாள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர் பார்த்த உதவி கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கல்யாணத்தில் முயற்சிகள் பலிதமாகும். தாயின் தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சி அடைவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். சக ஊழியர்கள் இணக்கமாக நடந்துகொள்வார்கள்.
மிதுனம்
புதிய முயற்சிகளை காலையிலேயே தொடங்குவது நல்லது. பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சற்று இழுபறிக்குப் பிறகு அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரிக்கும் என்றாலும், சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். அமோகமான நாள்.
மேலும் படிக்க – தீராத அமானுஷ்ய சிக்கல்களை எல்லாம் தீர்த்து வைக்கும் ஒரே ஈசன் !
கடகம்
வருங்காலத்தை நினைவில் கொண்டு புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாயின் தேவைகளை நிறைவேற்றுவதில் செலவும் சிறிது அலைச்சலும் ஏற்படும். சிக்கனமாக செலவழித்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள்.
சிம்மம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சூழ்ச்சிகளைத் தாண்டி, முன்னேறுவீர்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.
கன்னி
தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. அரசாங்க வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெற்றி பெறும் நாள்.
youtube
துலாம்
மகிழ்ச்சி தரும் நாளாக இருக்கும். கணவன், மனைவிக்குள் அன்பும், ஆதரவும் அதிகரிக்கும். இதுவரை இருந்த மோதல்கள் விலகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும்.மாலையில் குடும்பத்துடன் விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். அதிகாரிகளின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். முன்னேற்றம் பெறும் நாள்.
மேலும் படிக்க – நம் வம்சத்தை செழிக்க செய்யும் அண்ணாமலை தீபம் ! சிறப்புகளும் பலன்களும் !
விருச்சிகம்
இன்று காரியங்கள் முடிவதில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். ராசிக்குள் சந்திரன் இருப்பதால். ஓய்வெடுக்கக்கூட முடியாத படி வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாகச் செல்லவும். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பணிச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்கள் உதவி செய்வார்கள். ஏவல் அறிந்துசெயல்பட வேண்டிய நாள்.
தனுசு
அதிர்ஷ்டகரமான நாள். எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். உடன் பிறந்தவர்களால், அலைச்சல், வீண் செலவுகள் வந்து போகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். போராடி வெல்லும் நாள்.
மகரம்
உங்களுக்கு கிடைக்கும் சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு பெருகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு ஏற்படும். தந்தையுடன் இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி, தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சாதிக்கும் நாள்.
கும்பம்
இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் பேசும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர் களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். காரிய சாதனை செய்யும் நாள்.
மீனம்
புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது. கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படுவீர்கள். இன்று எந்த விஷயத்திலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம். மற்றவர்கள் விவாதம் செய்ய முற்பட்டால் விலகிச் சென்றுவிடவும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிப்பதால் சோர்வாகக் காணப்படுவீர்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.
மேலும் படிக்க – வெள்ளிக்கிழமை சகல ஐஸ்வர்யங்களும் உங்கள் வீடு தேடி வர இந்த முறையில் விளக்கேற்றுங்கள் !
#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!